Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

இன்று படத்தின் பின்னணி இசை.

Ahem…கண்டிப்பாக இருதய பலவீனமுள்ளவர்கள், இன்றைய புதிரில் கலந்துகொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 😉

சரி உலக நடப்ப, சீக்கிரமா ஒரு ரவுண்டு பாத்துடுவோமா?

  1. இது நம்ம அமெரிக்காவின் கரண்ட் அஃபேர் கேஸ்: Jodi Arias Trial
  2. இது தென்னாப்பிரிக்கா ஆஸ்கார் பிஸ்டோரியாஸ் கரண்ட் அஃபேர் கேஸ்: Oscar Pistorius Case
  3. எங்க கோயம்புத்தூர் மட்டும் என்ன சும்மாவா? இது எங்க ஊரு கரண்ட் அஃபேர் கேஸ்: Aged Woman Case

எப்படிப்பட்ட காலகட்டத்தில், திகிலுடன் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர்த்த, ஒரே சமயத்தில், உலகத்தின் முக்கிய ஊர்களில் நடந்து வந்திருக்கும் குற்றச் செயல்களின், மிகச் சிறிய சாம்பிள் தான் மேலே சொல்லனது 😦


இப்படிப்பட்ட கொடுமையான விசயங்களையும் இசைஞானியின் திகில் இசை மூலமா பார்க்காட்டி எப்படி? அவருடைய இசை தான் தொடாத விஷ(ய)ம் என்று ஒன்று உண்டா? இல்லையே? அதான் இந்த A-Certificate (India) / R-Certificate (USA) திகிலிசை இன்று 🙂

நேற்று Twitterல் சொன்னது போல, இந்த பின்னணி இசையை நீங்கள், முதல் 11 நொடிகளிலோ, அல்லது இடையில் வரும் 5 நொடிகளிலோ, அல்லது, முடியும் 5 நொடிகளிலோ கண்டுபிடித்தால் இதுவும் இன்று breather என்று பெருமூச்சு விடலாம். அப்படி கண்டுபிடிக்க முடியாதவர்கள், சற்று யோசித்து, நிதானமாகத் தேடி பதிலளித்தால் தான் உண்டு.

இசைஞானி ஒரு இசை genius. இவரின் இந்த பியானோவை மையமாக வைத்து பின்னிய பின்னணி இசை, எனக்கு இருவேறு geniusகளை ஞாபகப்படுத்தும். ஒன்று, “Crime and Punishment” நாவலை எழுதிய ருஷ்ய எழுத்தாளர் பியோடோர் டோஸ்டொயெவ்ஸ்கி. மற்றொன்று பியானோ genius பிரடெரிக் சோப்பின்.

பியோடோர் டோஸ்டோயெவ்ஸ்கி
பிரெடரிக் சோப்பின்

Background score is encoded from original movie’s title-score with repeated noise-reduction and noise-gate techniques. No tempo was altered. No portion of the sequence was censored. Volume maximized and hiss-sound completely removed.

இந்த பின்னணி இசையை அனுபவிக்க, இப்படியாக பிரித்துப் பாருங்கள்.

  1. முதல் 11 நொடிகள், அடிக்கடி படத்தில் வரும் இசை. குறிப்பாக குற்றம் நடக்க தூண்டுதலாக உள்ள சில தருணங்களின் போது, இந்த இசை, அதே அலறல் சத்தத்தோடு வரும்.
  2. ஆனால், அந்த 11வது நொடியில் இருந்து 16வது நொடி வரைக்கும் strum செய்யப்படும் guitar! அங்கே இருந்து 16வது நொடியில் புறப்படும் stylish பியானோ இருக்கிறதே, அடடா…எவ்வளவு வேணும்னாலும் கொட்டிக் கொடுக்கலாம்! கல்லறையில் இருந்து சோப்பினே, எழுந்து கை தட்டிவிட்டு, மீண்டும் துயில் கொள்ள செல்வார்.அந்த அடி. எவ்வளவு சர்வசாதாரணமாக ஒரு பியானோ இசையை இசைத்துவிட்டு போய்விடுகிறார், இசைஞானி. Sheer genius!
  3. 42வது நொடியில் இருந்து அருமையான ரொமாண்டிக் ஆணின் ஹம்மிங்..அது பெண்ணின் ஹம்மிங்கோடு சேர, மெல்லிய கிளப் டிரம்ஸ் வேறு. இது அருமையான சீக்வென்ஸ் 🙂
  4. மீண்டும் பயங்கர திகில் கிளப்பும் மணி சத்தத்தோடு வரும் ஒரு அவஸ்தையான இசை, படத்தின் பல சீன்களில் வரும். இதை சவுண்டுகிளவுட்டில் குறியிட்டுக் காட்டியிருக்கிறேன். அங்கு பார்த்துக்கொள்ளுங்கள்.
  5. படத்தில் வெறும் குற்றம் மட்டும் தனித்து காட்டப்படுவதில்லை. அருமையான காதலும் பிணைந்துள்ளதை, இசையில் வரும் ரோமான்ஸ் சங்கதிகளில் இசைஞானி காட்டிவிடுகிறார்.
  6. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த heavy guitar strumming portion வரும் 1:56 – 2:10, குறிப்பாக 2:03-2:10 இன்னும் அதிக நேரம் வந்திருக்கக்கூடாதோ என்று அடிக்கடி தோன்றும்.
  7. முடிவில் வரும் அந்தக் கதறல் சத்தம், முதலில் வந்த அதே சங்கதி தான். நான் சொன்னது போல, அடிக்கடி படத்தில் வரும் இந்த சீக்வென்ஸ், மிகப் பிரபலம்.

இந்தப் படம் அருமையான கிரைம் சப்ஜெக்ட். அந்தக் காலத்தில், மிகவும் பிரபலமாக பேசப்பட்ட படம்.

என்ன சொல்லிவிடலாம் தானே? 🙂

Have a nice day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try this direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie, with a “floral” themed title and a psycho-thriller, was way ahead of its times and a thorough hit, that it was remade in foreign languages–Japanese and Russian, within 2 years of its Tamil release. Currently, this movie is being planned for a remake in Tamil too.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sigappu Rojakkal (BGM) (சிகப்பு ரோஜாக்கள் (BGM)) from Sigappu Rojakkal (BGM) (சிகப்பு ரோஜாக்கள் (BGM)) (1978)

Advertisements