Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இது வரைக்கும் வந்த 195 புதிர்களில் படாத கஷ்டத்தை, இந்த புதிர்ல அளவுக்கு அதிகமாகவே பட்டுட்டேங்க. இன்னிக்கு வரும் இந்த புதிர் தான், ஒரிஜினலா நேத்து 194/365க்கு வந்திருக்கணும். முடியாம போயிடுச்சு. அப்படி இந்த புதிருக்கும் சவுண்டுகிளவுடுக்கும் என்ன தான் பிரச்சினையோ தெரியல. இதோ YouTube கைகொடுத்தது.

பட்ட கஷ்டத்துக்கு, நீங்க பதில் சொல்லி குளிர வச்சுடுவீங்கன்னு நம்பறேன். வழக்கத்துக்கு மாறாக, இந்த வெள்ளிக்கிழமைப் புதிர் சற்று கடினமாக இருந்தால், அதற்கு காரணம் இது தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


இன்னிக்கு களம் கொஞ்சம் புதுசு. இங்க classicalஉம், modernismஉம் செம்மண்ணில் கலந்த நீராக ஒன்றி வருகிறது. இம்மாதிரி electric guitarஉடன், கடம் இணைந்து வருவது, இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். என்னுடைய அனுமானம் தவறு என்றால், தயவு செய்து திருத்துங்கள்.

இந்த முழு sequenceஉமே, வெறும் percussionஐ மையமாக வைத்து வரும் ஒரு இசை துணுக்கு. எலெக்ட்ரிக் கிடார் வருவது உண்மை தான். ஆனால், ஆரம்பம் முதலே Western percussionஉம் தர்ம அடியோடு வருவதை கவனித்தீர்களா? அதனுடன் கடம். அவை இரண்டின் மீதும் ஏறி பயணிப்பது எலக்ட்ரிக் கிடார். பயங்கரப் புதுமை🙂 இதைத் தவிர வயலினோ மற்ற சங்கதிகளோ இல்லை.

இந்த படத்துல மற்ற சில பாடல்களும் நன்றாகவே இருக்கும். படம் பப்படம் ஆனது. இந்த படத்தை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. தெரியாதவர்கள் என்னைத் தெளிவடைய செய்தால், மகிழ்வேன்🙂

இதை கேட்ட மாத்திரத்தில் சிலரால் கண்டுபிடித்திட முடியலாம். அப்படி இல்லையென்றால், இந்த பாடலை நீங்கள் கேட்டே இருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இது குறித்து பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நன்றி.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Roja was the heroine. One of the singers’ name is that of a famous king. This movie’s title is very close to one of the blockbusters of Tamil cinema of all times🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Enga Ooru (எங்க ஊரு) from Karagaatakkaari (கரகாட்டக்காரி) (2005)