Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

இன்று வெள்ளி. அதனால், சுலபமாக தர வேண்டிய நிர்பந்தம். ஆனால் பாருங்கள், இன்றைய பாடலில் வேறு ஒரு இசைத் துணுக்கை கொடுக்கலாம் என்றிருந்தேன். இருந்தாலும், வெள்ளி செண்டிமெண்டை வைத்து, மக்கள் என்னை சுலபமானத் துணுக்கை தர வைத்துவிட்டார்கள்.

இது ஒரு மாதிரியான பாடல். கண்டிப்பாக A-Certificate கொடுக்கப்பட வேண்டிய பாடல். வேண்டுமென்றே, ஒரு முனகலோடு துணுக்கை நிறைவு செய்ததற்கு வேறு எந்த காரணமும் இல்லை மக்களே. ஆமாம். சொல்லிவிட்டேன் 😉

அப்புறம் பாருங்க, இந்த படத்துல நமக்கு இன்னொரு பாட்டு ரொம்ப பிடிக்கும். சித்ரா பாடியிருப்பாங்க. அருமையான மெலடி பாடல். இயற்கையை ரசித்து பாடியிருக்கும் அந்த பாடல் எனக்கு பிடித்திருக்க முக்கிய காரணம், இசைஞானியின் இசை ஒரு பக்கம், சித்ராவின் இனிய குரல் மறுபக்கம் என்றாலும், அதையும் தாண்டி, கோயம்புத்தூரை தலைமையாகக் கொண்டு அந்த காலத்தில் இயங்கிய சேரன் போக்குவரத்துக் கழக பேருந்து — அந்த காலத்துக்கு உட்பட்ட chocolate கலர் பெயிண்டிங்கில், தற்காலத்து TN-NN N-nnnn எண் வருவதற்கு just முன்னால் வந்த கடைசி serialஆன TCBseriesல் வந்த TCB 1529 எண் உடைய பேருந்தில் நாயகி வந்து இறங்குவதாக சீனை அமைத்திருப்பார்கள். ஆகா, அந்த டைரக்டரும் நம்மள மாதிரி கோயம்புத்தூர் + சேரன் போக்குவரத்துக்கழக அபிமானி போலிருக்கு. வேணும்னே, ஒரு 10-15 நொடிகள், அந்த பேருந்தையே காட்டியிருப்பார். தமிழக அரசு juryல் இருந்திருந்தால், இதற்காகவே அவருக்கு நான் சிறந்த டைரக்டர் அவார்டு கொடுக்கணும்னு பரிந்துரை செஞ்சிருப்பேன் ;))

ஹும்… புத்திசாலி மக்கள், மேலே ஒரு பாரால இருந்து, நிறைய க்ளூவை அள்ளி எடுத்திடமாட்டீங்களா என்ன? 😉

இருந்தும், இன்று படு குளிர் இங்க எல்லாம். அதை கொண்டாடும் (??) வகையில், சேரன் போக்குவரத்துக்கழக பேருந்தே வராத, ஆனால், படு கிக் ஏற்றும் பாடலை அவிழ்த்துவிட்டிருக்கின்றேன்.

சத்தியமா, நீங்க நினைக்கிற காரணத்துக்காக இறக்கிவிடலை. இந்த இசைத்துணுக்கில் தூக்கலாக இருக்கும் bass-guitarக்காக மட்டுமே, இந்த பாடலை தேர்வு செய்திருக்கிறேன். நம்புவதும் நம்பாததும், உங்கள் பாடு ;)))

அது சரி, அது எதுக்கு அந்த கடைசி முனகல்னு கேக்கறீங்களா? No comments. கலை ரசிப்பதற்கு. ஆராய்வதற்கு அல்ல. அப்படீன்னு சொல்லிட்டு, நான் பாட்டுக்கு ஓடிடுவது தான் நல்லது.

சரி, சரி. உங்களுக்கு தெரியாதா, ஏன் கொடுத்தேன்னு? அந்த ஒரு முனகலால் தான், உங்கள் முனகல்களை அடைக்கமுடியும் என்ற நல்ல எண்ணத்தில் தான் கொடுத்தேன். பாருங்க, இசை முழுக்க உங்களுக்கு பாடலை அடையளாம் கண்டுகொள்ள முடியாவிட்டாலும், அந்த 1- நொடி முனகலில், சர்வமும் தெரிந்துவிடும். Easy தான். கண்டுபிடியுங்க, பாட்டை 🙂

Have a nice weekend :))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try the direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This actress was introduced by Gangai Amaran 🙂 First line of this song will have a “musical” connotation 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Nalla Isaithattu ( நல்ல இசைத்தட்டு) from Vellayathevan (வெள்ளையத்தேவன்) (1991)

Advertisements