Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றைய பாடலாசிரியர், இசைஞானி இளையராஜாவின் அன்புத்தம்பி அமர் என்னும் கங்கை அமரன் அவர்கள் 🙂

Gangai Amaran

இசை, இயக்கம், கதை, வசனம் என்பதை எல்லாம் தாண்டி, அருமையான பாடலாசிரியர் என்பதும் எல்லாரும் அறிந்ததே 🙂 அது சரி, இன்றைக்கு ஏன் இந்த (பாடலாசிரியர்) ஆனந்தமே என்று யோசிப்போருக்கு, நேற்று Twitterல் நடந்த விவாதங்களைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 🙂

Today’s clue is noise-removed and adjusted for 98% tempo. Some amount of noise may still exist. Sorry!


இன்றைய திடீர் பாடலாசிரியர் குறித்த பதிவு, @NChokkanக்காக 🙂 காமேஷ்க்கும் சரி, ஜிராவுக்கும் சரி, இன்னும் பலரின் கருத்துகளை கேட்டு, அதற்கு தகுந்தவாறு சில மாற்றங்களை செய்து இருக்கிறோம் — @NChokkanன் idea தான் இந்த lifeline clueகூட 🙂 ஆக, மீண்டும் அவரின் விருப்பத்தை ஏற்று ஒரு சில க்ளூக்களுக்கு பாடலாசிரியர்கள் விவரத்தை சேர்க்கப்பார்க்கிறேன் 🙂

ஆனால், புதிய பறவை பறந்ததே மு.மேத்தாவும், வா வா வசந்தமே வைரமுத்துவையும் முன்னிலைபடுத்தியபோது, அவ்வளவாக அதற்கு வரவேற்பு இல்லை. 😦 ஆனாலும், அவ்வப்போது சில முயற்சிகள் வந்ததுண்டு 🙂


If you want to adduce information like lyricists, raagas, beats, inside information of the troupe etc., , please do comment extensively. All comments are published without exception.

My fundamental focus is to:

  1. Curate songs
  2. Select interesting interludes, preludes, postludes
  3. Select interesting BGM scores
  4. Do noise-removal, wherever appropriate
  5. Write a description, purposefully with gaps (Quiz is the key reason), so that other experts can fill them, which motivates them to write cogently, besides answering the clues daily.

இன்றைய பாடல், அந்த காலத்தில் இலங்கை மற்றும் அகில இந்திய வானொலியில் அடிக்கடி இசைக்கப்பட்ட பாடல். இது இசைஞானியின் நெருங்கிய நண்பர் இயக்கிய படம். அந்த இயக்குனர், தமிழ் திரையுலகத்தை தனது படமாக்கும் திறமையால் திரும்பிப் பார்க்க வைத்தவர். இந்த தலைமுறையினர் கூட, சிலாகித்து பேசக்கூடிய இயக்குனர். அவர், அந்த காலத்திலேயே ரிடையர்ட் ஆகிவிட்டது தான் ஏமாற்றம்.

இந்த பாடல், சிறு வயதில் இருந்தே என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கு காரணம், ஆரம்ப இசை ஒரு பக்கம் என்றாலும், சரணத்தில் படு seductiveஆக பாடும் நாயகியின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றாற்போல வரும் புல்லங்குழல் இசை மறு புறம் என்றாலும், இந்த பாடலின் மெதுவான pace தான் தலையாய காரணம். இந்த பாடலை உடனே கண்டுகொள்வோருக்கு நான் சொல்ல வருவது நன்கு புரியும். 🙂

நாயகனுக்கு கோபம். நாயகி பாடுகிறாள்…ஒரு வித சூடு தெறிக்க பாடுகிறாள் 🙂 ஆபாசமே இல்லாமல், அருமையான மெலடியாக வரும் இந்த பாடலை, சோலோவாக பாடியிருக்கும் பாடகி, இசைஞானிக்கு குறைவாகவே பாடினவர் என்றாலும், படு சூப்பரான பாடல்களை பாடியவர்.

அந்தக் காலத்துலேயே, Sax ஒரு பக்கம், Flute இன்னொரு பக்கம் என்று ஆரம்பிக்கும் இந்த இசையில், அருமையான bass-guitar interludeம், heavy strumming of lead-guitarsம் இருக்கும்.

இது அந்த காலத்து இளசுகள கவர்ந்த பாட்டு. என்னைய மாதிரி பிஞ்சுகளையும் பழுக்க….Wait..you got the point 🙂

Have a nice day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try this direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

BS Sasirekha had sung this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ey Maama Kobamaa (ஏ மாமா கோபமா) from Azhagiya Kanne (அழகிய கண்ணே) (1982)

Advertisements