Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நிறைய நாட்கள் கழித்து மீண்டும் BGM வருகிறது. இன்று கொடுப்பதாக இருந்தது, கொடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலையாகவும் மாறியதற்கு காரணம், நமது அன்பு நண்பர் காமேஷ் ரத்தினம் அவர்களின் கீச்சுகள். அவற்றில் சில, இதோ.

அதனால், இன்று வந்துள்ள இசை, ஒரு சூப்பர் ஹிட் படத்தின் முகப்பு இசை (title BGM score). சில சமயம் படு துல்லியமாக, இரைச்சலை நீக்கி பதிவேற்றம் செய்தால், அதுவே வித்தியாசமாக ஒலிப்பதாக சிலர் முறையீடு செய்ததால், இதோ அது குறித்த சம்பிரதாய disclaimer. 🙂

Following BGM score was thoroughly noise-removed, using noise-reduction and noise-gate techniques, to eliminate the screen-noise, so that the female humming voice is clearly captured. Tempo of the track was NOT modified. One dialogue was censored for no obvious reason. Original track was recorded on a cassette tape from the TV, when the movie was telecast, many years ago and then digitized yesterday for noise-removal processing and was uploaded for today’s quiz.

நண்பர் காமேஷ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இதை ஒரு experimental பதிவாக எடுத்துக்கொள்ளுங்கள். அதாவது, விமரசனத்திலும், lifeline clueவிலும், சற்றுக் குறைவாகவே hints கொடுக்கின்றேன். அதைப் பற்றி விமர்சனங்கள் எழுமானால், கண்டிப்பாக இங்கே பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். அதற்குத் தகுந்தவாறு இனி வரும் BGM புதிர்களில் பழைய மாதிரியே, இன்னும் சற்றே விபரங்களைச் சேர்த்துத் தருவதா இல்லையா என்று முடிவு செய்ய வசதியாக இருக்கும். நன்றி 🙂

இன்றைய க்ளூவின் முகப்பு இசை, அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். இந்த அருமையான ஹம்மிங் வருகிறதே, அது படம் முழுக்க வெவ்வேறு சூழ்நிலைகளில் காதல் மற்றும் சோகம் என்று இருவேறு நிலைகளுக்கும் மாறி மாறி வரும். இந்தக் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று தெரிகிறதா?

கரெக்ட் — ஜென்ஸி தான் அது 🙂

அது சரி. இந்த இசைஞானியைப் பார்த்தீர்களா? இந்த ஹம்மிங் ஒன்று போதாதா? இதை வைத்தே, அருமையான பாடல் ஒன்றை அவர் இசைத்திருந்தால், பிய்த்துக்கொண்டு ஹிட் ஆகியிருக்கும் அல்லவா? Tune-conservationஐ அடியோடு விலக்கிவைத்து இசையைக் கொடுத்தவர் தான் இசைஞானி. அவரின் இசையாளுமைக்கு, இந்த முகப்பு இசையைவிட வேறு என்ன வேண்டும்! அவ்வளவு அழகான ஹம்மிங். ஒரு பாடலின் மெட்டு போலவே வருகிறது.

என்ன? தலை சுற்றுகிறதா? கண்டுபிடிக்க முடியவில்லையா?

பல க்ளூக்கள் கொடுத்துவிட்டேனே. தலையாயது, முகப்பு இசை என்னும் க்ளூ. இதை வைத்தே, நீங்கள் யூடியூப்பில் கண்டுபிடித்துவிடுவீர்கள்.

நிற்க — disclaimerல் நான் சொல்லியது போல, ஒலியின் ஆழம் இதில் அதிகம் இருக்கும். யூடியூபில் பதிவேற்றியவர் இரைச்சலை அகற்றாமல் அதை பதிவேற்றியிருந்தால், ஒலியின் தரம் வேறுவிதமாக இருக்கும். அதனால், கவனித்துக் கேளுங்கள், if you were to search in YouTube for confirmation.

இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால், இன்னொரு முறை replay செய்யுங்கள். 9 நொடியில் மாடுகள் பூட்டும் ஒலி எதையாவது நினைவுபடுத்துகிறதா? (ஜென்ஸியையும் நினைவில் கொண்டு யோசியுங்கள்).

இன்னும் முடியலையா?

சரி, மீண்டும் replay செய்யுங்கள். இப்போது 27-second marker இடம் ஒரு முக்கிய ஒலி வருகிறதே. 31-second marker வரை வருகிறதே. அது என்ன என்று தெரிகிறதா? இது தான் மிக, மிக முக்கியமான க்ளூ வரும் இடம். இதே ஒலியை நீங்கள் 2:40 to 2:43 இடத்திலும் கேட்கலாம். இது தான் இந்த க்ளூவின் மிக முக்கிய க்ளூவே :). இதை பிடித்துவிட்டீர்கள் என்றால், படத்தை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.

என்ன ஹம்மிங்குங்க இது? கேட்டு இருக்கீங்களா? எங்க, எப்போ? இந்த இசையை உங்களால் எந்த க்ளூவும் இன்றி கண்டுபிடிக்கமுடிந்ததென்றால், எப்படி முடிந்தது என்றும் சொல்லுங்கள். இசைஞானி ஜென்ஸியை வைத்து, ஒரு பாடல் போலவே முகப்பு இசையில் உள்ளே விட்டது போல், வேறு எந்த படத்திலும், முக்கிய பாடகர்/பாடகியை இறக்கியதாக நினைவு இல்லை. இருந்தால், சொல்லுங்கள்.

ஆரம்பத்தில் புல்லாங்குழல். நல்ல சகுனம் என்று செண்டிமெண்ட். மாடு பூட்டும் ஒலி. அதன் பின்னர், கொட்டு மேளத்தில் அடியோ அடி. அதன் பின்னர், ஷெனாயில் சுக ராகம். அதைத் தொடர்ந்து மேலே நான் சொல்லிய க்ளூ வரும் இடம் 🙂 அது முடியும் இடத்தில், ஆ…ஆ…ஆ… என்று ஜென்ஸி பிக்கப் எடுக்கும் இடத்தில் இன்று எல்லாரும் flat தான் என்று நினைக்கின்றேன். சிறுவயது நினைவுகள் மேலெழும்பினால், அதற்கு கம்பெனி பொறுப்பல்ல 🙂

அதே போல, அந்த ஹம்மிங் முடிந்து, மீண்டும் புல்லாங்குழல் இசை மற்றும் தபேலா மற்றும் கொட்டங்குச்சி வயலின் வாத்தியம் என்று மண்வாசனை நிரம்பிய இசையப்பா இது. ஆஹா!!! இதனுடன் ஒரு xylophone இசைக்கருவி இசை போலவும் வருகிறது. அங்கே சந்தூரும் இணைந்துகொள்கிறது.

இங்கே ஜென்ஸி இப்போ, தந்தன தந்தன தந்தனவுக்கு மாறிவிடுகிறார். Boy, whattay!

I have no words to say. This is bliss and it has to just sink in to even say anything more 🙂

இங்கே ஷெனாயும், சந்தூரும் இசைத்து முடிக்க, மீண்டும் ஜென்ஸி, முதலில் கொண்டு வந்த அதே ஹம்மிங்கில் பாடி முடித்துவைக்கிறார்.

அந்த கடைசி புல்லாங்குழல் sequence bit, சாப்பிட்டு முடிந்தவுடன், இலையை மூடிவைக்கும் போது, பீடா கொண்டு வந்து கொடுப்பார்கள் அல்லவா? அது மாதிரின்னு நெனச்சுக்கோங்க. 🙂

கண்டுபிடித்துவிடலாம் தானே?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This Director is heavily credited for freeing the Tamil cine industry from the clutches of indoor studios to shoot outdoors heavily. He was successful in almost shooting this whole title sequence, with the movie-camera positioned at low-angle to capture the train-tracks, while in motion, to give the audience a realistic view of traveling on the tracks. I cannot remember of any movie prior to this one, but, since then, many movies have used those motion-camera techniques.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kizhakke Pogum Rail (BGM) (கிழக்கே போகும் ரயில் (BGM)) from Kizhakke Pogum Rail (BGM) (கிழக்கே போகும் ரயில் (BGM)) (1979)

Advertisements