Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்றைய பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு இருந்தது கண்டு மகிழ்ச்சி. நண்பர் காமேஷின் இன்னொரு குறையைக் குறைக்கும் விதமாக — ஏறக்குறைய என்று வைத்துக்கொள்ளுங்களேன்🙂 — வருவது தான் இன்றைய க்ளூ.

அருமையான மெலடி கலந்த நக்கல் பாடல் இது. நேற்றைய முகப்பு இசையில் ஜென்ஸியின் ஹம்மிங்கில் லயித்திருந்தபோது, இந்த பாடல் தான் மனதில் வந்துக்கொண்டே இருந்தது. அவ்வளவே.

இதில் வரும் பல இசைத் துணுக்குகளை விட, உர்ர்ர்ம் உர்ர்ர்ம் என்று அழகாக பாடல் முழுவதும் வரும் bass guitar தான் அழகோ அழகு. கேட்டு பாருங்கள், புரிந்துகொள்வீர்கள்.

இந்த இசைத்துணுக்கை இன்றைய புதிரில் சேர்க்க முக்கியக் காரணம், இதில் வரும் group violins தான். முதல் 18 நொடிகளுக்கு ஒரு சிம்பொனி கணக்காக வரும் இந்த இடம் தான், இந்த பாடலைக் கண்டுபிடிக்க உதவும். இதன் பிறகு வரும் தபேலா, நிறைய பாடல்களில் வருவது போல சாதாரணமாகத் தான் இங்கும் வரும். அதனால், முதல் 18 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், 33ஆம் நொடிக்கு செல்லுங்கள். அங்கு ஒரு மென்மையான flute sequence வரும். அது முடியும் தருவாயில், ஹம் செய்து பார்த்தீர்கள் என்றால், சரணத்தை பிடித்துக்கொண்டே, ஜம்மென்று பல்லவியில் சங்கமித்துவிடலாம்.

இந்த பாடலை நாயகி, நாயகனை வம்புக்கிழுப்பது போல பாடுவார். ஏறக்குறைய தலைப்பில் வரும் பாடலை போல, வாய்யா, ஹாய்யா என்று அழைக்கிறாள். நல்ல வேளை! இன்று, இப்படி நாயகன் பாட ஆரம்பித்தால், இரண்டு வாரத்திற்கு முன் இந்திய ஜனாதிபதி கையொப்பமிட்ட அவசர சட்டத்தின்படி, பெண்ணை வம்பாடியதற்கு தண்டனையாக 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை அனுபவிக்க நேரும் :)) இதைத் தவிர, இந்த படத்தைப் பற்றியோ, பாடலைப் பற்றியோ வேறு ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஆனால், இந்த பாட்டுக்கு, இப்படி ஒரு அருமையான மெட்டை போட்டு, அதற்கு அருமையான orchestrationஐயும் சேர்த்து மிளிரவிட்ட இசைஞானிக்கு எத்துணை நன்றி சொன்னாலும் போதாது.

Have a nice week!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song was sung by Late Swarnalatha as a solo number.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Chithira Kili (சித்திர கிளி) from Chinna Devan (சின்ன தேவன்) (1993)