Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

225வது சிறப்பு தின புதிர் இது 🙂

எத்துணையோ நடிகர்களுக்கு அவர்களின் மைல்கல் திரைப்படங்கள் — குறிப்பாக 100வது படம் — காலை வாருவது சகஜம். இருந்தாலும், அந்த சமயத்தில் இந்த நடிகருக்கு செம மச்சம். இந்த படம் அப்படி ஒரு வெற்றி. படத்தின் தலைப்பில், சில தொல்லைகள் வந்தது. இருந்தும் சட்ட சிக்கல்களில் அவ்வளவாக சிக்காமல் படம் வெளியானது. ஆனால், அதே சமயம், படம் வெளுத்துவாங்கிக்கொண்டு ஓடியபோது, நடந்த ஒரு மாபெரும் நிகழ்வு, படத்தின் ஓட்டத்தை அந்த நிகழ்வுக்கு பின் சற்றே தணித்தது. இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, அங்கும் செமையாக ஓடியது.

படத்தின் ஆரம்பத்தில் வரும் பின்னணி இசை தான் இது. ஊட்டியே பார்த்து சற்று அலுப்பு தட்டியிருக்கலாம். அதனால் வால்பாறை, டாப்-ஸ்லிப் பக்கம் போவோம். அங்கே தான் இது படமாக்கப்பட்டதாக நினைவு. பாலத்தின் மீது அருமையாக சாரல் தெறிக்கும் நீர்வீழ்ச்சி. அதில் சர்ரென்று பறக்கும் அரசு ஜீப்புகள், என்று இந்த படத்தின் லொகேஷன் மட்டுமல்ல, கதையும் வேறுபட்டே இருந்தது.

அவனோ தமிழக அரசு ஊழியன். காட்டுக்குள் அருமையான கோதையின் மீது காதல் கொள்கிறான். இருவருமே காதலில் எல்லையை மீறும் அந்த காட்சிக்கு தான் நம்ம இசைஞானி இளையராஜா, இந்த அளவுக்கு, அளந்து, அளந்து, மெதுவா ஏதோ Chinese flute மாதிரியான இசைக்கருவியையும், bass-guitarஐயும் சேர்த்து, keyboardsஐயும் group violinsஐயும் சேர்த்து அடிச்சிருக்கார்.

இந்த பின்னணி இசையை மறக்கவே முடியாது. இந்த பின்னணி இசை முடியும் போது, அவள் அழுவாள் — தப்பு செஞ்சுட்டேனேன்னு. அவன், உன்னை கைவிட மாட்டேன்னு உறுதிமொழி எல்லாம் தருவான்.

அது சரி, இது மாதிரி இன்னிக்கு நடந்தா, இந்த பய நெலமை என்ன ஆகும்? 2012 டிசம்பர், டில்லியில் நடந்த கொடுமையான சம்பவத்தையடுத்து, கொண்டுவரப்பட்டுள்ள சட்ட மாற்றங்களின்படி, இந்த செயலுக்காக, டக்கால்டி பய, கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்பதை இங்கே சொல்லியே ஆகவேண்டும் :).

இருந்தாலும், அம்மாதிரியான சட்ட சிக்கல்ாம் இல்லாத காலத்தில் வந்த படம் என்பதால், அவனும் அவளும் காதல் ரசம் பருக, நமக்கோ இசைஞானி இளையராஜாவின் அற்புதமான பின்னணி இசையை பருகும் பாக்கியம் கிட்டியது 😉

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue is noise-removed using noise-reduction and noise-gate techniques. Noise-reduction may have removed excessive noise from the actual scene involving the water-falls. Dialogues are censored for the quiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

50% of the songs were written by Gangai Amaran and 50% by Piraisoodan. One of the leading heroes of today, came in this sequence that is given in today’s clue. One of the leading heroes, got part of this movie’s title as his own title. Such was the fame of this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Captain Prabhakaran (BGM) (கேப்டன் பிரபாகரன் (பின்னணி இசை)) from Captain Prabhakaran (BGM) (கேப்டன் பிரபாகரன் (பின்னணி இசை)) (1991)

Advertisements