Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்றைய பாடல் ஒரு tie-breakerஆ இருக்கும்னு நெனச்சேன். ச்சே..அந்த க்ளூல சறுக்கி விழுந்துட்டேன். இருந்தாலும், என் கொள்கையில இருந்து எந்த மாற்றமும் இல்ல. நான் கேட்ட பாடல்களில் இருந்து மட்டும் தான் புதிர் தருவேன். அதே போல, ஓரளவுக்கு நல்லா famousஆ இருந்த பாட்டை மட்டும் தான் தருவேன். அதனால, tie-breaker cluesனு களம் இறக்கணும்னா, அதுக்கு ஒரே வழி, life-line cluesல நல்லா இழுத்து புடிச்சே ஆகணும். அதனால, இனிமே இந்த க்விஸ் மாஸ்டர் ஸ்டிரிக்ட் தான். ஓகே? 😉

இசையை நன்றாக பல முறை இசைத்து, கேட்டு, பாடலை கண்டுபிடியுங்கள். என்ன ஓகேவா? ;))

ஸ்ஸப்பா…

சரி, இன்னிக்கு நான் இறக்கியிருக்கிற பாட்டு, tie-breakerனு சொல்லிடமுடியாது. ஏன்னா, இந்த பாட்டு நல்லாவே தெரிஞ்ச பாட்டு தான். நான் சொல்றத நம்பலைன்னா, நீங்களே இசையை கேட்டு தீர்மானிச்சுக்க வேண்டியது தான். இது வந்த காலத்துல கேபிள் டிவியும் நல்லா பரவ ஆரம்பிச்சிருந்தது. அதுல இந்த பாட்டு வந்ததுண்டு. அதே மாதிரி, வானொலிகளிலும் இசைத்ததுண்டு. ஆனா, பின்னாளில், இணையத்தில் நண்பர்கள் எல்லாம் இசைஞானியின் பாடல்களுக்காக தளங்களை ஆரம்பித்த புதிதில், இந்த பாடல் நன்றாகவே ஹிட் ஆனது.

இந்த பாடல், முழுக்க, முழுக்க ஊட்டி தாவரவியல் பூங்காவிலும், ஊட்டி போட் ஹவுஸிலும் படமாக்கப்பட்டது. அதுவும், இந்த இடையிசைக்கு ஏற்ற காட்சிகள், ஊட்டி போட் ஹவுஸில் தான் படமாக்கப்பட்டது. இன்று ஊட்டியின் ecological damageஐ நினைத்தால், மனம் பேதலிக்கிறது. சிறு வயது தொட்டே, ஊட்டி மீது ஒரு தனி அக்கறை உண்டு என்பதால், 80களிலும், 90களிலும் அடிக்கடி சென்றதுண்டு. அதனாலேயே, சிறு சிறு மாற்றங்களைக் கூட உடனடியாக கண்டுகொள்ளும் ஒரு வழக்கம் இருந்தது. மகாராஷ்டிர-குஜராத் பூகம்பத்தின் சமயம், நீலகிரிக்கு நடந்த பாதிப்பு, அந்த வருடத்தின் நவம்பர் மாத நிலச்சரிவுகளில் தெரிய வந்தது. அப்போது நீலகிரி கலெக்டராக திரு.பிச்சாண்டி இருந்தார் என்று நினைக்கிறேன் (பின்னாளில் இவர் விவசாயத்துறையின் செயலாளராகவும் இருந்தார் என்று நினைக்கிறேன்.). அந்த சமயம், குன்னூர் அருகே இருந்த மரப்பாலம் அருகே பெரிய பாறைகள் உருண்டதிலும், மாபெரும் நிலச்சரிவு நடந்ததிலும், permanent, irreversible damage happened. இன்று வரை, அந்த நிலச்சரிவில் சிக்கிய 1 அல்லது 2 சேரன் போக்குவரத்துக்கழக பேருந்துகள், ஒன்றிரண்டு லாரிகள், சில சிறு வாகனங்கள் எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அந்த வழியாக இன்று சென்றாலும், மாறியுள்ள நில அமைப்பை நன்றாக உணரலாம். சாலையில் மூன்றிடங்களில் வெட்டுண்டதை, இந்திய ராணுவத்தின் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்கள் தான், 3 bailey-bridgesஐ அவசரத்துக்கு அமைத்து, ஒரு வழிப்பாதையாக அரசு பேருந்துகளில் இருந்து தனியார் வாகனங்கள் வரை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்புவார்கள். இது ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு தொடர்ந்தது. அப்போதெல்லாம், சேரன் போக்குவரத்துக் கழக பேருந்தில் ஊட்டி சென்று வரும்போது, அவ்வளவு adventurousஆக இருக்கும். Civilian lifeல், Bailey-Bridgesமீது பேருந்தில் பயணம் செய்த பாக்கியம் எத்துணை பேருக்கு கிட்டும், சொல்லுங்கள்? 🙂

Anyway, we digressed. I apologize 🙂 இந்த பாட்டுல, ஊட்டிய நல்லா சுத்திப்பாத்த சந்தோஷத்தோடு வரலாம் 🙂

பாட்டுல, சரணத்துல “பூங்கா”ன்னு reference வருவதால, இந்த பாட்டை ஊட்டி தாவரவியல் பூங்காவின் lawnsல் சுத்தி சுத்தி எடுத்திருபாங்க. ஊட்டி வரை உறவு சினிமா எடுத்த அதே lawns தான். இன்று இந்த lawnsல் யாரும் உருள முடியாத படி தடுப்பு வைத்துவிட்டார்கள். நான் அடிக்கடி உருண்ட இடம் அது. (தனியாகத் தான் 🙂

வெறும் புல்லாங்குழல், மென்மையான தாளம், சுண்டிவிடப்படும் விதமாக சந்தூர் — 22 நொடிகளுக்கு இதை மட்டுமே வைத்து ஒரு காவியத்தையே செதுக்கியுள்ளார் இசைஞானி. பின்னர் தான் மெல்லமாக வயலின் வருகிறது. கடைசியாக வரும் சந்தூர் இசையும், தபேலாவும் தான் இந்த புதிரை மிக மிக சுலபமாக்கும் சங்கதி. அதை விட்டுவிட்டால், மற்ற க்ளூக்களை வைத்து சுளுக்கு எடுக்கவேண்டியது தான்.

இந்த படத்துல எல்லா பாட்டும் செம ஹிட். கேட்டு இருக்கீங்களா? உங்களுக்கு பிடிச்ச பாட்டு என்னன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க. எதக் குடுக்கறதுன்னு கொஞ்சம் திணறி போய்ட்டேன். இருந்தாலும், ஊட்டி லூட்டி தான் நமக்கு வழிய காட்டுச்சு ;)) அடிக்க வராதீங்க. 🙂

ஊட்டி வரை உறவு. பதில் தெரிந்தால் வரவு.

Have a nice day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Heroine’s actual name featured in the title of this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Chinna Poongili (சி்ன்னப் பூங்கிளி) from Paarvathi Ennai Paaradi (பார்வதி என்னை பாரடி) (1993)

Advertisements