Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

At 25.161-second marker, a “ding” sound had crept in during my encoding as my desktop was updating some software. Usually, I am very careful, but, I sincerely regret this unwanted addition. Sorry. This interlude was noise-reduced twice, noise-gated once, and voice-maximized without altering the tempo.

OK, disclaimer over. Let’s move on to the clue 🙂

இன்றும் அருமையான பாடலோடு களம் காண்வோம் என்று வந்திருக்கிறேன். கண்டிப்ப இதையும் சுலபமா கண்டுபிடிச்சுடுவீங்கன்னு நம்புறேன்.

ஏன்?

இந்த படத்துல வர்ற இன்னொரு அருமையான டூயட் தான் எனக்கு இதை விடவும் பிடிக்கும். அந்த பாட்டு, செம fast, மிரட்டல் டூயட். வித்தியாசமாகவும் இருக்கும். இருந்தாலும், எத்துணை பேர் அதை கேட்டிருப்பீங்கன்னு ஒரு சின்ன கவலை(?). அதனால தான் இதை தேர்ந்தெடுத்தேன். இந்த பாட்டும் எனக்கு மிக மிக பிடிக்கும். அதனால், வருத்தம் எல்லாம் இல்லை. இந்த பாட்டை கண்டுபிடிச்சவங்க தவறாம “அந்த” பாட்டையும் கேட்டால் நான் மகிழ்வேன். அத்துணை அருமையான பாடலாக அது இருந்தும், அதை கொடுக்காமல், இதை கொடுத்த நம்பிக்கையில் தான் நீங்க கண்டுபிடிச்சுடுவீங்கன்னு அடிச்சு சொல்றேன். (ஆண்டவா, இது என்ன லாஜிக்குன்னு யோசிக்கறவங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் 😉 )

இல்லை, jokes aside, இந்த இடையிசை அந்த காலத்துல கொஞ்சம் பாப்புலர். அந்த காலத்து டிவி நிகழ்ச்சிகளின் ஜிங்கில்சாக இந்த இசைத்துணுக்கை நுழைத்ததை நான் அப்போது கண்டதுண்டு.

இந்த பாட்டின் மொத்த ஹீரோவே – bass-guitar தான். இந்த பிட்டையே கேளுங்களேன், டொய்ன் டொய்ன் டொயின்னு அது பாட்டுக்கு continuous-loopல் உறுமுவது மாதிரி, எவ்வளவு அழகா வருது பாருங்க 🙂

அது மட்டும் இல்ல. இந்த பாட்டும், ஊட்டி வரை உறவு தான். Yay!! ஊட்டி பாட்டுன்னா உங்களுக்கு அத்துபடின்னு எனக்கு தெரியாதா(??). அதே ஊட்டி தாவரவியல் பூங்காவில் படமாக்கப்பட்ட இன்னொரு அருமையான பாடல் இது. அது மட்டும் இல்லாமல் பைக்காரா அருகில் உள்ள 6th, 9th Mile Wenlock Downsலும் சில காட்சிகள் வரும்.

Ooty Wenlock Downs

ஆனா, இந்த இடையிசைக்கு உரிய காட்சியை மட்டும் சின்ன பசங்க பார்த்துடாதீங்க. நாயகனும் நாயகியும், ஒரு நீர்வீழ்ச்சியில் நனைவது போன்று படமாக்கியிருப்பாங்க. You are forewarned. Our quiz is always U-certified, இல்லையா? இல்லையா? ;))

வேணும்னே, ஆரம்பத்துல ஒரு drums bit, for a fraction of a second, சேர்த்து இருப்பது, உங்க ஞாபக அலைகளை தூண்டிவிடத் தான். சரியா? அதுக்கப்புறம் ஆரம்பிக்குறாரு பாருங்க, bass-guitarல…சாமியோவ்…இடையிசை முழுக்க அது பாட்டுக்கு வரும். அது வர வர, கூடவே புல்லாங்குழல் மற்றும் வயலின். எப்படி இருக்கு பாருங்க 🙂

அந்த காலத்து ஆளுங்க எல்லாம், இந்த பாட்டை கேக்காம வந்திருக்கவே முடியாது. டூயட்டுல இது கொஞ்சம் peppy வகை. Melodyம், peppyம் அழகாக அளந்து தந்திருப்பார் இசைஞானி. செம பாட்டு 🙂

என்ன கண்டுபிடித்துவிடலாம் தானே? என்ன அருமையான இடையிசை.

முடியவில்லை என்றால், lifelineஐ பார்க்கவும். ஹா ஹா ஹா ;))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Both, the hero and heroine in this movie are heirs of popular Tamil-film legends. Lyricist’s one half of the name is same as one half of the name of the Director, which is essentially a very well-known household name in Tamil Nadu.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Solai Ilankuyil (சோலை இளங்குயில்) from Kaavalukku Kettikaaran (காவலுக்கு கெட்டிக்காரன்) (1990)

Advertisements