Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

புதிய மாதம் ஒன்று புலர்ந்திருக்கிறது. புதிய தொடக்கங்களும் தொடங்கட்டும். வாழ்வில் மகிழ்ச்சி செழிக்கட்டும். விஸ்வரூபம் பிரச்சினையில் முன்னேற்றங்கள் இருப்பது போல தெரிகிறது. மகிழ்ச்சி.

இன்று வெள்ளி. அதனால், சற்று சுலபமான பாடல் தான். இதற்கு ஏன் “Bottle Wave” என்று பெயர் வைத்தேன் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளதா? இதன் கோப்பை பாருங்கள்? கோப்பையை நிரப்ப ஆயத்தமாக இருக்கும் பாட்டில் வடிவத்தில் உள்ள இசையின் கோப்பு தான் இது.

20130201-062933.jpg

சில பாடல்களை ஒருமுறை கேட்டாலே மனத்தில் ஆழமாக பதிந்துவிடும். அது போன்ற பாடல் தான் இது. இடையிசையில், வயலின் இசைக்கு மத்தியில் அருமையான கோரஸ் பாப்பாக்களின் குரலில் வரும் ஹம்மிங், அப்படியே நம்மை சொக்கி இழுத்துவிடும். அந்த கொட்டு rhythmsஉடன் வரும் flute அப்படியே விவரிக்க முடியாத உணர்ச்சிகளை நம்மில் அரும்ப வைக்கும். அந்த கொட்டு தாளம், பாடல் முழுக்க வரும். அது தான் இந்த பாடலின் signatureஏ. இந்த படத்தில் மற்ற பாடல்களும் நன்றாக இருக்கும். இருந்தாலும், இந்த பாட்டு தான் படு ஹிட்.

அருமையான டூயட் பாடல்களில், நாயகனும் நாயகியும் கடலையை உடைத்து சாப்பிடுவது, நீச்சல் குளத்தில் டென்ன்ஸ் யூனிபார்ம் போட்டுவிட்டு பந்தாடுவது, பாலில் திராட்சை பழம் விழுவது என்று படுபயங்கர imaginationக்கு மத்தியில் இதோ வருகிறது முறுக்கு! ஆம், முறுக்கு தான்.

இந்த பாடலின் ஆரம்பத்தில், பெரிய குழாய் மீது நாயகன் நிற்க, காதல் வயப்படும் நாயகிக்கு குழல் முறுக்கை கைகளில் கொடுக்கின்றான். அந்த முறுக்கை கைகளில் வாங்கிய நாயகி, புன்முறுக்கை இடுகிறாள்….ச்சீ…மன்னிக்கவும்.. புன்முறுவல் இடுகிறாள்.

இப்படிப்பட்ட கற்பனையை யாராவாது செய்ய முடியுமா? இல்லை முடியுமங்கறேன் 🙂 காதல் செய்யும் வேளையில் கூட, முறுக்கில் குறியாய் இருந்த டைரக்டர், டூயட்டை, சந்தக் கட முறுக்கு மூலமா தொடங்கறோம் ராஜா சார் னு சொல்லியிருப்பாரா? அதற்கு ராஜாவின் பதில் என்னவாக இருந்திருக்கும்? எனக்கு இப்பவே முறுக்கு சாப்பிடணும் போலிருக்கு…அப்ப தான் டூயட் வரும்….அடையார் ஆனந்த பவன்ல இருந்து ஒரு டின் முறுக்கு ஆர்டர் பண்ணிடுங்க னு சொல்லியிருப்பாரோ? 🙂

இப்படி தொடங்க எப்படி தான் டைரக்டருக்கு மனசு வந்துச்சோ. அடடா..இப்படிப்பட்ட திறமைசாலிகள் நிறைந்த இடத்தில், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, பேரிக்கான்னு இந்த கமல், ரொம்ப தான் காமெடி பண்றார். இல்லையா? 🙂

20130201-063141.jpg

சுலபம் தான். கண்டுபிடிங்க பார்ப்போம். கண்டுபிடித்தால், உங்கள் வீட்டுக்கு முறுக்கு அனுப்பி வைக்கிறேன். Offer valid only within continental USA 😉

Have a great month ahead 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

At a time, when “dhoti-clad” has become such a sensational topic in Tamil Nadu, this song features a “dhoti-clad” hero, dancing this duet with the heroine and extras in full slow-motion throughout. Heroine’s mother was a great Tamil actress herself.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Malligai Mottu (மல்லிகை மொட்டு) from Sakthivel (சக்திவேல்) (1994)

Advertisements