Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

நேற்று வந்த பாடலுக்கு, பதில் பதிக்கப்படும்போது, நம் @maestrosworld விஜய்யின் பின்னூட்டத்தைத் தவறாமல் படியுங்கள். அருமையான சங்கதிகளை நம்ம @Thachimammu மாதிரி சொல்லியிருப்பார். சும்மா, அப்படியான பாட்டு தானேன்னு விட முடியாதுன்னு நான் சொன்னதுக்கு மேல, நிறைய சங்கதிகளை தெளிவா சொல்லியிருப்பார். நன்றி, விஜய்.

ஆக, நேற்றும் bass guitarsன் ஆளுமை மற்றும், பல இசைக்கருவிகளின் ஆளுமையில் வந்த பாடலைப் பார்த்தோம்.

இன்றும் அருமையான பாடல் தான். இந்த படமும் ஆகா, ஓகோ ஹிட். படத்தில் வந்த பாடல்களும் செம ஹிட். ஒரே விசனம் என்னன்னா, மத்த பாட்டுக செம ஹிட்டாக – குறிப்பா அதுல 3 பாட்டு, உங்கூரு எங்கூரு ஹிட் இல்ல, எல்லா ஊர் ஹிட் :). அதுல இந்த பாட்டு கொஞ்சம் கம்மியாத் தான் கோவை வானொலியில வந்துது. இந்த பாட்டுக்கு பின்னாடி ஒரு சின்ன personal கதை இருக்கு. 🙂

அந்த காலத்து பாட்டுக, கேட்டு மனசுல பதிஞ்சதுக்கு முழு காரணம் அகில இந்திய கோவை, திருச்சி, சென்னை மற்றும் இலங்கை வானொலி தாங்க. #365RajaQuizல் வரும் சில ஆதி காலத்து பாடல்கள் எல்லாமுமே, அங்கு கேட்டு பழகியவை தான்! சிறு வயதில் கேட்டு பழகியவற்றை, பின்னாட்களில் கல்லூரியில் படிக்க ஆரம்பித்தபோது, ஒலி நாடாக்களில் பதிவு செய்யத் துவங்கினேன். ஏனென்றால் 80களில் இருந்த பல ஒலி நாடாக்கள், காலத்தின் கோலத்தால் சிதைய ஆரம்பித்திருந்தன. Anyway, I just want to clarify once and for all about those days involving Radio and its impact on that generation 🙂

விவித பாரதி வர்த்தகம் போன்ற கலப்படம் இல்லாமல், வானொலியில் பாடல்கள் கேட்டு மகிழ்ந்த காலம் அது. அதுவும், இலங்கை வானொலியில் இருந்து personalized announcements ஓடு பாடல் அறிவிப்புகள், தாத்தா பாட்டி, பேரன் பேத்தி என்றெல்லாம் வரும் பாடல்களை, அவ்வளவு உற்சாகத்தோடு கேட்போம். 80களின் நடுவில் தான், வர்த்தக ஒலிபரப்பு இல்லாத நேரத்திலும், கோவை, திருச்சி போன்ற நிலையங்களில் மெதுவாக விளம்பரங்கள் எட்டிப்பார்க்கத் துவங்கியது. என்றாலும், there was no intrusion or distraction 🙂 கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அந்த காலத்துல, சென்னைக்கு வெளியே தொலைக்காட்சி கூட கிடையாது. இந்திரா காந்தி அம்மையாரின் தொலைநோக்கு பார்வையால் Low-Power Transmitterகள் கோவை போன்ற சிறு நகரங்களில், டில்லி தொலைக்காட்சி ஒளிபரப்பை மட்டும் செய்து வந்தன. அதுவும், இந்த படம் வெளிவந்தபோதெல்லாம், LPT கூட இல்லை. (ஆல்ரைட், இதுவும் க்ளூ தான். வச்சுக்கோங்க ;))

இந்தித் தொ(ல்)லைக்காட்சியில் Chitramaala என்று ஒரு நிகழ்ச்சி, திங்கள் இரவு 10 மணி போல வரும். அரை மணி நேர நிகழ்ச்சியில், சில மொழிப் பாடல்கள் வரும். மாதத்துக்கு ஒரு முறையாவது தமிழ்ப் பாடல் வந்தால் பெருசு! ஆனா வராது. இது தான் நெலமை. அப்படி இருந்த காலத்துல, வானொலியில ஒரு பாட்டை கேக்கறதுன்னா, அது மாதிரி ஒரு சந்தோஷம் இருக்கவே முடியாது. இந்த பாட்டு வருமா, அந்த பாட்டு வருமான்னு, ஒரு ஆச்சரியம் கலந்த உற்சாகத்தில், ஒவ்வொரு பாட்டையும் கேட்டுகிட்டு இருப்போம். அங்கே multitasking என்னும் புற்று நோய்க்கு இடமே இல்லை. தொலைபேசி இல்லை, தொலைக்காட்சி இல்லை, இருந்த பத்திரிகை, நாளேடு என்று எதையும் பாட்டு கேட்கும்போது புரட்டியது இல்லை. There never was any protracted power-cut to interrupt programming 🙂 Rarely, power-cuts were there during Summer 🙂 Life was just simple 🙂 All India Radio, Coimbatore is that “Google Glass” that gives some terra firma rooting to those simple pleasures of the yonder. அவ்வளவே. 🙂

அதிலும் இன்றைய பாடல், ஒரு முறையோ, இரு முறையோ தான் வானொலியில் கேட்டதாக ஞாபகம். அதை விடுத்து, இந்த படத்தின் மற்ற பாடல்களை மட்டுமே அவர்கள் ஒலிபரப்ப, என் அப்பாவிடம் கெஞ்சி, கூத்தாடி ஒரு டில்லி டேப் ரிக்கார்டர் வாங்கி, ஒலி நாடாவில் இந்த பாடல் + இந்த படத்தின் பிற பாடல்களை கேட்டது, மறக்கவே முடியாது. வானொலியைத் தாண்டி, நம்மாலும் கூட, நாம் நினைத்த பாடல்களை தேர்வு செய்து rewind, forward எல்லாம் செய்ய முடியும், குரல்களையும், பாடல்களையும் record செய்ய முடியும் என்று உணர்ந்த அந்த தருணங்களை மறக்கவே முடியாது. 🙂

So, today’s song, takes me back to that instant, where I experienced my first joy of a tape-recorder. We had less then, but, enjoyed that “less” much more, with lots of joy. அவ்வளவு தான் 🙂

பாட்டுக்கு வருவோம். ஆரம்ப preludeல வரும் அந்த நையாண்டி வயலின் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த violins மற்றும் bass-guitars பாடலின் இசை முழுக்க வருவதை நன்கு கூர்ந்து கவனியுங்கள். அதிலும், இந்த முழு இசைக் கோர்வையை, தயவு செய்து woofers அல்லது நல்ல headphonesல் கேட்டு மகிழுங்கள். இசைஞானியின் stereo experiments இதில் நீங்கள் நன்கு ரசிக்கலாம். கொட்டாங்குச்சி வாத்தியம் போல வயலின் ஆரம்பமாகும்.

பின்னர் முதல் interludeல் பாருங்கள், எப்படி வேகமாக complex medley of instrumentsஆல் அதகளப்படுகிறது என்று. ஆனால், அவை எல்லாம் ஒரு பக்கம் இசைத்துக்கொண்டிருக்க, silentஆக backgroundல் வரும் bass-guitars பார்த்தீர்களா? செம! அடி தூள்.

இரண்டாம் BGMல் இசைஞானியின் குறும்பு இசை பல notches எகிறிக்கொண்டு போகும். அங்கும் கொட்டாங்குச்சி வாத்தியம் போல வரும் violins ஒரு பக்கம் என்றாலும், முடிவுக்கு கொண்டு வரும் flutesஐ கவனியுங்கள்.

இதுவெல்லாம் ஒரு ஹிட்டா என்று கேட்பீர்களானால், நான் என்ன சொல்ல? ஆமாம் என்பதைத் தவிர என்ன சொல்ல முடியும்? You can verify though. எப்படி? இப்படி. நல்லா LP Disc கடை வச்சிருந்தவங்க, அல்லது அந்த காலத்துல பேக்கரி கடைல நேரத்த போக்கினவங்க, அல்லது transistor or radio enthusiast, அல்லது mofussil busesல பயணம் மேற்கொண்டவர்கள் என்று, சிலரைப் பிடித்துக் கேளுங்கள். அவர்கள் சொல்லலாம்.

நினைவில் கொள்ளுங்கள். As a society, we were pretty closed in those days. Our joys, pleasures in life were all very simple and within a small square. So, the concept of popularity is nothing close to what one may be able to relate to in this day and age. And it was also the time of state-controlled media. Which means, it was easy to assess a relative popularity, based on what occupied the radio and TV waves. I agree, it will be very difficult to relate to all of that in a day and age, when every Tom, Dick, and Harry has a Radio and TV station, besides a gamut of technologies and social media.

So, place things in the context and you can start to see things somewhat in a different light 🙂

Good luck and have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

One of the popular directors debuted in this movie, which was unique for its title as well as for an army of lyricists doing the songs: Vaalee, Gangai Amaran, Vairamuthu, N. Kamaraasan, Panju Arunachalam etc were some of the lyricists in a single album.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Potta Pullai (பொட்ட புள்ள) from Kozhi Koovuthu (கோழி கூவுது ) (1982)

Advertisements