Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

வாழ்த்துகள் கூறிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. 12-13 மணி நேர அலுவல் தினமாக இரண்டு நாட்கள் சென்றுவிட்டது. இன்றும், நாளையும் அதே மாதிரி தான். அதனால் தான் அதிகம் உரையாட முடியவில்லை. பொறுத்தருளவும். நன்றி🙂


நேற்று lifeline clueவில், movie என்பதற்கு பதிலாக song என்று தவறாக குறிப்பிட்டிருந்ததை, @seevin போன்றோர் சுட்டிக்காட்டியிருந்ததால், உடனே சரி செய்துவிட்டேன். என்றாலும், நிறைய பேர், குழம்பிவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். மன்னித்து அருளவும். சுட்டிகாட்டியமைக்கு நன்றி.


இசைஞானியின் பாடல்களில், குழந்தைகளின் தாலாட்டு, பாசம் என்று எதுவாக இருந்தாலும், அதில் ஒரு தனி உணர்ச்சிப்போராட்டத்தையே உள்ளடக்கி இசைத்திருப்பார். இந்த பாடலும் அவ்வகை தான். இதை நான் இன்று கருத்தரங்கு breakல், என்னிடம் இருந்த இசைக்கோப்பில் இருந்து பதிவேற்றம் செய்ய நேர்ந்தது. இந்த இடையிசையில் வரும் இசைக்கருவிகளின் கையாடல், அருமையிலும் அருமை. Simplicity is the key. கிடார், புல்லாங்குழல், வயலின் — குறிப்பாக, வட இந்தியாவில் பிரபலமான சாரங்கி என்னும் இசைக்கருவியின் மீட்டல் இது என்று நினைக்கின்றேன். தெரிந்தவர்கள் தவறாமல் சொல்லவும். இவையெல்லாம் சேர்த்து, ஒரு தகப்பன் தன் மகன் மீதுள்ள பாசத்தால் பாடும் பாடலின் தாக்கத்தை முழுக்க நம்மீது அழுந்த பதித்திடுவார் இசைஞானி இளையராஜா.

குழந்தை பாக்கியம் என்பது சாதாரணமல்ல. அந்த பாக்கியம் கிடைக்காத எத்துணையோ பெண்களின் வலியை பிரதிபலிக்கும் விதமாக படத்தில் வரும் அம்மா character காட்டுவதாக ஞாபகம். பின்னர் அவளுக்கு கிட்டிய குழந்தை பாக்கியத்தை கொண்டாடும் விதமாக வரும் ஒரு அருமையான பாடலும் இந்த படத்தின் ஹிட் சாங். எல்லா பாடல்களும் அருமை.

இருந்தாலும், ஆத்மார்த்தமாக என்னை நகற்றிச்செல்லும் இந்த பாடல் தான் என்னுடைய favorite.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Try this Direct Link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie is one-worded. A leading producer and another director acted in the leading cast, while this heroine introduced by Bharatiraaja, acted as the Mother character🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Enna Petha Rasa (என்ன பெத்த ராசா) from Thalaimurai (தலைமுறை) (1998)