Tags

, , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

நேற்றைய தினம் தமிழகத்தில் நடந்தேறிய சம்பவங்களின் தாக்கம் நிறைய பேர் மீது இருப்பதை கண்கூடாக காணமுடிகிறது. நானும் சினிமா பார்ப்பேன். ஆனால் எந்த குறிப்பிட்ட நடிக-நடிகையருடைய ரசிகனும் இல்லை. பல பேரை பிடிக்கும். அவ்வளவு தான்.

அதில் கமல்ஹாசனின் படங்கள் என்றால் கொஞ்சம் விருப்பம் அதிகம். அவருடைய பல படங்கள் என்னை சிரிக்க வைத்து வயிற்றை புண்ணாக்கி இருக்கிறது. மெல்லிசை மன்னர் MSVயிடம் ஒளிந்து இருந்த அந்த sense-of-humorஐ துல்லியமாக கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய காதலா, காதலாவை சொல்வதா, அழவைத்த, சிந்திக்க வைத்த, அன்பே சிவம்பற்றி சொல்வதா, +2 பரீட்சை என்றும் பாராமல் மீண்டும், மீண்டும் பார்க்கத் தூண்டிய குணாவை சொல்வதா? எதைப்பற்றி சொல்வதென்றே தெரியாத அளவுக்கு அவருடைய படங்கள்…அப்பப்பா… 🙂

எடுத்த ஒவ்வொரு விஷயத்திலும் சாதிக்கவேண்டும் என்று நேர்மையாக, யாருக்கும் தலைவணங்காமல் இருக்கும் அவர், இந்த போராட்டத்தில் தன்னையே இழந்துவிடாமல், சீக்கிரம் இந்த சிக்கலுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று வாழ்த்தி, புதிருக்குள் நுழைகின்றேன். உச்ச நீதிமன்றம் மிச்ச நீதியை வழங்கினால் மகிழ்ச்சி.

நிற்க. சிறு வயதில், இந்த குறளை, சேரன் பேருந்தில் படித்தது ஞாபகத்துக்கு வருகிறது.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

இந்த குறளுக்கு, எனக்கு கமல் தான் நினைவுக்கு வருகிறார்.


இன்றைய புதிரின் பாடல் சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறது. சில படங்கள் பல காலங்களை கடந்து நிற்கும். அது மாதிரி இந்த படமும். ஆனால், படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், நடிப்பு, இதெல்லாம் எத்துணை பேருக்கு ஞாபகம் இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், இந்த படம் வேறொரு மிக முக்கிய காரணத்துக்காக மிகவும் பிரபலம் ஆனது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. அதிலும் இதில் வரும் ஒரு தாலாட்டு பாடல், இந்த டூயட்டை விட எனக்கு மிகவும் பிடிக்கும். இருந்தும் இந்த டூயட் பாடல் மிகவும் பிரபலமானது என்ற காரணத்தால் கொடுக்கின்றேன் 🙂 வயலின் மற்றும் கிடாரின் இசையுடன், தபலா இசையும் சேர்ந்து வருவது தான் சிறப்பு. அதுவும் ஆரம்ப இசை சற்று உச்சத்தில் இருந்து மெல்ல கீழிறங்கி வருவதும் அழகு. அடிக்கடி இணையத்திலும், வானொலியிலும் கேட்டிருக்கக்கூடிய பாடல். இந்த படம் பலவித காரணங்களுக்காக பிரபலமானதால், பாடல்கள் சற்று பின்னிக்குத் தள்ளப்பட்டன.

பிற்காலத்தில் இணையம் மூலமாக இந்த பாடல் பிரபலமடைந்து நிறைய பேரிடம் சென்று சேர்ந்தது மகிழ்ச்சி தரும் ஒன்று.

சின்னக்குயில் சித்ரா, அருமையாக இந்த பாடலை பாடியிருப்பார்.

கண்டுபிடியுங்கள்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

First line of this song refers to a type of bird.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Irattai Kiligal (இரட்டைக் கிளிகள்) from Ore Oru Gramathile (ஒரே ஒரு கிராமத்திலே) (1988)

Advertisements