Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

நன்றி 🙂

ஆம். இன்றோடு, நமது இசைஞானி இளையராஜாவின் புதிர் பயணத்தில் 50% பாதையை கடந்து, அடுத்த பாதிக்குள் அடியெடுத்து வைக்கிறோம்.

இவ்வளவு நாட்களில், எத்துணை நல்ல உள்ளங்களை சந்திக்கும் (virtual and real) வாய்ப்பு கிட்டியது! ஆகா. அதுவும், ஒவ்வொரு நாளும், அவரவர் வேலைப்பளுவின் நடுவிலும், பயணத்தின் நடுவிலும், எப்படியும் பதில்களை பதித்துவிட வேண்டும் என்ற துடிப்பிலும், இந்த பாட்டை நான் ஹம்மிங் செய்துட்டே இருந்தேன் பல நாட்களா…மண்டையே வெடிச்சுடும் போல இருந்துச்சு மாஸ்டர்..என்ன பாட்டுன்னு கண்டே பிடிக்க முடியல…ஆனா இன்னிக்கு அந்த பாட்டையே நீங்க கேட்டவுடனே டக்குன்னு கண்டுபிடிக்க முடிஞ்சது, பெரிய சந்தோசம் மாஸ்டர்… என்கிற ரீதியில் இருந்து, இன்னும் பலவித பரிமாணங்களில் — ராஜா இசையில் அவ்வளவு நாட்டமில்லாமல் இருந்த இந்த xyz fanஐ கூட, இந்த #365RajaQuiz மனசு மாற வைக்குதே ன்னு சுகமான புலம்பலோடு ரவுண்டு கட்டு அடித்து பதிலை பதிக்கும் நண்பர் ஒருவர் வரை, என்று பேசிக்கொண்டே போகலாம் :).

கொடுக்கும் text-cluesல் கடுப்பாகி, திட்டுவதில் இருந்து 🙂 அங்கலாய்த்துக் கொள்வது வரை, இந்த பாடகர்/பாடகி பாடல்கள் ஏன் இன்னும் வரலை ன்னு உரிமையாக கோபித்துக்கொள்வது தொடங்கி, text-clues அறவே இல்லாமல் நீங்கள் புதிர் கொடுக்க வேண்டும் என்று உரிமையோடு உரக்கச் சொல்வது வரை என்று ஒரு kaleidoscope of passion and feelingsக்கு நடுவே, இந்த 50% மைல்கல்லை தாண்டுவதில் மனம் நிறைவு அடைகிறது. உங்களுக்கு எப்படி? 🙂


இந்த மைல்கல்லை தாண்டும்போது உங்களுக்கே ஒரு உண்மையை நான் போட்டு உடைக்கத்தான் வேண்டும். இந்த ஒரு வாரமாக ஏன் க்ளூ பீரியட் பாடல்களாக வருகிறது என்று ஒரு நிமிடமாவது யோசித்தீர்களா? அப்படி யோசித்து இருந்தீர்கள் என்றால், ஏன் அதை பற்றி கேட்கவில்லை? அல்லது, ஏன், இப்படி பீரியட் பாடல்களாகவே கேட்டால் எப்படி? எப்ப வேற காலத்துக்கும் நகர போறீங்கன்னு ஒரு வித விரக்தியிலாவது கேட்டிருக்கலாமே? You know what? Not even one person complained within the past week. I was trying my best to see if there will be at least one to complain. But, nobody did. 🙂

இதில் என்ன ஸ்பெஷல் என்று நீங்கள் நினைக்கலாம். நிறைய இருக்கிறது நண்பர்களே. நிறைய இருக்கிறது. 🙂

ஆரம்ப காலத்தில், இந்த புதிர் வந்த போது, நிறைய கருத்துகள், expectations and differences வந்தது. அதில் ஒன்று, இளவயது ரசிகர்களுக்கு ஆரம்ப கால பீரியட் பாடல்கள் என்றால் படு அலர்ஜியாக இருந்தது. சில expert ரசிகர்களுக்கு, என்னங்க நீங்க, அந்த பீரியட் பாடல்கள் பக்கமே போக மாட்டேங்கரீங்களே ன்னு ஒரு சின்ன வருத்தம்.

அப்போது நான் தனிப்பட்ட முறையில் அவர்களிடத்தில் சொன்னேன், Let us gradually introduce those period songs as I first need to gauge the audience for our site and to see what their comfort level is. Even if they have an aversion for the “period” songs, I am very confident that we can gently take them, in a very slow and persistent manner, without coming out as off-putting. If we can do that, they will gradually develop a liking — to a point that they will not complain about period songs anymore.

பெருமைக்காக சொல்லவில்லை. அன்று எதை நினைத்தேனோ…நினைத்தது மட்டுமல்ல, நினைத்ததை நம்பினேனோ, அதை அப்படியே நிரூபித்து இருப்பது நீங்கள். இங்கே பெருமைப்பட வேண்டியது நான் இல்லை — நீங்கள். ஒரு காலத்தில், அய்யோ, வேண்டாமே பழைய பாடல்கள் என்று சொன்ன உங்களில் சிலர், இந்த வாரம் முழுக்க அதையே கொடுத்தும், ஒருவர் குரலை உயர்த்தி “வேண்டாம்” என்று சொல்லவில்லை.

அன்புள்ள மலரே, ஜோதி இதெல்லாம், அந்த காலத்து ரசிகர்கள் கூட அவ்வளவு சுலபமாக சொல்லக்கூடிய படங்களோ, பாடல்களோ அல்ல. அப்படி என்றால், இங்கே யார் பெருமை படவேண்டும்? நீங்கள் தான். 🙂

Because, it is not easy to contain our own prejudices and biases. To turn an aversion into a liking is not easy. Yet, that is what was achieved here. Kudos, folks. You people rock. Nothing gives me as much satisfaction in crossing this 50% landmark, than this 🙂

And the moral of the story here is to allow people — especially with unseen faces and unknown personalities — to have their own space and wiggle-room, before you make them slog on anything. This could be at work, personal-life, or just an online quiz like #365RajaQuiz. Allowing folks to like what they do, goes in a long way to get the best out of them. It might take a bit time, but, it always works. காதல் தேகங்கள் கொடுக்கும்போது, ரெக்ஸ், ‘வேற சுசீலாம்மா பாட்டே கிடைக்கலையா’ன்னு நல்லா திட்டு வாங்கப் போற மக்கள் கிட்டனு நெனச்சுகிட்டே தான் கொடுத்தேன். கலக்கி அடிச்சீங்க. நான் உண்மையில அசந்தே போனேன். அதே மாதிரி, இனிமேல் நாளும் .

Anyway, பீரியட் பாடல்களின் கடைசியாக இன்று வரும் பாடல். நானும் பார்த்து பார்த்து ஓய்ந்து போய்விட்டேன். நீங்களும் complaint செய்வதாக தெரியவில்லை (which is a good thing, BTW). அதனால் நாளையில் இருந்து சற்று புதிய பாடல்கள் பக்கம் நாம் திரும்புவோம். சரியா?


இன்றைய பாடலுக்கு ஒரு disclaimer அவசியம். இந்த பாடலை தான், நான் 182/365யில் கொடுக்கவேண்டி இருந்தது. ஆனால் encodingல் சொதப்ப, அதை நிவர்த்தி செய்ய போக, எல்லாமும் அழிந்துபோக, நேரம் வேறு ஆகிக்கொண்டே இருந்த காரணத்தால், “12th man”ஐ களம் இறக்கவேண்டி ஆகிற்று. அது தான் நேற்று நீங்கள் கேட்ட பாடலின் ரகசியம்.

இன்றும் மீண்டும் போராடினேன். பதிவு செய்ய. பிரச்சினை என்னவென்றால், இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே, தரம் மிகவும் குறைந்தே காணப்படும். என் நண்பர்களின் வீடுகளில் இதே பாடலை பல வருடங்களுக்கு முன் கேட்டபோதும் சரி, என்னிடமே உள்ள ஒலி நாடாவிலும் சரி, இணையத்தில் உள்ள அனைத்து versionsலும் சரி, பாடலின் தரம் படுபயங்கரமாக இருக்கும். ராஜாவுக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான் போலும். ஒரேயொரு master LP-Disc கிடைக்காதா என்று நான் ஏங்கும் படங்களில் இதுவும் ஒன்று.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மீண்டும் மீண்டும் encode செய்ய செய்ய, ஒரே ஒரு attemptல் மட்டும் நன்றாக அமைந்தது. இது தான் சரி. இதை விட்டால் இனி சரி படாது என்று எண்ணி, உடனே encodingஐ முடித்துவிட்டேன். என்னை பொறுத்த வரை, அருமையாக வந்திருக்கிறது. இதை நீங்கள் இணையத்திலோ அல்லது உங்களிடம் உள்ள வர்ஷனில் கேட்டாலோ, அந்த guitar-strumming and parallel group violins and santoor எல்லாமும், இவ்வளவு depthஆக ஒலிப்பதை கேட்கமுடியாது என்றே நினைக்கிறேன். அதற்கு காரணம், source! வேறு எங்காவது நல்ல தரத்தில் இந்த பாடல் இருந்தால் சுட்டுங்கள்.

ஆனால் பாருங்கள். இந்த பாடலின் இடையிசை எப்படி தூக்கலாக இருக்கிறது என்று. இது என்ன விதமான கிடார்? கண்டிப்பாக it must be a special guitar. It sounds very different. அதே போல, இந்த guitar மெல்ல percussionக்குள் நுழைந்து, guitarsஇடம் transform ஆகும் தருணத்தை நன்கு கவனியுங்கள். அதில் இருந்து totalஆக group violinsக்குள் merge ஆவது மட்டுமல்லாமல், parallel group-violinsல் வேகம் பிடிக்கும் போது, எப்படி வேறு விதமாக ஒலிக்கிறது என்று பாருங்கள். பின்னர், மீண்டும் அந்த guitar உள்ளே வர, எதிர்பார்க்காதபோது சந்தூர் உள்ளே நுழைந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் நான் soundcloud commentsல் காண்பித்துள்ளேன். அங்கே பாருங்கள்.

இந்த பாடலை இலங்கை ஒலிபரப்பிலும், அகில இந்திய வானொலியிலும் கேட்காமல் இருந்திருக்க முடியாது. தூர்தர்ஷனில் ஒரு முறை கூட இந்த பாடல் எல்லாம் வந்ததில்லை. ஆனால் இன்று இணையத்தில் இது முக்கியமான ஒரு இசைஞானி பாடலாக வலம் வருவது கண்டு மகிழ்ச்சியே! ஒரு முறை கேட்டல் பல முறை கேட்கத்தூண்டும் டூயட் பாடல். இந்த பாடலை பாடிய ஆண் பாடகர், அடிக்கடி இந்த பாடலையும் பேட்டியில் நினைவுகூர்வதை நான் கவனித்திருக்கிறேன். 🙂 The very opening of the song will take you to a different world. So, will the subdued interludes with brilliant orchestration.

அனைவருக்கும் மிக்க நன்றி. Second half of the game has started officially with 183/365. I hope, somebody else will take the baton from where I leave in 365/365, so that I can be a participant to tease my wits to answer a different “Quizmaster”. I am looking forward to that.

But, for now, I am focused on getting there to the summit — 365/365 — by His grace. Thanks.

Have a nice Sunday.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Hero of this movie had a comeback recently as he donned the villain role against prominent heroes. One such mega blockbuster was released even a couple of months ago.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: O Nenjame (ஓ நெஞ்சமே ) from Enakkaaga Kaathiru (எனக்காக காத்திரு ) (1981)

Advertisements