Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே. இந்த வாரம் எல்லாரும் நல்ல மகிழ்ச்சியுடன் பங்கேற்க, மெலடி பாடல்களா காரணம்? அப்படி என்றால், இன்றும் அதுவே.

கடந்த நவம்பர் மாதம் வாஷிங்டன் டி.சி போய்கொண்டிருந்தபோது, அப்பலாச்சியன் மலைகளின் நடுவே, நண்பர் @VRSaranஇடம் கூடிய விரைவில், உங்க பேவரிட் SPB டூயட் பாட்டு ஒன்னு தர்றேன், அத கேளுங்க. அதுல அவர் பாடியிருக்கிற ஸ்டைல் கொஞ்சம் மலேசியா வாசுதேவன் அண்ணன் டூயட் மாதிரி இருக்கும் னு சொன்னேன். அவர், உடனே படு குஷியாகிவிட்டார். இப்போது அவருக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால், அந்த பாடல் இது தான். உங்களுக்கும் அப்படி தோன்றுகிறதா என்று சொல்லுங்கள்.

ஏன் திடீர் என்று இந்த பாடல்?

இப்படி நீங்கள் யோசித்தால், என்னுடைய பதில் எப்பவும் போல், ஒன்று தான். நேற்றைய பாடலை கேட்கும்போது அந்த melodious interlude எல்லாரையும் சுண்டி இழுத்தது அல்லவா? அதே போல் தான் எனக்கும். சுண்டி இழுத்ததோடு மட்டும் அல்லாமல், இந்த பாடலின் மிக அருமையான melodious interludeஐ நினைவுபடுத்த, இந்த பாடலுக்கான விடிவு இன்று வந்தேவிட்டது.

நேற்று போலவே இந்த பாட்டும் கனவு பாட்டு தான். டூயட் தான்.

உண்மையில், இந்த interludeஐ நீங்கள் கேட்டால், அப்படியே அதில் சொக்கி, லயித்துபோய், சேது படத்தில் வரும் விக்ரமின் நிலைக்கு போய்விடுவீர்கள். இசைஞானியின் பாடல்களை கேட்டு, அந்த பரவச நிலையில் நாம் இருக்கும்போது, அப்படியே நம்ம சாமியார் மயிலிறகை கொண்டுவந்து அப்படியே ஸ்பரிசித்துவிட்டு போவது போல வரும் interlude தான் இது.

எப்படி இருக்கு பாருங்க. Violins அலைகள் போல வருகிறது. அங்கே guitarsஉம் keyboardsஉம் வர, அட்டகாசமான flute வருகிறதே, அது தான் படு sweet. This sequence with that flute will keep you hooked forever to this song. அதுவும், அதனுடன் பின்னர் அடியெடுத்து வரும் சந்தூரும், முடியவிருக்கும் அந்த keyboard சங்கதியும் அருமையிலும் அருமை.

இன்னும் சில ஒற்றுமைகள்:

இந்த படத்திலும் மற்ற ஹிட் பாடல்கள் இருக்கு. அதுல ஒன்னு மலேசியா அண்ணன் பாடியிருக்கும் ஒரு ஜாலி, குறும்பு பாட்டு.

நேற்றைய படத்தில் ஒரு பெண் சோலோ சூப்பர் ஹிட் பாட்டு இருக்கற மாதிரி, இதிலும் இருக்கு.

நேற்றைய பாடலும் ஊட்டி, இந்த பாட்டும் ஊட்டி (சில சீன்ஸ்). குறிப்பா இந்த interlude பனிக்குளிரில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் படமாக்கப்பட்ட குளுகுளு பாட்டு 🙂

நேற்றைய பாட்டும் ஒரு சூப்பர் மெலடி ஜெம். இதுவும் அப்படியே. நேற்றையதும் அவ்வளவாக வெளியே தெரியாமல் போனது. இன்றைய பாடலுக்கும் அதே நிலைமை தான்.

நேற்றைய பாட்டும் அவ்வளவாக வானொலியில் நாங்கள் கேட்டதில்லை (நண்பர் @rozavasanth நேற்றைய பாடலை சிலோன் ரேடியோவில் கேட்டதாக என்னிடம் சொன்னார். மற்றவர்களும் பகிர்ந்தது போல, நேற்றைய பாடலை அகில இந்திய வானொலியில் அதிகம் கேட்டதில்லை.) அதே போல, இன்றைய பாடலையும் அதிகமாக அகில இந்திய வானொலியில் கேட்டதில்லை. மிக, மிக குறைவாகவே கேட்டிருக்கிறேன்.

ஒரு சிறு பிசிறு ஒன்றை தெரிந்தே விட்டுவைத்து இருக்கிறேன். அது உங்களுக்கு ஒத்தாசையாக இருக்கலாம். கண்டுபிடியுங்கள் இந்த அட்டகாசமான டூயட்டை 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This one-word movie bears a female’s name and the first line of this song has one of the famous hills of Tamil Nadu.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sirichaa Kolli Malai (சிரிச்சா கொல்லி மலை ) from Jothi (ஜோதி) (1984)

Advertisements