Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

நிறைய பேர் மைல்கற்களை தொடுகின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. இதோ, இதைத் தான் சொல்கிறேன்:

வாழ்த்துகள் பிரசன்னா. முன்னே இந்த மைல்கல்லை அடைந்தவர்களுக்கும், இனி அடையப்போகின்றவர்களுக்கும் என் வாழ்த்துகள்.


நேற்று உண்மையிலேயே lifeline clue சுலபமாக இருந்ததாக நிறைய பேர் சொன்னீர்கள். நன்றி. அது இல்லாமல் இருந்திருந்தால், கண்டுபிடிக்க கடினமாக இருந்திருக்கும் என்று சொன்னீர்கள். சரி தான்.

ஆனால் இன்று வருவது tie-breaker. அருமையான பாடல். இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே ஹிட் தான். இந்த பாட்டையும் நான் வானொலியில் தான் கேட்டு பழகியது என்றாலும், இதில் இன்னொரு அருமையான டூயட் பாடல் உண்டு. அந்த பாட்டு புலவர் புலமைபித்தன் எழுதியது. In fact, அந்த பாட்டு தான் வானொலியில் அடிக்கடி அதிகமாக கேட்ட நினைவு. அவ்வளவு இனிமையாக இருக்கும் அந்த பாட்டு. அது டூயட்டுல இனிமைன்னா, இன்னிக்கு வரும் க்ளூ சோலோல இனிமை🙂

இருந்தாலும், அந்த பாட்டு இன்னிக்கு புதிர்ல இல்ல. இந்த படத்து பாடல்களை நான் இது வரை தராமல் இருந்ததற்கு காரணமே, எதைத் தருவது என்ற dilemmaவால் தான். இருந்தும் இன்று களம் இறக்கியிருக்கும் பாடலை, நீங்கள் ஒரு முறையாவது கேட்டிருந்தால், சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். இல்லை என்றால், தேடி தான் கண்டுபிடிக்கவேண்டும். அது சரி, இன்றைய பாடலை இயற்றியது யார்? அது தான் இன்றைய lifeline க்ளூவே. பார்ப்போம். அவர் இன்று உதவிக்கு வருகிறாரா, இல்லையா என்று. மேலும் ஒரு பாடலாசிரியரையும் குறிப்பிட்டுள்ளதை கவனிக்கவும்.🙂

நேற்றைய பாடலில் ஆண் கோரஸ் வந்தது. என்னடா இது, எங்க கோரஸ் எங்கன்னு, யாரும் கோரஸா கிளம்பிடக்கூடாதுன்னு தான், அருமையான கோரஸ் பாப்பாக்களின் பாடல் இன்றைக்கு. எப்படி பாருங்க….balancing act🙂 இந்த இசைத்துணுக்கில் வரும் percussion beatஆகட்டும், bass-guitars ஆகட்டும், கூடவே வரும் stylish saxஆகட்டும், இந்தக் குறிப்பிட்ட இசைத்துணுக்கை மறக்கவேவிடாது.

இந்த பாட்ட பாடினவரு இருக்காரே…ஆஹா…ஒரே வார்த்தைல சொல்லணும்னா, பின்னி எடுத்திருப்பாரு🙂

கேட்டுவிட்டு சொல்லுங்கள். சரியா?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Lyricist for this song is Maestro Ilaiyaraaja’s younger brother Gangai Amaran.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Maalai Vandhathum (மாலை வந்ததும்) from Urimai (உரிமை) (1985)