Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்று மோசம் இல்லை. நிறைய பேரு பதில் சொல்லியிருக்கீங்க. பலரின் விருப்பத்துக்கு ஏற்ப 36 மணி நேர அவகாசம்னு இந்த சீசன்ல கொஞ்சம் மாறுதல் செஞ்சது, tieகளை அதிகம் உருவாக்கியிருக்குது. நிறைய பேர் பதில் சொல்லுவதில் தான் சுவையே. கண்டிப்பா. நம்புங்க. நானும் அந்த கட்சி தான். ஆனா, இது வெறும் வலைப்பதிவு அல்லவே. புதிர் போட்டி என்பதலால், அப்ப அப்ப கொஞ்சம் கவனிச்சு tieகளை உடைக்கவேண்டியுள்ளது. ஆனா, அப்படி உடைக்கவேண்டியதாக இருந்தாலும், பாடல்களில் எதையோ எடுத்தோம், கொடுத்தோம்னு இல்லை. சரியா? 🙂

ஒரு முறை @NChokkan கேட்டார். யாருமே பதில் சொல்லமுடியாத பாட்டுன்னு ஒன்னு இருக்க முடியுமான்னு. நான் சந்தேகம்னு சொன்னேன். Lifeline clue நிர்பந்தம் இல்லாமல் இருந்தால், அது சாத்தியம். அப்படி இல்லாத காரணத்தால தான் அப்படி சொன்னென்.

ஆனா, இன்னிக்கு களம் இறங்கும் பாடல் வேணும்னா, கொஞ்சம் அந்த categoryஐ தொடலாம். என்னை பொறுத்த வரை, இன்று வருவது தான் உள்ளதிலேயே toughest. This is purely my personal opinion, while your latitude may vary. காரணம் இது தான்.

  1. இதை நான் அகில இந்திய வானொலியிலோ, சிலோன் வானொலியிலோ கேட்டதே இல்லை :).
  2. இதை நான் என்னுடைய ஒலி நாடா collectionலும் பதிவு செய்ததும் இல்லை, கேள்விபட்டதும் இல்லை.
  3. அதிகம் iPod, iPhone, iPad, online என்று பாடல்களை கேட்காதவன் நான். இருந்தாலும், இணையத்தில் தான் சில மாதங்களுக்கு முன்னால் கேட்டேன். கேட்ட உடனேயே, என்னையும் மறந்து சொக்கிப்போய் சிலையான பாடல் இது. பாடியிருப்பவர் ஒரு காரணமாக இருக்கலாம் என்றாலும், இந்த பாட்டின் மெலடி, ஆரம்ப prelude (இன்றைய க்ளூ), சொல்லமுடியாத உணர்வுகளில் உறைய வைத்ததும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

பாத்தீங்களா? இப்ப என்ன செய்யலாம்? இந்த படத்தின் பாடல்கள் ஏன் வானொலியில் கேட்கமுடியலைன்னு ஒரே யோசனை. இந்த படம் வெளியானதா என்று கூட எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அதனால், இதை குறித்து சொல்லவும் முடியாமல், இசையை மட்டும் நம்பி களம் இறக்கியுள்ளேன்.

நடிக-நடிகையர், பாடலாசிரியர், டைரக்டர், பாடக-பாடகி என்று எல்லாம் சொல்லியாச்சு. என்றாலும் இன்னிக்கும் ஒரு நல்ல (??) lifeline clue தர்றேன். உங்க SQL திறமைய, முடிஞ்சா காட்டுங்க. Tie-breakerஐத் தாண்டி, இது ஒரு நல்ல பொக்கிஷம். இதை பாதுகாத்து, நல்ல கேக்கணும்னு ஒரு நல்ல ஆசையில தான் இறக்கிவுடறேன். திட்டாதீங்க. இசைஞானியின் தொடக்க இசை, உங்களை செமயா குளிரவைத்துவிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

இந்த இசையில் Oudh தான் ஆரம்பத்துல வருதுன்னு நெனக்கறேன் (Mediterranean வகை இசைக்கருவின்னு நம்ம Vijay (@MaestrosWorld) சொன்ன ஞாபகம்). அதில் இருந்து, bass-guitar and lead-guitar அருமையான சிம்பொனி வகை group-violinsக்குள் கொண்டு செல்லும் அந்த இடம், படுபயங்கர nostalgicஆக வருவது ஏன் என்று தெரியவில்லை. அதையடுத்து வரும் flute மற்றும் mild percussionஐ என்னவென்று சொல்வது! பல்லவியில் இருந்து வரும் அந்த தபேலாவும்…ஆகா..அருமையான பாடல் இது.

ஏன் அமுங்கியே இருந்தது என்பது தான், இது வரை எனக்கே புரியாத புதிராக உள்ளது. அதைவிட பெரிய புதிர்…how come கோவை வானொலியில் ஒரு முறை கூட கேட்ட ஞாபகம் இல்லை என்பது தான்.

முதன்முறையாக, இது மாதிரி இன்னும் எத்துணையோன்னு நானும் யோசிச்சு உக்காந்திருக்கேன். 🙂

இந்த பாட்டை எழுதியவர் கவிஞர் வைரமுத்துவாக இருக்கலாம். அது அவருக்கே ஞாபகம் இருக்குமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. 🙂

So, I will be very eager to hear, if this is the first time you are hearing this song. If not, please do indicate where you heard this song for the first time. I would like to learn more about this movie and the song and where you heard it 🙂

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue was noise-removed and noise-gate applied. Volume was maximized and tempo was NOT altered. Source was from online.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

A rare singer by name Manjula sang this song for Maestro Ilaiyaraaja, besides the other famous male singer.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaadhal Kili (காதல் கிளி) from Kalayanam Kacheri (கல்யாணம் கச்சேரி) (1986)

Advertisements