Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Bass-Guitarன் இனிய இசை இன்றும் தொடர்கிறது.

அதற்கு முன், ஒரு சிறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய அமெரிக்க நண்பர் இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார். அப்போது ஏதேச்சையாக, இந்திய பெண்களின் உடையலங்காரம், குறிப்பாக சேலையைப் பற்றிய பேச்சு எழுந்தது. பெண்களுக்கு உடையலங்காரம் என்றால், அதைப் பற்றி பேசுவதில் இருக்கும் ஆர்வம் இருக்கிறதே. ஆஹா 🙂 சேலையைப் பற்றி நிறைய கேள்விகளைக் கேட்டார். நான் சொன்னதிலேயே, அவருக்கு மிகவும் ஆர்வத்தைக் கிளறியது, இன்றைய மாறிவரும் தாராளமயமாக்கலினாலும், மற்ற சில விஷயங்களாலும், சேலையின் பாப்புலாரிட்டி சற்றே சரிந்து, பேண்ட், சுரிதார் என்று போகிறது என்றேன். அதையும் விட, முதன்முதலில் தன் அன்னை, சகோதரி, அல்லது தோழி என்று மற்ற பெண்களின் உதவியின்றி, இன்றைய பெண்கள் பட்டுப்புடவையை தாமாக கட்டுவது அவ்வளவு சுலபமல்ல. பழகிய பின்னர், வேண்டுமானால் அவர்களாகவே கட்டிக்கொள்வார்கள். ஆனால், பழகும் வரை, அவர்களுக்கு சேலை கட்டுவதில் உதவி அவசியம் தேவைப்படும். மேலும், முதல் முறையாக சேலை கட்டிவிட்டால், அது ஒரு இமாலய சாதனை என்றே சிலாகிக்கும் அளவுக்கும், அதை Facebookல் படமாக எல்லாம் போட்டு, ஒரு வித பரவச நிலைக்கு போகும் அளவுக்கும், சேலை கட்டுவது என்பது உண்மையிலேயே பெரிய வேலை தான் என்று சொன்னதை, மிகவும் ரசித்து, சிரித்து, பெருமூச்சுவிட்டார் 🙂

சேலைக்கும், இன்றைய பாடலுக்கும் நிறைய பொறுத்தம் இருக்கிறது. என்னவென்று நீங்களே கண்டுபிடித்து விடையை சொல்லிவிடுங்கள்.

வாலண்டைன்ஸ் டே, சென்ற வாரம் வந்திருந்தபோது, முறுக்கு அல்லது சேலை கொடுத்து, காதலிக்கு propose செய்த ஆண்கள் கைகளைத் தூக்கலாம்…சரி, யாரும் தூக்கல. ஆனா பாருங்க, நம்ம இயக்குநர்கள், காதலிக்கு முறுக்கும், சேலையும் எல்லாம் கொடுத்து சுலபமாகவும், செலவின்றியும் முடித்துவிட்டார்கள். ஆனால் இன்று? ஹும். 😉

இந்த பாட்டுல, நாயகன் சேலை கொடுத்து அசத்துறான். நாயகியும் impress ஆகி டூயட் பாடுறா. செலவின்றி, டூயட் பாடியது அந்தக்காலம். ச்சை 😉

இந்த இடையிசையில ஆரம்பமே சந்தூரின் அருமையான இசை. ஆனால், அது ஆரம்பமாகும் அதே தருணத்தில் தான் bass-guitarன் உறுமலும் ஆரம்பமாகிறது. தயவு செய்து bassஐ கூட்டி, sub-wooferல் கேட்டால், துல்லியமாக உணரலாம். வயலின்களைத் தாண்டி, புல்லாங்குழலும் நுழைந்தாலும், அதன் பின்னர் காங்கோ டிரம்ஸ் நுழைந்தாலும், இடையிசை முழுக்க மேலோங்கி வருவது இந்த bass-guitar தான்.

இந்த படத்தில் அந்தக்காலத்து சூப்பர் ஜோடி நடித்திருந்தனர் 🙂 நடிகை ஊர்வசி, கௌரவத் தோற்றத்தில் வந்தார் என்று நினைவு. கோயம்புத்தூரில் இருந்து வந்து கோடம்பாக்கத்தில் கலக்கிய டைரக்டருக்கு நம்ம இசைஞானின்னா உசுரு. இவரும், அவர் படத்துக்கு எல்லாம் செம பாட்டுகள் போட்டு கொடுத்திருக்காரு. இந்த படம் மட்டும் விதிவிலக்கா என்ன? செம பாட்டுக. அதே மாதிரி, இந்த படத்தோட புரொடியூசர், இப்ப எல்லாம் நிறைய காமெடி ரோல்கள்ல வர்றாரு. சமீபத்துல ஒரு படத்துல இவர, நம்ம சந்தானம் ஒரு வழி பண்ணி ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிடுவார். ஊரு விட்டு ஊரு வந்து செட்டில் ஆனாலும், இதெல்லாம் மறக்கமாட்டேங்குது ;))

Have a nice weekend. நாளை, சீசன் -3ன் முதல் பட BGM வரும். அருமையான, அட்டகாசமான BGM. அதுவரைக்கும் நன்றி, வணக்கம்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Name of a Hindu Deity will feature in the title of this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kalyaana Selai (கல்யாண சேலை உனதாகும் ) from Ambigai Neril Vanthaal (அம்பிகை நேரில் வந்தாள்) (1984)

Advertisements