Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

நேற்று Daylight Saving Time மாற்றத்தினால், WordPress என்னுடைய scheduled timeஐ Standard Time என்று எடுத்துக்கொண்டு, தன்னுடைய தவறான conversionஆல், இரண்டு மணி நேரம் தாமதமாக பதித்தது. அதற்காக வருந்துகிறேன். இன்றிலிருந்து பிரச்சினை இருக்காது. ஏனென்றால், நான் schedule செய்வது local timeல் என்று அவர்கள் இனி எடுத்துக்கொள்வார்கள். இம்மாதிரி பிரச்சினைகள் சர்வசாதாரணம். #365RajaQuiz சார்பாக வெள்ளை மாளிகையில் மனுவும் போட்டாயிற்று. சந்தோஷமா?


நேற்று வந்த BGM பின்னணி இசைக்கு, இப்படி ஒரு கீச்சு வந்தது. என்னவென்று சொல்வதம்மா!! ஹூம், நல்லா ரூம் போட்டு யோசிக்கறாங்க போலிருக்கு. LOL 🙂

கவலைப்படாதீங்க தேவா 😉 நீங்க கேட்ட பிறகு தான், அட ஆமால்லன்னு யோசிச்சேன். ஆனா என்ன பண்ணட்டும்! பின்னணி இசையும், என் மனதில் எது ஒட்டியதோ (அல்லது எட்டியதோ(?)), அதைத் தான் கொடுக்கறேன். இது தான் ஒட்டுச்சுன்னு நான் சொன்னா, ஏன்னு நீங்க கேப்பீங்க…ரம்யமான இசை எனக்கு பிடிக்கும் என்பதால் இருக்குமோ? வுடு ஜூட் 😉

அதே பின்னணி இசைக்கு, நம் தளத்தில் தினமும் இசைஞானியின் இசைத்துணுக்குகளை ரசிக்கும், தமிழ் தெரியாத அமெரிக்க ரசிகரான எரிக்கின் கீச்சையும் பாருங்கள் 🙂


புது வாரத்தை சூட்டோடு ஆரம்பிப்போமா?

49/365ல நம்ம @RagavanG ஒரு பட்டாசைக் கிளப்பினார். அதை ஒரு லுக் விட்டுட்டு வந்துடுங்க. அடிப்படையில் அவர் கேட்டது இது தான்.

எனக்கு ரொம்பநாளா இந்தச் சந்தேகம் இருந்துக்கிட்டேயிருக்கு. அண்ணனும் தங்கச்சியும் சேந்து டூயட் பாட்டு பாட முடியுமா? டூயட்டுகள விடுங்க… இந்த மாதிரிப் பாட்டெல்லாம் அண்ணனும் தங்கச்சியும் பாடுற பாட்டா? ஏமி கொடுமரா சாமி! அவங்களை எப்படி பாட வெச்சார் இளையராஜா? யுவனையும் பவதாரிணியையும் ஒரு டூயட் பாட்டு பாட வெப்பாரா?

அது சரி, 49/365க்கும் 226/365க்கும் என்ன சம்பந்தம்? அது தானே? அதை கண்டுபிடிக்கப்போகும் நீங்கள், என்னிடம் அதை கேட்டால் எப்படி? 🙂


இசைஞானி இளையராஜாவின் bass guitar interludesக்கு, நம் #365RajaQuizல், பலத்த ஆரவாரம் உண்டு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஆரம்ப காலத்தில், அவர் experimental innovationsஆக இதே bass and lead guitarsல் இசைத்த பாடல்களை கேட்டிருக்கின்றீர்களா? கேட்டிருந்தால் மகிழ்ச்சி. கேட்காதவர்கள், குறிப்பாக இன்றைய யூத்துகளுக்கு, இதை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு அன்றைய யூத்தான எமக்கு இருப்பதால் (??), இன்று இதை களம் இறக்குகின்றேன்.

ஒன்றும் இல்லை. இந்த இசைத்துணுக்கையே கவனியுங்களேன். மெல்லிசை மன்னர் காலத்து சங்கதிகள் சற்று தூக்கலாக இருக்கும். அதாவது accordionல் இருந்து, mild percussionல் வரையாகட்டும், மிக மிக அருமையான lead guitar and bass guitarஆக இருக்கட்டும், அவ்வளவு அழகாக இசையை கோத்திருப்பார் இசைஞானி. இசையையும் தாண்டி, இந்த பாட்டில் எனக்கு மிகவும் பிடித்தது, சரணத்தில் வரும் மெலடி தான். அவ்வளவு அருமையாக இருக்கும். சரணத்தின் இரண்டாம் பாதி, அவ்வளவு அழகாக மேல் நோட்களில் செல்லும் இடம், மிகவும் அபாரமாக இருக்கும்.

மிக பிரபலமான டூயட் என்பதால், பிராப்ளம் இருக்கக்கூடாது என்றே நினைக்கின்றேன். அப்படி ஏதேனும் இருந்தால், உங்கள் உயிர்காக்கும் (அல்லது எடுக்கும்) நண்பன் தான் lifeline clueவடிவில் இருக்கின்றானே, அங்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

சரியா? பார்ப்போம். விடு ஜூட் 🙂

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue is noise-removed minimally. Some salt-and-pepper noise will be peppered. Regretted.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song was sung by a brother-sister duo.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Maalai Ilam Manathil (மாலை இளம் மனதில்) from Aval Oru Pachai Kuzhanthai (அவள் ஒரு பச்சை குழந்தை) (1978)

Advertisements