Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்று இசைஞானியின் அன்புத் தம்பி அமர், வம்புத் தம்பியாக மாறி, நாயகனை நாயகி நையாண்டித்தனத்தோடு சமாதானம் செய்வது போன்ற ஒரு பாடலை எழுதி அசத்தினார். 🙂

இன்று வாலிப வாலி, ஏன்ய்யா, நீ எல்லாம் ஒரு ஆம்பளையாங்கற ரேஞ்சுல நாயகிய வச்சு நாயகன செம நையாண்டி செய்வார்.

கவிஞர் வாலி

இந்த மாதிரி நாயகிக கிட்ட மாட்டிக்கிட்ட ரியல்-வோர்ல்ட் ஆசாமிக இருந்தா சொல்லுங்க, வருத்தப்படாத வாலிபர் சங்கம் LLC ஒன்னு ஆரம்பிச்சுடுவோம் 🙂

Surprise! Complete musical prelude and interludes of the full song are encoded. Noise-removal done minimally. Volume maximized. No change in tempo. Prelude and interludes were woven together to play continuously, by carefully segueing the tapering portions.

இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்குங்க. அதான், நேத்தய பாட்ட கொடுத்த கையா, நம்ம மூளை, இந்த பாட்ட காட்டி கொடுத்துடுச்சு. நம்மள விட, நம்ம மூளை செம கெட்டி தான். இல்லையா?

ஆனா, இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்க காரணம், இசை தாங்க. அவ்வளவு அருமையான prelude & interludes. அப்படியே குத்தால காத்து வாங்கிகிட்டே சைக்கிள்ல போற மாதிரி இருக்கும். இந்த பாட்ட கார்ல போட்டுகிட்டு, நேரமே தெரியாத அளவுக்கு வண்டிய ஓட்டிகிட்டு பல இடங்களுக்கு போயிருக்கேன். இந்த prelude and interludesல ஏதோ magicஉம் இருக்கு, படு kickஉம் இருக்கு.

ஆர்பாட்டமே இல்லாம, ஒரே சீரா போகுற இசை தான் இதுல முக்கியமே. அதுனால தான், நான் ரசிச்சத, நீங்களும் ரசிச்சு, ருசிச்சு, பதில போட வசதியா, முழு prelude and interludeஐ encode பண்ணி ஏத்திட்டேன். ஏனா, இந்த மாதிரி அவ்வளவு வெளியே தெரியாத பாடல்களில் ஒளிந்திருக்கும் இசையின் அருமையை, அந்த இசைக்காக மட்டுமே ரசிக்கும் போது தான், இது மாதிரி இன்னும் எத்துணை புதையல்கள் இருக்கின்றனவோன்னு யோசிக்கத் தோணும் 🙂

Guitar தாங்க இந்த பாட்டுல முக்கியம்.

அப்புறம் Sax and trumpet.

பிறகு keyboard 🙂

அப்புறம் light percussion and flute 🙂

இவ்வளவு தான். Just கண்ண மூடிகிட்டு, செம stressedஆ இருக்கும்போது இந்த இசைய மட்டும் கேளுங்க. அப்புறம் பாருங்க, ஒரு புன்முறுவலோடு energeticஆ திரும்பி வந்துடுவீங்க.

பாடல் வரிகள்ல நம்ம வாலி பின்னியிருப்பாரு. பாடகி, செம கிளாஸ் பாடகி. இவருக்கு நக்கலா பாட சொல்லியா தரணும். தமிழ் சினிமா ஹீரோக்களையா அடுக்கி, இவிக மாதிரி எல்லாம் நீ இருக்கியாய்யான்னு கேப்பாரு. பாவம் 😉

அந்த ஆம்பள பயபுள்ளய செம ஓட்டு ஓட்டிட்டு இவுக பாட, ஆண் பாடகராக சாய்பாபா நுழைவாரு பாருங்க. செமயா இருக்கும் 🙂 அவரு கெஞ்சுவாரு...ஏம்மா, நான் ஒன்னும் ரியல் ஹீரோ எல்லாம் இல்ல தாயி.. நம்மள வுட்டுடுன்னு.

இந்த பாட்ட கேட்டிருக்கீங்களா? இல்ல, இதான் முதல் முறையா? பிடிச்சிருந்துச்சா? பின்னூட்டத்துல சொல்லுங்க.

இந்த மாதிரி weave செஞ்சு cut and paste செய்து encode செய்வது, பயங்கரமா time consume செய்யக்கூடிய operation. அது மட்டுமல்ல, மேகத்துல இருக்கற அக்கவுண்ட் தாங்காது. அதனால, அடிக்கடி இத எதிர்ப்பார்க்காதீங்க.

வந்திருக்கு இன்னிக்கு….எஞ்சாய் பண்ணுங்க.

வரட்டுங்களா? ரைட்..ரைட்.. 🙂

Have a nice day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try this direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Director Manobala of this movie is a side-kick comedian these days and is a strong Ilaiyaraaja devotee. Male voice of this song is Saibaba. Lyrics for this song, will name some top-hit movies in the Saranam, including Nayagan.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Oru Kaathu Karuppu (ஒரு காத்து கருப்பு ) from Vetri Padigal (வெற்றிப்படிகள்) (1991)

Advertisements