Tags

, , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்று, இணையத்தில் வந்த விமர்சனங்களைப் பார்த்தேன். இந்த வாரம் வெளிவந்த படங்கள் அவ்வளவு மோசமா என்ன? மருத்துக்கு கூட யாரும் நல்லா இருக்குன்னு சொன்ன மாதிரியே தெரியல. இங்க அட்லாண்டாலயும் கடல் மற்றும் டேவிட் ரிலீஸ் ஆகியிருக்கு. விஸ்வரூபம் தமிழில் இரண்டாம் வாரம் ஒடுகிறது. இங்குள்ள மார்கெட்டுக்கு அது கொஞ்சம் பரவாயில்லைன்னு தான் சொல்லணும்.

நேற்றைய முறுக்கு விமர்சனத்தை படித்துவிட்டு, இப்படி ஆபீசில் எங்களை சிரிக்குமாறு விமர்சனம் எழுதினால், நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்து யாராவது தவறாக நினைக்கப்போகிறார்கள் என்று உற்சாகத்தோடு வந்த பின்னூட்டங்களைப் பார்த்து, நான் விழுந்து, விழுந்து சிரித்தேன்🙂


இன்றைய பாடல், அருமையான மெலடி பாடல். இது எந்த வருடம் வந்தது என்று சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால், Glorious80s தான் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். அந்த காலத்தில் அகில இந்திய வானொலியிலும், இலங்கை வானொலியிலும் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல் தான். பிற்காலத்தில், இணையம் மூலமாக பிரபலம் அடைந்தது என்றும் அறிகின்றேன். படத்தில் யார் நடித்தார்கள் என்ற விபரம் எனக்கு தெரியாது.

இந்த பாடலை அனுபவிக்க, மூன்று கட்டங்களாக பிரித்துக்கொண்டால் வசதியாக இருக்கும். Soundcloudல் அதை குறித்துள்ளேன். பார்த்துக்கொள்ளுங்கள்.

முதல் பகுதியில், புல்லாங்குழல் ஒலிக்க, மெலிதான தாள அமைப்போடு இசை பயணிக்கிறது. மாறி மாறி வரும் புல்லாங்குழல், மற்றும் வயலின் இசை.

அடுத்த இரண்டாம் கட்டத்தில் மாறி மாறி ஒலிக்கும் புல்லாங்குழல். இந்த கட்டம் முடியும் இடத்தை பாருங்கள். வயலினில் அழகாக வேகம் எடுக்கும் விதமாக அமைந்திருக்கும்.

கடைசியாக வரும் மூன்றாம் கட்டத்தில், சந்தூரின் அடி, மிக நேர்த்தியான அடி. அத்துணை அழகாக அந்த தாளத்தோடு சந்தூர் பயணிப்பது இந்த இசைக்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும்.

இந்த பாடலின் இசையை, ஆரம்பத்தில் வரும் அந்த ஒற்றை நொடிக்கும் குறைவான இடத்திலும் சரி, இசை முடியும் இடத்திலும் சரி. அங்கே தான் முக்கிய க்ளூ இருக்கிறது. இசை முடியும் தருவாயில் இருந்து ஹம் செய்தால், உடனே பிடித்துவிடலாம்.

வாழ்த்துகள்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This is a song, sung by P.Susheela, directed towards nature.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Udhaya Kaalame (உதய காலமே ) from Panchami (பஞ்சமி) (1983)