Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்றைய பாடலைப் பற்றி, அதிகம் வெளிப்படையாக பேசாமல், பாடல் வரிகளையும், பாடலின் டியூனையும் சிலாகித்து விவாதித்ததை இப்போது தான் பார்த்தேன். நல்லது.

நேற்றைய பாடலுக்கு சற்றும் குறைந்தது இல்லை, இந்த பாட்டு. அடியோ அடி, இடியோ இடி தான். பாட்டோட ஆரம்பமே, சும்ம பட்டைய கிளப்புற மாதிரி வயலின்களோடு ஆரம்பிக்கும். இந்த பாட்டுல உள்ள அருமையான இடையிசை, அந்த குறும்புத்தனத்துக்காகவே எனக்கு ரொம்ப பிடிக்கும். தொலைதூர பயணத்தில், இந்த பாட்டை கேட்டுக்க்கொண்டு சர்ரென்று பறக்கவும், உறங்காமல் பார்த்து ஓட்டவும் இந்தப் பாடல், மிகவும் ஒத்தாசை புரியும். இசையில் வரும் வயலின் நோட்ஸை கிண்டல் செய்து ஹம் செய்யும் அந்த ஆண் குரலைக் கேட்டால், செம சிரிப்பாக இருக்கும். ஆனால், இந்த இடையிசையிலேயே, அந்த வயலின் நுழையும் இடம் தான் எனக்கு அலாதி பிரியம்.

ஆரம்பத்தில் பாருங்கள். சற்று ஒலி அதிகம் பொருந்திய percussion beatல், நிதானமாகவும், மென்மையாகவும் ஜலதரங்கம் போன்று எதோ ஒலிகள் எல்லாம் நிதானமாக வர, வயலின் நுழைந்த மாத்திரத்தில், அதிரடி வேகத்தில் இசைத்துணுக்கு செல்லும்.

அருமையான பாட்டு. இந்த பாட்டுல எனக்கு சரணத்தோட ஆரம்பம் ரொம்ப பிடிக்கும். அவ்வளவு அனுவபித்து பாடியிருப்பாங்க பாடகர்கள் இருவரும்.

என்ன,கண்டுபிடிச்சுடலாம் தானே? All the best🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie had a song for which Maestro Ilaiyaraaja did not use any music instrument for that entire song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Muthu Muthu (மு்த்து முத்து பூங்கொடி) from Maaya Bazaar (1995) (மாயா பஜார் (1995)) (1995)