Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

Part-2 போல Part-20 வரைக்கும் செல்லுமா என்று சிலர் ஏக்க பெருமூச்சுவிட்டதை ரசித்தேன். ஆனால், கியர் மாற்றி, மற்ற ஏரியாவுக்குள் நுழையவேண்டிய தருணம் வந்துவிட்டது.

நேற்று டோஸ்ட்மாஸ்டர் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பேசிவிட்டு காரில் ஏறி அமர்ந்தவுடன், கேட்ட அருமையான பாடல் தான் இன்று :). கொஞ்சம் stressfulஆக இருந்தால், அப்படியே ஒத்தடம் கொடுப்பது போன்ற பாடல் தான் இது. யோசித்தால் சிரிப்பாக வருகிறது. சில நிமிடங்களுக்கு முன்னால் வரைக்கும் ஆங்கிலத்தில் மற்ற பேச்சாளர்களோடு மோதுவதும், பின்னர், உடனே வந்து காரில் இம்மாதிரியான இசைஞானியின் மனதை வருடும், ஆங்கில வாசனையே இல்லாத டூயட் பாடல்களை அனுபவித்துக்கேட்டு, ரீசார்ஜ் செய்வதும், நம் வாழ்க்கையில் எங்கு இருந்தாலும், எப்படி பயணம் செய்தாலும், அங்கெல்லாம் இசைஞானியின் இசை நமக்கு பக்கபலமாக உள்ளது என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது. அல்லவா?

வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. 🙂

மேலும், நேற்று @ezharai தான் தொடர்ந்து 200 பதில்களை சரியாக அளித்திருந்த மைல்கல் சாதனையை சுட்டிக்காட்டி, தன் மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்துகொண்டிருந்தார். அருமையான சாதனை நண்பரே. தொடர்ந்து தாக்க, எமது வாழ்த்துகள் 🙂


SPB

இன்று வருவது, எனக்கு மிக, மிகப் பிடித்த டூயட்களில் ஒன்று. இந்த பாடலை SPBயையும், அவருடன் இணைந்து பாடிய பெண் பாடகியையும் விட, வேறு எவராலும் பாடியிருக்க முடியுமா என்றால் சந்தேகமே. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு, சாதாரணமாக பாடியிருப்பார்கள். அதிலும் ஒரு படி மேலே போய், நொறுக்கியடித்து பாடியிருப்பார் SPB.

இந்த பாடல் உங்களுக்கும் பிடித்ததா என்று மறக்காமல் சொல்லுங்கள்.

ஏன் என்றால், இம்மாதிரி பாடல்களை எப்படி வடிவமைக்கிறார் இசைஞானி என்று எனக்கு என்றுமே புரிந்ததில்லை. ராக்கம்மா கையத்தட்டு எல்லாம் அவர் conceive செய்து, பாடி காட்டும்போதே, இயக்குநருக்கு இது மிகவும் பிடித்திருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது. ஆனால், இந்த மாதிரி பாடல்களையெல்லாம் என்ன தைரியத்தில் இசைக்க துணிகிறார் என்றே புரிவதில்லை. ஆனால், முழுப்பாடலையும் கேட்டு முடித்தவுடன் கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே, அது ராக்கம்மா கையத்தட்டு அளவுக்கு இருக்கும். அப்படிப்பட்ட nuanced, subtle duet தான் இது. ஒரே சீரான தாளத்துடன், பாடல் மிக மிக jollyஆகவும், மெல்லமாகவும் செல்லும். அதிலும் அந்த மென்மை இருக்கிறதே…ஆகா..

மென்மையின் உச்சம் தான், அந்த breezy, group violins, on top of which you see the gentle flutes. இசையில் வரும் அந்த programmed beat தான் பாடலின் ஆதியில் இருந்து அந்தம் வரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். இதை வைத்தே பாடலை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். ஞாயிறு மதியம் உண்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுபவர்கள், இந்த பாடலை ஒரு முறை முழுக்கக் கேட்டால், தூங்குவது உறுதி 🙂 அதே போல, காரில் நெடிய நேர பயணம் செய்ய நேர்ந்தால், அயராமல் ஓட்டிக்கொண்டே, வெளியில் நம்மைத் தாண்டிச் செல்லும் இயற்கை காட்சிகளுக்கு உகந்தவாறு காரின் உள்ளே இந்த பாடல் ஓடிக்கொண்டு இருப்பதையும் ரசிக்கலாம்.

ஆனால், இந்த பாடலையும், இன்று தான் முதன்முறையாக கேட்கின்றேன் மாஸ்டர் என்று உங்களில் சிலர் சொல்லலாம். மகிழ்ச்சியாக கேட்கத் தயாராக நான் இருந்தாலும், இம்மாதிரி எத்துணை அருமையான பாடல்கள் கேட்கப்படாமலேயே இருக்கிறது என்ற கவலையை மட்டும் என்னால் தவிர்க்கமுடியாது 🙂 அதற்கேற்றாவாறு, முடிந்த அளவுக்கு எஞ்சி உள்ள நாட்களில் அவ்வப்போது இம்மாதிரி gemsஐ தர பார்ப்போம்.

Go for it, folks.

Have a nice Sunday.

Last-minute update: Never saw this song and so took that calculated-risk on YouTube. OMG, this may well qualify for Part-3 of சாமக்கோழி series 😉 Never knew that this song’s beginning is also of that genre and thankfully, I switched it off in order to keep enjoying the song without the visuals. LOL 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie is the first-line of a blockbuster, peppy, hit prelude(தொகையறா) of a song by Maestro Ilaiyaraaja in the 1980s 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ponmani Ponmanikku Naane (பொன்மணி பொன்மணிக்கு நானே) from Annanukku Jay (அண்ணனுக்கு ஜே) (1989)

Advertisements