Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று நம்மை குளிர்விக்க வரப்போகும் பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து. பல அருமையான பாடல்களை இசைஞானி இளையராஜாவுக்கு எழுதிய இவருடைய வைர வரிகளுக்கு எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. நண்பர்கள் மத்தியில் வேடிக்கையாக நான் இவருடைய “மச்சம்” பற்றிய obsessionஐ சொல்வதுண்டு. இவருடைய பல பாடல்கள் எனக்கு பிடிக்கும். அதில் ஒன்று இன்று 🙂

கவிஞர் வாலி

இன்றைய பாடல், இசைக்காகவும், அதில் ஒளிந்திருக்கும் அந்த தெய்வீகமான மெலடிக்காகவும், எனக்கு மிகவும் பிடிக்கும். இம்மாதிரி பாடல்கள் எல்லாம் கேட்க ஆரம்பித்தாலே, அன்றைய நாள் முழுக்க அந்த பாடல் மட்டும் தான் ஓடும். அந்த மாதிரி அற்புதமான பாடல் இது. நீர்த்துளிகள் விழும் ஒலியோடு முகப்பு இசை ஆரம்பமாக, அதில் கவிஞர் வைரமுத்துவின் கவிதையும் இருக்கும். பாடலின் ஆரம்ப வார்த்தைகள், பின்னாளில் ஒரு படத்தின் பெயராகவே வந்தது.

பாடலின் இசையால், பழைய நினைவுகள் அலையென பாய்ந்துவருவதும் இந்த மாதிரி பாடல்களின் மீது ஒரு விதமான ஈர்ப்பைக் கொண்டுவர ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, இந்த படம் கோயம்புத்தூரில் (அந்த காலத்தில் புதியதாக கட்டப்பட்டு இருந்த) கவிதா தியேட்டரில் வந்தது. ஆனால் இன்று அந்த தியேட்டரே இல்லை. இடித்துவிட்டு வீடுகள் கட்டிவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் இந்த காதல் பாட்டைக் கேட்டால், அன்று அந்த தியேட்டரில் இந்த பாடலை ரசித்து பார்த்ததோடு மட்டுமல்லாமல், கவிதா தியேட்டரின் ஸ்பெஷாலிட்டியான முட்டை போண்டாவையும் ரவுண்டு கட்டி அடித்தது எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது :). அது மாதிரி முட்டை போண்டா, மேட்டுப்பாளையம் KMS தியேட்டரில் மட்டுமே கிடைக்கும் என்று தேடிப்போனது உண்டு (பின்னாட்களிலும், ஏன் இந்நாளிலும் சிவரஞ்சனி தியேட்டர் என்று பெயர் மாற்றத்துடன், கூடிய ஜொலிப்புடன் (ஹையா 😉 இன்னும் இருக்கிறது என்று நினைக்கின்றேன் ).

இங்கே @VRSaran போன்ற தலைகள் யோசிக்க வேண்டும் — புதிரில் சிவரஞ்சனியை இப்படியும் எங்களால் இழுத்துகொண்டு வரமுடியும் பாஸ் ;))

Anyway, let me not digress 🙂

பாடலும், பாடலின் இசையும் தான், மாறிவரும் உலகில், மாறாத உணர்வுகளுக்கு அடிவேர் என்று சொல்ல வந்தேன் 🙂

இந்த இடையிசையின் முக்கியத்துவமே, அதன் மென்மையில் தான் அடங்கியிருக்கிறது. கோயில் மணியின் ஒலியோடு, அவ்வளவு அழகாக புல்லாங்குழலோடும், தபேலாவுடனும் ஆரம்பிக்கும். அந்த கோயில் மணி அடிக்கும் முன்னர் வரை, நாயகனும் நாயகியும் ஊட்டியில் உள்ள ஊசிமலைக்காடுகளில் மெல்லமாக பாடுவார்கள். அதிலும், இந்த ஹீரோ கொடுக்கும் வாயசைப்புக்கு, தியேட்டரில் ரகளை அடித்தும், விசில் அடித்தும் மக்கள் ஒரு வழி பண்ணிவிட்டார்கள். நோ நோ…. நான் எல்லாம் அப்ப நல்ல பையன். விசில் அடிக்கற வயசு இல்ல (ஹும்..ச்சை..க்ளூ கொடுத்தாச்சே..). ஆக ஊட்டியின் ஊசிமலைக்காடுகளில் இருந்து கோயில் மணிக்கு தாவும் இடத்தில் இந்த இசை வர, இந்த இசையின் நடுவிலேயே, ஊட்டிக்கு அடுத்து உள்ள பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு கேமரா போய்விடும். அருமையான வயலின்களோடு முடியும் அந்த இடத்தில் இருந்து ஹம் செய்தால், பாடும் தலைவரின் குரல் நினைவுக்கு வரும். அங்கிருந்து அப்படியே நூல் பிடித்துக்கொண்டு வந்தால், இந்த பாடலின் ஆரம்ப வார்த்தைகளில் வந்து விழுந்துவிடலாம். 🙂

இப்போது புரிகிறதா, இன்றைய தலைப்புக்கான காரணத்தை? 😉

Encoded audio file, adjusted for its tempo by 2%, to slow down the speed of the original source.

Have a nice day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try this direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie had two heroes, in addition to a mega hero of yesteryear. All the songs in this movie were by Kavingar Vairamuthu.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaathala Kaathala (காதலா காதலா) from Thaaikku Oru Thaalaattu (தாய்க்கு ஒரு தாலாட்டு) (1986)

Advertisements