Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

நேற்றைய ஒரு நெகிழ்ச்சியான செய்தி என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. நீங்களே இங்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆக, இந்த புதிர் நிகழ்ச்சியால், சில உணர்வு பூர்வமான மாற்றங்கள் கூட நடக்கின்றது என்று பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பகிர்ந்துகொண்ட அந்த நண்பருக்கு மிக்க நன்றி.


இன்றைய பாடல் கோவை அகில இந்திய வானொலி மக்களுக்கு அந்த காலத்தில் மிக, மிக பிடித்த பாடல் என்றே சொல்லலாம். அந்த படத்தில் இன்னொரு அருமையான டூயட் இருக்க, அதென்னவோ தெரியவில்லை, இந்த பாடலின் மீது செம மோகம். எப்போதும் இந்த பாடலையே போடுவது அவர்களின் அந்தக்கால வாடிக்கை.

இன்று வெள்ளி என்பதால், சற்றே சுலமபான இந்த பாடல். அனால், இந்த வார இறுதியில் சற்றே மேடு ஏறத் தயார் நிலையில் இருங்கள். இந்த பாடலைக் கேட்ட பின்னராவது உடற்பயிற்சி செய்ய நம்மில் ஒருவர், இருவர் ஜிம்மை நோக்கி ஜம் என்று சென்றால், நல்லது. என்ன செய்வோமா?

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதில் வரும் அந்த guitar-strummingக்காகவும், அதில் அவர் சொல்லும் 1..2..3..4 க்கு இசைஞானியின் trumpetsஐ கவனியுங்கள். என்ன style, என்ன class! அப்படியே, அந்த நெம்பரிங்க்கு ஏற்றவாறு trumpet நெத்தியடி கொடுக்கும். அது மட்டுமல்ல, அந்த entire sequenceல் வரும் percussion மற்றும் guitars and keyboards…அப்பப்பா…செம classங்க. Please take a look at the Soundcloud comments🙂

அந்த காலத்துல, இது ஒரு செம peppy song. இத கேக்காத அன்றைய இளசுகள், இன்றைய பழசுகள் (including yours truly LOL :)) இருக்கவே முடியாது.

இந்த பாடலை மட்டுமன்றி, அனைத்து இசைஞானி இளையராஜாவின் பாடல்களையும் திரும்ப திரும்ப போட்டு எம்மை வளர்த்த, திரு. சௌந்தர்ராஜன், திரு. கமல், திருமதி. கமல், திருமதி. சித்ரலேகா சுகுமாரன் — இவர்களுக்கு பெரிய கும்பிடு.

ஆமா, யாரு அவங்க? அதானே? அந்த காலத்து எங்கூர் ரேடியோ ஜாக்கிஸ் + அறிவிப்பாளர்கள். :))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

When this actress was at the helm of her career, there were even “bangles” that had her name as the style. Title of this movie has a floral character as well.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sikkendru Aadaiyil (சிக்கென்று ஆடையில் ) from Iniya Uravu Poothathu (இனிய உறவு பூத்தது) (1987)