Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்று வரும் என்று எதிர்பார்த்தது தள்ளிப் போய் விட்டது. இந்தியாவில் இருக்கும் அன்பர்கள், நேரம் கிட்டினால், இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். நாட்டு நிலவரமும் அதன் detachmentஉம், “Rule of Law” பிரகாரம் நடக்கிறதா என்று உரசிப்பார்க்க ஏதுவாக இருக்கும்.

Rule of Law

இது எதுக்கு இன்னிக்கு சொல்றேன்னு நெனக்கறீங்களா? புத்திசாலிகளான உங்களுக்கு எதுக்கு அதெல்லாம் சொல்லிட்டு🙂


இன்றைய பாடல் க்ளூ அருமையான ஒரு டூயட் மெலடி. இந்த பாடலை அந்த காலத்தில் கேட்காதவர்கள் குறைவு. கிசுகிசுக்கு பேர் போன அந்தக்காலத்து ஜோடியின் மெலடி. இந்த இடையிசையில் ராஜா, அருமையாக மூன்று வித கட்டங்களில் மாறி, மாறி இசையை வழங்கியிருப்பார். அதை soundcloud commentsல் காட்டி இருக்கிறேன். வயலிங்களில் ஆரம்பமாகும் இந்த இசையானது, புல்லாங்குழல் மற்றும் keyboardஸ்ல் பயணிக்க, இரண்டாம் கட்டத்தில் முழுக்க keyboardsல் வந்து, மூன்றாம் கட்டமாக flutesல் முடிகிறது. இந்த பாடலை கண்டுபிடிக்க, இந்த மூன்று கட்டங்களில் வரும் இசை தான் சிறந்த க்ளூ. நன்கு உற்று கேட்டீர்கள் என்றால், இந்த பாடலின் சரணத்தின் மெட்டு காதில் ரீங்காரமிடும். அதை பிடித்துக்கொண்டே பல்லவிக்குள் நுழைந்துவிடலாம். இந்த பாடலில், பல்லவியும், சரணமும், ஏறக்குறைய ஒரே சந்த மெட்டு அமைப்பு கொண்டது.

அருமையான மெலடி பாடல்களில் இதுவும் ஒன்று. அதுவும், இந்த பாடலின் சரணத்துக்கு நான் என்றென்றும் சரணம். அவ்வளவு, கிராமியம் கலந்த டூயட். நாக்க மடிச்சு, சூப்பர் பிகில் போட வேண்டியது தான்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This is a cuckoo’s song🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Maalai Karukkayil (மாலை கருக்கயில்) from Neethiyin Marupakkam ( நீதியின் மறுபக்கம்) (1985)