Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று நம் புதிரில் ஒரு சிறு புதுமை முயற்சி. எப்போதும் போல, நீங்கள் ஆரவத்துடன் பங்கேற்பீர்கள் என்றே நம்புகிறேன்.

சென்ற மாதம் வேகமாக சென்றதால் ஜார்ஜியா காவல்துறையினர் எனக்கு டிக்கெட் கொடுத்தார்கள். இன்று கோர்ட்டுக்கு போய் ஜட்ஜய்யா முன்னாடி வணக்கம் வச்சுட்டு மொய் அழுதுட்டு வந்தேன். ஆனா, போன மாசம் என் மகள் கேட்டாள், அப்பா, ஜட்ஜ் நல்லவரா, கெட்டவரா? அதுக்கு நான் சொன்னென், கேள்வி சரியாடா குட்டி? ஜட்ஜ் நல்லவரா கெட்டவராங்கறத விட, உங்கப்பா செஞ்சது தப்பா, சரியான்னு இல்ல இருக்கணும்? அவள் அதற்கு சிரித்து சரி செய்யப்பார்த்தாள் 🙂 பின்னர் அவள் மீண்டும் கேட்டாள், போலீஸ் அங்கிள் இல்லைன்னா, என்ன ஆகியிருக்கும் அப்பா?. அதற்கு நான் சொன்னேன், என்னை யாரும் பிடிச்சிருக்கமாட்டாங்க. அதற்கு அவள் கேட்டாள், அப்போ மட்டும் நீங்க வேகமா ஓட்டினது தப்பா இருக்காதா அப்பா? என்று போலீஸ் இல்லாவிட்டால் தவறாக என்னுடைய செயல் இருந்திருக்காது என்னும் ரீதியில் அவள் ஆழ சிந்திப்பதை உணர்ந்து, அவளின் கண்ணோட்டத்தில் இருந்த அந்த சந்தேகத்தை திருத்த முனைந்தேன். 🙂 அதற்கு நான் சொன்னேன், ஜட்ஜய்யா முன்னாடி போய் நிக்க வேண்டிய தப்பா இருந்திருக்காது குட்டி, ஆனா, தப்பு தப்பு தான். யாராவது பாத்தா தான், நாம் செய்யறது தப்புன்னு இல்ல. யாரும் பாக்காதப்போ கூட நாமளே நம்ம நடத்தைய சரி பாத்துக்கணும். யாரும் பாக்காதப்போ நாம தப்பு செஞ்சாலும் அது தப்பு தாம்மா. அதுக்கு பேர் தான் ethicsனு சொன்னேன். ஒரு விதமாக பெருமூச்சு விட்டாள். 🙂


இதென்னடான்னு யோசிக்கறீங்களா? காரணம் இருக்கு. கேளுங்க.

இந்த புத்தகம் படிச்சிருக்கீங்களா?

Willpower

அதாவது, நம்ம #365RajaQuiz ஒரு honor-systemல நடக்குது. இது வரைக்கும் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடந்துட்டு வந்திருக்கு. கடைசி வரைக்கும் நடக்கும்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு விஷப்பரீட்சையும் இன்னிக்கு இருக்கு.

அதுக்கு முன்னாடி, 5/365க்கு ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடுங்க 🙂

After 230 days, I am giving the voice-clue in 235/365 with a sincere request 🙂 !

This is a favorite song of mine, since childhood, where, despite the musical interludes of Maestro Ilaiyaraaja, the impeccable singing of our beloved Malaysia Vasudevan Annen clearly bowled me over 🙂 சும்மா என்னமா பாடி அசத்தியிருப்பார். அடேங்கப்பா! காதல் ரசம் சும்மா பசிப்பிக் கடல் அளவுக்கு ஆழமா கொட்டியிருப்பார். அந்த சரணத்துல அவர் கொட்டுற காதல் ரசத்துக்கு ஈடு வேற எதுவுமே இல்லை. May be, ஆயிரம் மலர்களேல சரணத்துல entry கொடுக்கும் அவருடைய ததும்பும் காதல் ரசம் தான் கிட்ட வரமுடியும். இந்த பாட்டை, அதுவும், இந்த வரிகளை நான் எப்ப கேட்டாலும், அன்னிக்கு அதுல இருந்து நகரவே முடியாது. இந்த பாட்டும் நமக்கு கோவை அகில இந்திய வானொலி தான் உபயம்.

முதலில் BGM பாத்துடுங்க.

இதுக்கு இன்னும் பதில் தெரியலைன்னா, இதோ மலேசியா அண்ணன் குரலில் பாடலின் சில வரிகள்:

The litmus-test today is, PLEASE see if you can resist your temptation from Googling the lyrics to get the answer. I am boldly challenging you to see your willpower to resist Googling the lyrical lines. And then share your experience of how you felt about it. Try to find the answer, WITHOUT Googling the verse.

Malaysia Vasudevan

மேல நான் காட்டியிருந்த புத்தகத்துல Willpower பத்தி நிறைய சொல்லியிருப்பாங்க. முடிஞ்சா படிச்சுப் பாருங்க. நான் முழுக்க படிச்சதில்ல. ஆனா, கொஞ்சம் படிச்சதுல வச்சு சொல்றேன். அது மாதிரி, இன்னிக்கு you are tempted. I know it is tough to resist. So, give it a shot 🙂 Test yourself.

In today’s test, as it always is the case, you are your own Judge 🙂 There is a lifeline clue as usual too 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

When the Director approached M.S Viswanathan, he referred Maestro Ilaiyaraaja to score for this movie as it involved a subject that was too dear for Isaignani Ilaiyaraaja. Maestro Ilaiyaraaja himself prefers to sing one song from this movie, almost always 🙂 Besides, a respectable hero of this song will be appearing in a brief, that will remind you a Tweet from @NChokkan

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Seenaththu Pattumeni (சீனத்து பட்டுமேனி) from Thaai Mookambigai (தாய் மூகாம்பிகை) (1982)