Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அருமை நண்பர் @manivel அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு இந்த புதிரைத் தொடங்குவதில் மகிழ்ச்சிகொள்கிறேன். இதுகாறும் வந்த அனைத்து புதிர்களின் விபரங்களையும் திரட்டி, இவர் ஒரு தனி spreadsheet மூலமாக பாட்ல், படம், பாடகர்கள் என்று track செய்து வருவதோடு மட்டுமல்லாமல், நமக்கு அந்தத் தகவல்களை எல்லாம் அவ்வப்போது தந்து உதவி வருகிறார். மிக்க நன்றி மணிவேல். 🙂


மூன்றாம் சீசனில் இப்போதே தூள் பறக்க ஆரம்பித்துவிட்டது. நிறைய புதிய நண்பர்கள் ஆர்வத்தோடு கலந்துகொள்கின்றார்கள். அவர்கள் அனைவரையும், உங்கள் சார்பாக வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


நேற்று பல புள்ளியியல் அறிக்கைகளை பதித்தேன். இதன் மூலம், எப்படி சிலர் மேலே ஏறினார்கள், எப்படி சிலர் கீழே இறங்கினார்கள் என்பதெல்லாம் 50, 50ஆக பிரித்துப் பார்க்கும்போது நன்கு புலனாகிறது. இதோ:

Scores in #365RajaQuiz


பெண்ணின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல்களில், இசைஞானி இளையராஜாவின் இசை அட்டகாசமாக இருக்கும் என்று நிறைய தடவை பேசி இருக்கிறோம். நிறைய பாடல்களில் இதை நம் #365RajaQuiz புதிரில் பார்த்தும் வந்திருக்கிறோம். ஒரு சிறு flashback வேண்டும் என்றால், இங்கு போய் பார்த்துவிட்டு வாருங்கள் 🙂

  1. 177/365 – #365RajaQuiz – இவளின் இரவு, இனிமேல் விடியலில்
  2. 55/365 – #365RajaQuiz – காத்திருந்த காதலி
  3. 58/365 – #365RajaQuiz – காதலி விடு தூது.
  4. 59/365 – #365RajaQuiz – காதலி விடு (கொலவெறி) தூது
  5. 88/365 – #365RajaQuiz – இது, சிறகடித்து பறக்கும் சந்தூர் காதல்!

மேலே கொடுத்தது ஒரு சிறு சாம்பிள் தான். அதே போன்ற ஒரு அருமையான பாட்டு தான் இன்றும்.

கோயம்புத்தூரில் வளர்ந்ததால், நல்ல நல்ல (ஞான் சத்தியமா பரையுன்னு..வல்லிய படம் மாத்ரம் ஞான் பரையுன்னது… 🙂 ) மலையாளத் திரைப்படங்களை தியேட்டர்களில் சென்று பார்த்துவிடும் பாக்கியம் கிடைத்தது. அதுவெல்லாம் பொன்னான நாட்கள் என்று தான் சொல்லவேண்டும். அப்படி ஒரு படத்தை நான் தியேட்டரில் பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் கதை சற்று கணமாகவும் இருந்தது. ஆனால் அதற்கு இசை, இசைஞானி இளையராஜா இல்லை. அக்கட பூமியில் படம் அட்டகாசமாக ஓட, தமிழிலும் உடனே உரிமை வாங்கி ரீமேக் செய்தார்கள். நாயகியை மட்டும் மாற்றாமல், மற்ற எல்லாரையும் மாற்றி, இசைக்கு இசைஞானி இளையராஜாவை வைத்துவிட, பாடல்கள் எல்லாம் எக்கச்சக்க ஹிட். அந்த படத்தின் பாடல் தான் இது. மலையாளத்தை விட எனக்கு தமிழில் இந்த படம் பிடிக்க காரணம் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தான். அந்த காலத்தில், ரீமேக் செய்தும் தமிழில் பிய்த்துக்கொண்டு ஓடிய வெற்றிப்படம் இது. பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து!

இதை பதிவு செய்து மேலே ஏற்றி விமர்சனம் எழுதும் இந்த சமயம் மணி காலை 2. இந்த நேரத்தில், இதை sub-wooferல் இசைத்துக்கொண்டே side-speakersலும் கேட்க, அப்படி ஒரு இதம். ஏன் sub-woofer என்று அழுத்திச் சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். ஆமாம் — bass guitar. அதே தான். இந்த முழு இடையிசையிலும், அட்டகாசமாக ஒலிக்கும் இசைக்கருவி, காதுக்கு அதிகம் புலப்படாத அதே bass guitar தான்.

அவள் சாதாரண நாயகி அல்ல. மிகவும் அடி வாங்கி, வாழ்க்கையின் பாதையில் மெதுவாக விடியலை நோக்கி நடைபோடும் ஒரு இளந்தளிர். அவளின் முழு அங்கமே, மென்மையின் ஓர் அடையாளம். கலைகளின் ராணி. இப்படிப்பட்ட ஒரு மென்மையான மலர்க்கொடி போன்ற அவள், தன் வாழ்க்கையில் வீசிய புயல் அடங்கி, பல ஆண்டுகளுக்குப் பின் வீசும் தூறலில் நனைய விரும்பும் தருணத்தில் வரும் அட்டகாசமான பாடலின் இடையிசையானதால், எத்துணை அழகாக அதை பிரதிபலிக்கும் விதமாக, மென்மையாகவே இசைஞானி தொடங்குகிறார் பாருங்கள். அவளுக்கு மகிழ்ச்சி எட்டிப்பார்க்கிறது என்று, டமக்கு டக்கா என்று அதிரடி rhythms எல்லாம் இல்லை. மென்மை….மென்மை.. 🙂

அங்கே புல்லாங்குழலும், வயலினும் மாறி வந்து இசைக்க, லீடு கிடாரில் அம்சமாக இசையை எடுத்து, அதே மென்மையோடு இடையிசையை முடிக்கின்றார்.

அங்கே இருந்து பாடலை ஹம் செய்தால், இதை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.

நமது வெள்ளியிலே, இந்த பெண், பொன் உலா செல்கின்றாள் 🙂

ஆனால், சனி மற்றும் ஞாயிறு தினங்களில், இத்துணை சுலபமாக இருக்காது. ஆனால் நூல் பிடித்து சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். சரியா?

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget Problems? Please try this direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

In this movie, heroine is a dancer and the hero is a music-director.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: O Enthan Vaazhvile (ஓ எந்தன் வாழ்விலே) from Unakkaaga Vaazhgiren (உனக்காகவே வாழ்கிறேன்) (1986)

Advertisements