Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேத்து Twitterல, நம்மள போட்டு தாளிச்சுட்டாங்க நம்ம மக்கள். ஆஹா, என்னவொரு ஆனந்தம், என்ன ஒரு நக்கல், கிண்டல், RT, நம்மள tag எல்லாம் பண்ணி ஆயிரம் smileys வேற. ஆக ஒன்னு தெரியுது, ஜோக்கடிக்கறேன் பேர்வழின்னு கார்டூன் போட்டு சாத்தினவுக கிட்ட மட்டும் நான் நேர்ல மாட்டினேன், அவ்வளவு தான். முடிச்சுடுவாங்க. ஹ ஹா..Anyway, here is the humorous cartoon that drives home the point, thanks to @ptcv_. Boss, point well-taken. இன்னும் வரும் :))

#365RajaQuiz Troll :)

ஒன்னு தெரியுது, பாத்தீங்களா? அப்படி, இப்படின்னு வண்டி தடம்புரண்டா, Twitterல, அன்பு மக்கள் கிழிச்சுடுவாங்க. அதனால ரொம்ப carefulஆ இருக்கணும். எந்த புண்ணியவானோட யோசனையோ…கலக்கீட்டாங்க :))

இன்னிக்கு நான் கொடுக்க இருந்த க்ளூவே வேறங்க. எல்லாம் பதிவு செய்து, விமர்சனம் எழுதி, சகலமும் முடித்து விட்டு எழுந்தால், மாயமாக அந்த க்ளூவின் கோப்பை சவுண்ட்கிளவுட் நீக்கிவிட்டது. எத்துணை முறை முயன்றும், ஒன்னும் செய்ய முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் செலவு செய்தும் உபயோகமில்லை. பயங்கர ஏமாற்றத்துடன், இம்மாதிரி சூழ்நிலைகளை சந்திக்க என்று contingencyக்கு பதிவு செய்து வைத்திருந்த க்ளூவை இறக்கிவிடுகிறேன். இதையாவது விடுவார்களா என்று பார்க்கவேண்டும்.

இந்த பாடல் எவர்க்ரீன் க்ளாசிக் வகை பாடல். அருமையான ஹம்மிங்கோடு வரும் இந்த ஒற்றை வயலின், பாடலின் சோகத்தை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும். ஒரு வகையில், இந்த இரவில், இவ்வளவு செய்தும், அநியாயத்துக்கு சவுண்டுகிளவுடு, கோப்புகளை நீக்கும் போக்கு புரியாமல், சோகமாக இருக்கும் என் நிலையை பிரதிபலிப்பதாகவும் எடுத்துக்கொள்கிறேன். சாரி…ரொம்ப அலையவுட்டுட்டாங்க. இன்னிக்கு கொடுப்பதா இருந்த க்ளூவின் விமர்சனத்தை, காலவரையின்றி தள்ளிப் போட்டாச்சு😦 கடைசி நேரத்துல தடுக்கி விழவைக்கப்பட்டதில் வருத்தமே🙂

நன்றி. விடையை கண்டுபிடியுங்கள்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

A leading comedian of yesteryear will feature in this pathos song, while a leading Tamil TV serial actress will appear as well.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Chinna Puraa Onru (சின்ன புறா ஒன்று) from Anbe Sangeetha (அன்பே சங்கீதா) (1979)