Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

புது வாரம் புலரும் இன்றைய நாளில் அசத்தலாக ஒரு பாடல் வேண்டாமா? நம் அன்பு மலேசியா வாசுதேவன் அண்ணன், அடித்துத் தூள் கிளப்பிய அன்றைய ஹிட்படத்தின், அம்சமான ஹிட் பாடலைக் கொடுத்து ஆரம்பித்து வைக்கிறேன். அண்ணன் இல்லையே என்ற ஆதங்கம் ஒவ்வொரு நாளும் நெஞ்சில் வடுவாக இருந்தாலும், அவரின் இம்மாதிரியான அசத்தலான பாடல்களும், அவரின் புன்னகையுமே நம் மனதுக்கு நல்ல ஒத்தடம் 🙂

Malaysia Vasudevan

மலேசியா அண்ணேன் பாடிய இந்த பாட்டுக்கு, செம fan நான். இசையைத் தாண்டி, இவர் சரணத்தில் பாடியிருக்கும் ஸ்டைல், சும்மா சொல்லக்கூடாதுங்க. கேட்டுட்டு சொல்லுங்க 🙂 அதனால தான், வேற ஒரு அருமையான மெலடி பாடல் இந்த படத்துல இருந்தாலும் இதைக் கொடுக்கறேன். ஆனா, அந்த மென்மையான மெலடி பாடலைக் கேட்டால், அன்றைய நாள் முழுவதும், அந்தப் பாடலில் இருந்து வெளியே வரமுடியாது. அந்தப் பாடலுக்கு இரு வர்ஷன்கள் உண்டு 🙂 இசைஞானி இளையராஜாவின் வர்ஷனும் அதில் அடங்கும். அந்த மெலடி பாடலின் தொடக்க இசை,எல்லாரையும் mesmerize செய்துவிடும்.

இன்றைய க்ளூவை முதலில் பார்த்துடலாம். சரியா? இதோ.

Today’s song is a guitar-treat! Enjoy 🙂 Noise-removed, no tempo altered. Online version is horrible and so you are forewarned 🙂

என்ன? ஏதோ கேட்ட டிஸ்கோ அதிரடி பாடல் மாதிரி இருக்கா? அப்படி என்றால், இந்த பாடல் நினைவுக்கு வந்திருக்குமே? 🙂

பாட்டு இங்கே ரப்பப்பா பாடல் இசைக்கப்படாத College Musical Competitions சத்தியமாக தமிழகத்தில் 1990sல் நடக்கவில்லை என்பதை, இங்கே நினைவுபடுத்தியாக வேண்டும். அந்த அருமையான பாடலிலும், இசைஞானி இளையராஜா, நம் அன்பு அண்ணனைத் தான் களம் இறக்கி தூள் கிளப்பியிருப்பார். அமெரிக்காவில் பிறந்திருந்தால், நம்ம அண்ணன் மலேசியா தான் மைக்கேல் ஜாக்ஸன் 😉 பாட்டு இங்கே ரப்பப்பா is one of the best crooned songs of all-times in Tamil Film Music, I should say. It was way too stylish and slick. Very nuanced and complex in its bass-guitar and lead guitars amid the percussion arrangements. Maestro Ilaiyaraaja would have made Malaysia Vasudevan sing in a totally offbeat, ingenious way, wherein he sings so casually in a light-hearted manner to add more gravitas to the situation that warranted it, while Maestro taking care of the eeriness of the situation in his orchestration. Absolutely brilliant song! இல்லையா? 🙂

ஆக, பாட்டு இங்கே ரப்பப்பா ஒன்னும் இன்றைய க்ளூ இல்லைன்னு தெரிஞ்சாச்சு. இல்லையா?

சரி. அப்போ எதுக்கு இதைப்பத்தி பேச்சு. அதானே?

இருக்கு.

பாட்டு இங்கே ரப்பப்பா பாடல் வருவதற்கு முன்னர், இசைஞானி முயன்ற experiment தான் இன்றைக்கு வரும் க்ளூ. I am pretty sure that Maestro wanted to attempt a strong disco number with Malaysia Vasudevan, almost in a very similar setup where the genre is similar too! 😉 The only difference is, unlike பாட்டு இங்கே ரப்பப்பா, where Isaignani Ilaiyaraaja would have made Malaysia Vasudevan sing softly, in today’s clue, he would have made him not hold back on his original voice rendition.

செம பாட்டு. இசையைக் கேட்டபோதே முடிவுக்கு வந்திருப்பீர்கள். பூவிழி வாசலிலே போல பின்னியெடுத்த படம் தான் இன்றைக்கு வருவது. படத்தின் முழு களம் ஊட்டியை ஒட்டி வரும். அந்தக் காலத்தில் நீலகிரியில் பயணிகளை ஏற்றிச் செல்ல தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டன. அப்படி இருந்த ஒரே பேருந்து EMS Transport என்று நினைவு. அந்த பேருந்து கோவை -> ஊட்டி சென்று வரும். பின்னர், அரசின் தடையால், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த தனியார் பேருந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர்-ஊட்டி செல்லும் சாலையில் மூன்றாம் மற்றும் நான்காம் கொண்டை ஊசிவளைவுகளுக்குள் இருக்கும் பர்லியாறு பேருந்து நிறுத்தத்தில் (அந்தக் காலத்தில், அனைத்து வாகனங்களும் radiator சூடேறாமல் சற்று இளைப்பாறிவிட்டு, பயணத்தைத் தொடர இருந்த சாலையோர ஊர் தான் பர்லியாறு. அரசின் ஒரு சிறு பூங்கா கூட உண்டு. இன்றும் பார்க்கலாம் 🙂), நின்றுகொண்டிருக்க, ஹீரோ, வில்லன்களை புரட்டி, புரட்டி எடுப்பதாக வந்த சில காட்சிகள் மட்டும் என் நினைவில் உள்ளது. இந்தப் படத்தை, தியேட்டரில் சிறுவனாக பாரத்ததற்குப் பின், இன்று வரை பார்க்கவில்லை. சும்மா, எனக்கே ஒரு noteஆக இருக்கட்டுமே என்று இதை இங்கு பதிவு செய்கிறேன். அதை விடுத்து, நீலகிரி, அரசு போக்குவரத்து கழகம் என்று அன்றைய காலத்து சர்ச்சைகளை, செய்தித்தாள் enthusiasts(news-junkies :)) படித்து follow செய்து வந்திருந்தால், இந்த சிறு noteகூட additional clueவாக அமையும்.

ரொம்ப சுலபமான பாடல் தான். பின்னி படல் எடுத்தது.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song was tuned for Maestro Ilaiyaraaja’s friend and director from Coimbatore. Lyricist for this flick number is Maestro’s own brother Gangai Amaran.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Dance Paapa Dance Paapa (டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா) from Vidinjaa Kalyanam (விடிஞ்சா கல்யாணம்) (1985)

Advertisements