Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று வருவது, படத்தின் பின்னணி இசை. அதுவும் சாதாரண பின்னணி இசை இல்லை. பின்னி எடுத்த கிளாசிக் பின்னணி இசை. இதை, நம் இசைஞானியின் பின்னணி இசைப்பிரியரான காமேஷுக்கு, அவரின் மகிழ்ச்சியான தருணத்திற்கு பொருந்தி வரும் பொருட்டு கொடுக்கின்றேன். காதலுக்கான பின்னணி இசை என்றாலும், இந்த பின்னணி இசையை தாலாட்டாக கூட என் மகளுக்கு இரவில் இசைத்து தூங்க வைத்திருக்கின்றேன். அதனால், congratulations, Kamesh. உங்கள் மகிழ்ச்சியில் பங்கேற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியே🙂

இன்றைய பின்னணி இசையை 4 பகுதிகளாக பிரித்துள்ளேன். அடிப்படையில், அனைத்தும் ஒரே notes தான். அந்த 4 பகுதிகளையும் #soundcloudல் குறித்துள்ளேன். பார்த்துக்கொள்ளுங்கள்.

Background-score was noise-removed multiple times using noise-reduction and noise-gate techniques, as the input source had lots of noise in it. In order to capture the Veena interludes, other dialogue portions were censored. No change in tempo was ever made. No bass was altered. Volume-level was maximized and adjusted, to suit the different parts for consistency of the entire track.

  1. பகுதி 1: புல்லாங்குழல் மற்றும் கிடார் தான் இதில் முக்கியம் என்றாலும், அங்கே பின்னால் உயிரோட்டத்துடன் வரும் bass-guitarஐ கவனித்தீர்களா? இந்த மெலடி பின்னணி இசை, படம் வந்த புதிதில் பசக் என்று மனதில் ஒட்டிக்கொண்டுவிட்டது.
  2. பகுதி 2: வெறும் வீணையின் இசையோடு, பின்னால் இருந்து ஏத்திக்கொடுப்பது, bass-guitar தான்🙂
  3. பகுதி 3: இங்கும் பகுதி 2 போன்ற வீணை இசை தான். ஆனால் பாருங்கள், bass-guitar உடன், அருமையான mild-synthஐ மெருகூட்டி சேர்த்திருப்பது, இந்த இசையில் வலி + romance என இரண்டையும் துல்லியமாக காட்டிவிடுகின்றது.
  4. பகுதி 4: இது பகுதி 1 போன்ற இசை தான். ஆனால், இதில் கொஞ்சம் வலியும், வேதனையும், சிறு கோபமும் உண்டு என்பதால், group-violinsஓடு ஒரு roaring-effectஉம் இருக்கும்.

இவ்வளவு தான். இந்த பின்னணி இசைக்கு மேலும் விபரங்கள் கொடுத்து தான் இதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நிலையே இருக்காது என்று தீர்க்கமாக நம்புகிறேன். The reason is that, this is one of the all-time, evergreen, classical background scores of Maestro Ilaiyaraaja.

நாகரீகம் என்ற பெயரில் நாம் தொலைத்த பலவற்றை, இந்த திரைப்படத்தில் ரசித்துப் பார்க்கலாம்.🙂

இல்லை, இன்னும் க்ளூ வேண்டும் என்றால், லைப்லைன்னில் பார்த்துக்கொள்ளுங்கள்🙂

Have a nice weekend :))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

A famous director and a lead actress, debuted in this movie that successfully mixed serious love-story with one of the superb comedy-tracks of all time.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Aan Paavam BGM (ஆண்பாவம் (பின்னணி இசை)) from Aan Paavam BGM (ஆண்பாவம் (பின்னணி இசை)) (1985)