Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

எத்துணையோ பேர் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் பார்போற்றும் மகாத்மாவாக சிலர் மட்டும் வாழ்ந்து செல்கிறார்கள். காந்தி மகாத்மா இறந்து 65 வருடங்கள் ஆகிவிட்டன. விடுதலைக்காக போராடின அவரது உயிரை காவு வாங்கிய வெறி, இன்னும் அதே வீரியத்துடன் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது என்பதை கண்கூடாக காணமுடிகிறது. அவருக்கு நம் வந்தனங்கள்.


நேற்று சென்னை உயர் நீதிமன்ற ஆணை வந்தும், படு சூடாக சென்றிருக்கிறது இரவு. இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம். மக்களின் நலன் கொண்டு எல்லாரும் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.


இன்றைய பாடல் அருமையான மெலடி. ஆனால், இந்த படம் வெளிவர மிகவும் சிரமப்பட்டு பெட்டிக்குள் இருந்தது. இறுதியாக வந்ததா என்று தெரியவில்லை. இது குறித்து எவருக்கேனும் தெரியும் என்றால், தயவு செய்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

இசையை கேளுங்கள். முதலில் நாயன ஓசையுடன் கொட்டும் கொட்டுகிறது. உறுமியும் உறும, அங்கே வரும் அரு அருமையான transformation புல்லாங்குழலுக்கு….அது தான் இந்த பாட்டின் themeஏ. ஹீரோ, பெரிய flute specialist. அவனுடைய fluteக்கு தகுந்த மாதிரியே இந்த பாட்டு முழுக்க இசைஞானி உரையாடல் கலந்த பாடலாக தந்திருப்பார். இந்த பாட்டை டி.வியிலோ ரேடியோவிலோ கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. May be Satellite Cable TV, is possible.

நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் நடித்திருந்தார். ஒரு பிரபல முனைவர் வேறு நடித்திருந்தார் என்று நினைக்கிறேன். அவ்வளவு தான் தெரியும். இசையை வைத்து நீங்கள் கண்டுபிடிப்பதில் தான் இதன் சூட்சுமம் இருக்கிறது.

Try harder🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

1st line of this song will have the hero address this song to “air/wind/gale”. In a way, this song is about the gale/wind/air that is very intimate with the flute he plays!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaathe Kaathe (காத்தே காத்தே) from Kaathal Saathi (காதல் சாதி) (2002)