Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். வாரக்கடைசியில் நல்ல ஓய்வு எடுத்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

இன்று, இந்த சீசனின் முதல் பட பின்னணி இசை — background score — வருகிறது. நண்பர் காமேஷ் மற்றும் சிலர், நீங்க பின்னணி இசைக்கு, கொஞ்சம் அதிகமாகவே க்ளூ கொடுக்கறீங்க…அதை கொஞ்சம் கம்மி பண்ணலாமேன்னு சொல்லியிருந்தாங்க. பொதுவா, பின்னணி இசைக்கு சற்று அதிகமாகவே க்ளூக்களை அள்ளித்தெளிக்கக் காரணம், அதை அதிகம் கேட்கும் வாய்ப்பு இல்லாமல் இருப்பதால் தான். ஆனால், இன்று வரும் பின்னணி இசை, மிகவும் பிரபலமானதால், சற்றே அடக்கிவாசிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு மேலும் பல காரணங்கள் உண்டு.

Superstar Rajinikanth
முதலாவதாக, இந்த படத்தில் நடித்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இரண்டாவதாக, இந்த படம் வெளிவந்த சமயத்தில், இந்த பின்னணி இசை வெகுவாக பாராட்டி பேசப்பட்டது. எந்த அளவுக்கு இந்த பின்னணி இசை பிரபலம் என்றால், தமிழுலகுக்கு கேபிள் டி.வி முதன்முதலாக தலைகாட்டத் துவங்கியபோது, சில நிகழ்ச்சிகளின் ஜிங்கிள்ஸ் இசையாக, இந்த இசையை போடுவார்கள். பின்னாட்களில், ராஜ் வீடியோ விஷன் (ராஜ் டி.வி) விளம்பரத்திற்கு, இந்த இசை வந்ததாகவும் எனக்கு ஞாபகம்.

ஆக, இன்றும் கூட இந்த இசையை இம்மாதிரி பல வடிவங்களில், இடங்களில் கேட்டிருக்கலாம். கேட்டிருந்தால் சொல்லுங்கள்.

ஏன், இது மாதிரி ஒரு பின்னணி இசையை நான் கண்டதில்லை என்று உயர்வாகச் சொல்கின்றேன் என்று நீங்கள் வியக்கலாம். இசையைக் கேளுங்கள். நீங்களும் ஒத்துக்கொள்ளலாம். படத்துடன் பார்த்தால், இன்னும் நன்கு ரசிக்கலாம். எனக்கு தோன்றும் காரணங்கள், இதோ:

  1. நளினம், புதுமை! என்ன ஒரு யூத் கலந்திருக்கு, இந்த இசையில..
  2. பாஸ் கிடார் தான் நாயகன், இந்த பின்னணி இசையில😉
  3. தபேலாவும், டிரம்ஸும் எப்படி ஒன்னா சேந்து கலக்குது பாருங்க.
  4. இசையின் அமைப்பு, repeat ஆகுது. ஆனா repeat ஆகும் இடத்தில் வருவது traditional வீணை!
  5. நையாண்டியாக இருக்கும் குறும்புத்தனம் கலந்த பின்னணி இசை!
  6. Sax படு stylish ஆக வருகிறது.
  7. அதே Sax, ஒரு வித திகில் கலந்த இசையாகவும் வருவது, அந்த sequenceக்கு அட்டகாசமாக ஒத்துப்போகும்.
  8. Saxஓடு வீணையும் கலந்தால் கூட, இசையின் தனித்தன்மை குறையாமல் வருகிறது.
  9. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்🙂

இந்த scene படு சுவாரசியமானது. சட்டத்துக்கு எதிராக வேலை செய்துவந்த நாயகனிடம் காவல்துறை ஒரு டீல் கட் செய்கிறது. இது நாள் வரை செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாகவும், செய்த தவறுகளுக்கு எல்லாம் ஒரு முழுக்கு போட்டுவிட்டு திருந்திவாழவும் நாயகனுக்கு அறிவுறுத்தி, ஒரேயொரு முறை, ஒரு கடத்தல் கும்பலைப் பிடித்துத் தர உதவ வேண்டும் என்று காவல்துறை, நாயகனிடம் கட்டளை(??) இடுகிறது.

ஆங்கிலத்தில், quittance என்று ஒரு வார்த்தை உண்டு. கடன் அல்லது ஒரு கட்டாயத்தில் இருந்து விடுபட எழுத்து மூலம் கொடுக்கப்படும் விடுதலை பத்திரம் தான் quittance🙂

In a way, the Police offers a condition of quittance to the hero, who is asked to assist cracking-down a gang, one last time, as a recompense for his illicit life up till that point🙂

அப்போது நாயகன், ஒரு கோட்டை போலிருக்கும் படு ஸ்டைலான பங்களா மீது கயிறு கட்டி ஏறி படிகட்டுகளில் நடந்து வருகிறான் — சிங்கத்தின் குகைக்குள்ளேயே, துணிந்து அவன் நடந்துவரும் காட்சிக்கான நக்கலான பின்னணி இசை தான் இது.

இந்த பின்னணி இசையை பதிவேற்ற கொஞ்சம் சிரமப்பட்டேன். இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன் கூட கீச்சியிருந்தேன்🙂

ஒரு வழியாக இரைச்சலை நீக்க முடிந்தது. துல்லியமாக, இதில் ஒரு இரைச்சலும் இல்லாமல் இருப்பதால், அந்த Bass-Guitarன் அசத்தல் strummingஐ அட்டகாசமாக அனுபவிக்கலாம். கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

Audio is encoded, using noise-removal techniques from its video source. Tempo was never altered. No portion was censored. Noise-reduction and noise-gate techniques were used and volume was maximized.

தமிழ் திரையுலகத்தில் தேவர் பிலிம்ஸ்ன் பங்களிப்பைப் பற்றி சிலாகித்து பேசாதவர்களே தமிழ் திரையுலகத்தில் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட கம்பெனியின் சின்னப்பா தேவரின் மறைவுக்குப் பின், அந்த கம்பெனி எடுத்த ஒரு இந்தி திரைப்படத்தில் கடும் நட்டம் ஏற்பட, அய்யாவும் காலமாக, அவருடைய புதல்வன் மிகவும் சுருண்டுபோய் இருந்தார். அவருக்கு உதவும் வகையில் ஒரு படம் பண்ணவேண்டும் என்று சூப்பர் ஸ்டார், முன்னணி மசாலா பட இயக்குநரை அணுகி செய்த படம் தான் இது. நன்றாக ஓடினாலும், தேவரின் மகனையும், அந்த கம்பெனியையும் தூக்கி நிறுத்தும் அளவுக்கு ஓடவில்லை என்று பின்னாட்களில் இந்த இயக்குநர் சொல்லியிருந்தார்.

ஆனால் இந்த படத்துக்கு, இசைஞானி இளையராஜா, எல்லா பாடல்களையும் அட்டகாசமாக அமைத்துத் தந்திருந்தார். அதிலும் ஒரு பாடல் இருக்கிறதே…அடேயப்பா…இன்று கூட படுபயங்கர ஹிட்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try this direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

A song from this movie was already featured in #365RajaQuiz (This is the 1st Lifeline clue in #365RajaQuiz that references an earlier clue in #365RajaQuiz itself🙂 )

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Dharmaththin Thalaivan (BGM) (தர்மத்தின் தலைவன் (BGM)) from Dharmaththin Thalaivan (BGM) (தர்மத்தின் தலைவன் (BGM)) (1989)