Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

திரைப்பாடல்.காம் தளம் வேலை செய்யாமல் போனதாலும், இதர பல காரணங்களாலும், சுலபமான பாடல்(?) என்றாலும், பதில்கள் மெதுவாகத் தான் வந்த வண்ணம் உள்ளது. Take your time 🙂 சிறு தவறை நேற்றைய lifeline clueவில் பதித்தவுடன், @seevin மற்றும் @sicmafia சுட்டிக்காட்ட, உடனே அதைத் திருத்திவிட்டேன். நன்றி, நண்பர்களே. இனி நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்கின்றேன்.


நான் அடிக்கடி சுட்டிக்காட்டுவதுபோல, சிலருக்கு மிகச் சுலபமாக இருக்கும் ஒரு பாடல் க்ளூ, இன்னும் பலருக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது என்பதை நன்கு உணரும் வண்ணம், இந்த இரு கீச்சுகள் அமைந்திருப்பதை பாருங்கள்.

இரண்டு கருத்துக்களிலும் உண்மையும், எதார்த்தமும் இருப்பது தான், உண்மையிலும் உண்மை. இதை எதற்காக சொல்கின்றேன் என்றால், this is the diversified audience we have at #365RajaQuiz, that really makes the program fun, interesting, and at times, challenging 🙂


202/365இல் Bass Guitarன் ஆளுமையை உங்களில் சிலரும் நன்கு சுவைத்திருக்கின்றீர்கள் போலிருக்கிறது. வந்த சில பின்னூட்டங்களில் அதைப் பார்த்தேன். இன்றும், நாளையும் வரும் க்ளூக்களிலும், பிரதான முக்கியத்துவம், Bass Guitarக்கு இருக்கும். அதனால், sub-woofer அல்லது HQ headsets இருந்தால், தவறாமல் அதை நன்கு கவனித்து கேட்டுப் பாருங்கள் 🙂

இன்றைய பாடலும் அருமையான டூயட். இந்த பாடல் ஹிட்டான அளவுக்கு, படம் ஹிட் ஆகவில்லை. இந்த படத்தில் வந்த எல்லா பாடல்களும் பிரபலம் என்றாலும், வேறு ஒரு கர்னாடக சங்கீத முறையில் அமைந்த பாடல் படு ஹிட். அதற்கு இசைஞானி இளையராஜாவின் இசையை மீறிய ஒரு பங்களிப்பும் காரணம் 🙂

90களிலிருந்தே, இசைஞானியின் பாடல்களில் சிந்த் முறையில் அமைந்த percussion அதிகம் தலைகாட்டத் துவங்கியது. ராஜா ரசிகர்களிலேயே, சிலர் அதை சாடுவதை நான் கண்டதுண்டு. எனக்கு பழகிவிட்டதால், I have no strong opinions and I enjoy them 🙂 இந்த இடையிசையில் நீங்கள் அதை நன்கு கவனிக்கலாம்.

அதே போல், இந்த Wave Graphஐ ஒரு முறை நன்கு பார்த்தீர்கள் என்றால், இந்த பாடலின் முழு tempo, style, and rhythm patternஐ அடையாளம் கண்டுகொள்ளலாம். பாடல் முழுவதும், இப்படித் தான் இசை அமைப்பு, ஒரு நீரோடை போல சென்றுகொண்டிருக்கும். இதில் வயலின்களும், லீட் கிடார்களும் வருவதோடு, சோலோ வயலின்களும், கோரஸ் கண்மணிகளின், தகிட தீம் தன ஜதியும் வரும். இவற்றை வைத்தே இந்த பாடலை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.

உங்கள் FM Radioக்களில், இந்த பாடலை நீங்கள் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. 🙂

ஆனால் பாருங்களேன். நாளை வரவிருக்கும் 204/365 பாடலிலும், bass-guitar தூக்கலாக இருக்கும். என்ன, நாளை வரும் அந்த பாடலை, FM Radioக்களில் என்றாவது ஒரு முறையும், பழைய சிலோன் வானொலி, கோவை வானொலி (ஹையா..:) ), திருச்சி வானொலி என்று எல்லா ஒரிஜினல் வானொலியிலும் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். இன்றைக்கும், நாளைக்கும் உள்ள இடைவெளி அவ்வளவே 🙂 சரியா?

கண்டுபிடியுங்கள் பார்ப்போம். Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Starting word of this song, is one of the famous tourist locations in India.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kajuraho (கஜுராஹோ) from Oru Naal Oru Kanavu (ஒரு நாள் ஒரு கனவு) (2005)

Advertisements