Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றும் #365RajaQuizல் ஊட்டி தான்.

ஆனால், இன்று நாயகனும் நாயகியும், ஊட்டியில் இருந்து சற்று கீழே இறங்கி, குன்னூரில் ஆட்டம் போட்டுவிட்டு, கோத்தகிரி Catherine Falls வழியாக ஊட்டிக்கு சென்று டூயட்டைத் தொடர்கின்றார்கள்.
Catherine Falls

குறிப்பாக இந்த பாடலின் ஆரம்ப காட்சிகள், குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் வழியில், அட்டடி, பெட்டட்டி, வண்டிச்சோலை அருகில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் காட்சிகளை அமைத்திருப்பார்கள். இந்த இடங்களுக்கு அருகில் தான் கோடநாடு எஸ்டேட் உள்ளது. அது யாருக்கு சொந்தம் என்றெல்லாம் நாம சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு இல்லை. இல்லையா? 😉

அப்பன்மார்களும், உறவினர்களும் இவர்கள் காதலை எதிர்க்க, நாயகனும் நாயகியும் வேண்டுமென்றே கடுப்பேத்தும் விதமாக டூயட் பாடல் வருவது கூடுதல் சிறப்பு. அதற்கேற்றவாறு சமூக நல்லிணக்க வரிகளை கவிஞர் எழுதியிருப்பார். பாடலின் சரணங்களில் இதைக் கேட்கலாம்.

பாடியிருக்கும் இருவரும், அருமையான பாடகர்கள். அதிலும், இதில் பாடும் ஆண் பாடகரின் இந்த பாடலை Playlistல் வைத்திருக்கவில்லை என்றால், அது போல ஒரு பாவம் வேறு எதுவும் இருக்காது 🙂

எனக்கு இந்த பாடல் பிடித்ததற்கு பல காரணங்கள் உண்டு. இந்த படம், முழுக்க முழுக்க குன்னூரில் எடுத்தார்கள். அவ்வமையம், அங்கிருந்த என் உறவினர் ஒருவரின் வீட்டில் தான் நாயகனோ நாயகியோ தங்கியிருக்கும் வீடு 🙂 வினோதமான titleஉடன் இப்படி ஒரு படம் வரப்போகிறது என்றெல்லாம் ஏக எதிர்ப்பார்ப்பு இருந்ததற்கு காரணம் இது தான். அந்த வீட்டைத் திரையில் பார்ப்பதற்காகவே இந்த படத்தை பார்த்தேன். சாதாரண, மிடில் கிளாஸ் வீடு தான். பெருசா ஒன்னும் இல்ல. படமும் ஆகா, ஓகோ எல்லாம் இல்ல 🙂

அதே போல, இந்த பாடல் எனக்கு வானொலியில் தான் முதன்முதலில் பரிச்சயம் ஆனது.

பாடல் ஆரம்பமே அருமையான orchestration. அனல் பறக்கும் Peppy melody duet, இந்த பாட்டு.

ஆரம்பமே, அருமையான group violins வர்ற, congo drumsல் பயணிக்கும் இசை, கோரஸ் பாப்பாக்களின் ஆஆஆஆஆஆவால், இன்னும் அழகாக பயணிக்கிறது. இடையில் மீட்டப்படும் guitar notesஉம் அருமை. முடிவில் வரும் fluteஉம் செம.

இந்த பாட்டு நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என்பதே என் எதிர்ப்பார்ப்பு. அதனாலேயே இதை வெள்ளியன்று தருகிறேன். நாளை, கோத்தகிரி மேடு ஏறவேண்டியிருக்கும். அதனால், இப்போதைக்கு இதை enjoy செய்யுங்கள் 🙂

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie fostered inter-religious amity and so this movie’s title will play a clever pun on a community’s dialect, together with the hero’s character name. Part of the lyricist’s name is the Tamil word for a costly ornamental metal (gold).

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Idhayame Naalum (இதயமே நாளும்) from Aduthaaththu Albert (அடுத்தாத்து ஆல்பர்ட்) (1985)

Advertisements