Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நம்ம புதிர்ல, எப்படி பாட்டு வரும்னே சொல்ல முடியாது 🙂 சில சமயங்கள்ல, ஒரு பாட்டு வந்துச்சுன்னா, அது ஞாபகப்படுத்தும் அடுத்த பாடல் linked-list மாதிரி நச்சுன்னு வருவது normal தான். இருமாம கேட்டு, பதிலச் சொல்லுங்க 🙂

நேத்து இதப் பார்த்தா, இன்னிக்கு இதையும் பார்க்க வேணாமா? 🙂

சில படங்கள், சில பாடல்கள், இதெல்லாம் சிறு வயசுல தியேட்டர்ல கூட்டத்தோடு பாக்கும்போது, அது அடிச்ச லூட்டியில காலத்துக்கும் மாறாம நம்ம மனசுல உக்காந்துடும். அது மாதிரி பாட்டு தான் இது. கோயம்புத்தூர்ல புதுசா கட்டப்பட்டிருந்த “ஒரு தியேட்டர் காம்ப்ளக்ஸின்” முக்கிய தியேட்டர்ல, இத பாத்தேன். அந்த தியேட்டரே ரணகளம் ஆகுற அளவுக்கு அந்த காலத்துல, Rs. 1.50, Rs. 2.90, Rs. 4.50, Rs. 5.50 அப்புறம் Rs. 6.00 Boxனு எல்லா தரப்புளயும் அப்படி ஒரு விசில், கைத்தட்டல், அட்டகாசம்! (உண்மைய சொல்லணும்னா, பாக்ஸ்ல இருந்தவங்க ரியாக்‌ஷன் எனக்கு தெரியாது… நான் 4.50ல இருந்ததா ஞாபகம் :)) இப்ப நெனச்சாலும் அப்படியே electrifying ஆ இருக்கு. ஆனா, எதுக்கு இந்த அளவுக்கு applauseனு புரியாத வயசு. பின்னாடி இந்த படத்த DVDல பாக்கும் போது, அடப் பாவிகளா, இதுக்கு தான் இத்தனையுமான்னு நெனச்சு சிரி, சிரின்னு சிரிச்சேன்.

குத்து பாட்டுக யார் வேணும்னாலும் போடலாங்க. ரிதம கொஞ்சம் பெப்பியா போட்டு, செம அடி அடிச்சு சாத்தினா, ஒரு குத்து பாட்டு ரெடி. ஆனா, இங்க? அட மிருதங்கத்தை அவுத்துவுட்டு இருக்காரு பாருங்க. அடேங்கப்பா…ஒரு மாதிரியா கிக் ஏத்துற பாட்டுக்கு, அதுவும், குத்து பாட்டுக்கு மிருதங்கம். தாங்குமா? அதான், அன்னிக்கு சாமானியன்ல இருந்து, பாலிஷ்டு ஆள் வரைக்கும் பிகிலடிச்சு ரசிச்சு இருக்காங்க. அந்த காலத்துல German stereophonic sound systems கோவையின் பல திரையரங்குகளில் நிறுவி, அதை விளம்பரப்படுத்தும் அளவுக்கு கலை கட்டிய பொன்னான காலங்க…இன்னிக்கு நிறைய இருக்கு…ஆனா, அளவாவும், அவ்வளவாவும் இல்லாதப்போ, சிறுசா ஏதாச்சும் வந்தா கூட அப்படி ரசித்தது நம்ம மனசு…ஹும்ம்ம்…

சரி, திரும்ப பாட்டுக்குள்ள வருவோம். இந்த பாட்டே செம டெம்போங்க. இந்த பாட்டுக்கு அடியோ அடி, தர்ம அடி. கிக் ஏத்தின நேத்தைய பாட்டுல, அப்படியே மெல்ல strum பண்ணி இழுத்துவுட்டு அடிச்சு சாத்தின இசைஞானி, இன்னிக்கு வர்ற பாட்டுல, அதே bass-guitarஐ, என்னனென்னமோ notesல எல்லாம் அடிச்சு அதகளப்படுத்தியிருப்பாரு. கேட்டீங்கனா, நல்லா ரசிக்கலாம். அதுவும் நடுவுல, ஒரு transformation வருது பாருங்க…வயலின்ல..அட விசில் போடத் தோன்றும் இடமாக்கும் அது. அதைத் தொடர்ந்து வரும் ஏய்ய்ய்ய்ய்ய்ய் தான், இந்த இடையிசையின் உச்சம். இசைஞானியின் இந்த பாடலைக் கேட்கும் நமக்கோ மச்சம் 🙂

பட்டி தொட்டியெல்லாம் பிச்சு உதறின பாட்டு இது. எல்லா செண்டர்களிலும் பிய்த்து உதறின படம் இது. இந்த படத்து பாடல்கள் அனைத்துமே மாபெரும் ஹிட்.

Have a nice weekend :))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Hero in this movie was a widower in real-life at one time as well as in this movie’s story 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kanna Thorakkanum Saami (கண்ணத் தொறக்கணும் சாமி) from Munthanai Mudichchu (முந்தானை முடிச்சு) (1983)

Advertisements