Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். இந்த பாடகியை பிடிக்காதாவர்கள் யாரேனும் உண்டா? இல்ல, இருக்க முடியுமாங்றேன் 🙂

மெல்லிசை மன்னரின் பாடல்களில், இவருடைய டூயட்டுகளும், தாலாட்டுகளும், சோக கானங்களும் என்று தொடங்கி, இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் வரைக்கும் — அட, கார்த்திக் ராஜாவுடைய பாடல் வரைக்கும், இவருடைய பாடல்கள் எத்துணை எத்துணை தலைமுறையினரை தன் வசம் இழுத்து, கட்டி வைத்துள்ளது. இவருடைய, நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா வை, வேறொருவர் பாடுவதை கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. யார் அந்த மலையாள படம் எடுத்த புன்னியவான்னு தெரியல, அய்யர் தி கிரேட் னு ஒரு படம் வந்துச்சு. மம்மூட்டி Nostradamus அளவுக்கு நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லக்கூடியவர். அவருக்கு மனைவி கீதான்னு நெனைக்கறேன். அவருக்கு காதல் ஏறினாலே, உடனே, “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாட்ட கிராமபோன் ரெக்கார்ட்ல பாடற மாதிரி இயக்குநர் சீனை அமைத்திருப்பார். அவர் மாதிரியே, நானும் அந்த பாட்டுக்கு செம crazyங்க. இது இசைஞானி Quiz என்பதால், அவருடைய இசையில், இவருடைய பாடல்களை பேசுவதை தவிர்க்கிறேன். I will not out the question-paper 🙂 Anyway, இவர எனக்கு ரொம்ப பிடிக்குங்க.

பி. சுசீலா

தனிப்பட்ட முறையில,70/365 – #365RajaQuiz – Child-Deprivation is a Sin! பாட்டு நம்ம புதிர்ல வந்தப்போ, எவ்வளவு பேர் தொடர்பு கொண்டு அவர்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டார்கள் தெரியுமா?

அட, நம்ம @RagavanG, ஆரம்ப காலத்துல எங்கிட்ட சண்டைக்கே வந்துட்டார், ஏன் சுசீலாம்மா பாட்ட போடலைன்னு. அவர மாதிரி யூத்(?)களை கூட இவரின் குரல் இழுத்து வைத்திருக்கிறது என்றால், அது தான் சுசீலாம்மா.

இந்த பாடல் எவ்வளவு பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. அருமையான, அழகான, அம்சமான அந்தக்கால மெலடி டூயட் பாட்டு. கனவுப்பாட்டு. நாயகி தேன்நிலவுக்கு நாயகனோடு ஊட்டிக்கு போவது போல சீன். அங்கே, அருமையான ஹம்மிங்குடன் சுசீலாம்மா இந்த பாட்டை ஆரம்பிப்பாங்க பாருங்க…ஆஹா. அவ்வளவு அருமையா இருக்கும். இசைஞானி இளையராஜா, அவ்வளவு அழகா, அடக்கி ஆண்டிருப்பார் இந்த பாட்டுல. ஆரம்ப preludeம் கலக்கும், இடையில் வரும் இந்த interludeம் கலக்கும். Although, I was very tempted to give the prelude for its beauty, I had to settle down with this interlude because of this amazing transformation (at 23-second marker) he gives with a Carnatic-based violin score. Please check SoundCloud comments.

உம்…கண்டுபிடியுங்கள் இந்த பாட்டை. பாட்டு தெரியலைன்னா, அருமையான ஒரு மெலடி டூயட் – அதுவும் சுசீலாம்மா டூயட் ஒன்ன கத்துகிட்டோம்னு ஆறுதல் கிடைக்கும். இல்லாட்டி, இந்த பாட்டு வந்துச்சேன்னு ஒரு இரட்டிப்பு மகிழ்ச்சி எட்டிப்பார்க்கும்.

இந்த படத்துல இருக்கும் இன்னொரு வாணிஜெயராம் டூயட் பாடலும் கொடுக்கலாமான்னு ரொம்பவுமே யோசிச்சேன். ஆனா, இந்தப் பாட்ட எவ்வளவு தடவ கேட்டாலும், continuous-repeat ல இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு மெலடி தூக்கலா இருக்கும். அதான், இதை கொடுத்தேன்.

All the very best.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This heroine’s name has two words, out of which one is Hindu deity’s. Movie’s title, like yesterday, has a direct reference to “flower(s)”.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaadhal Dhegangal (காதல் தேகங்கள் ) from Anbulla Malare (அன்புள்ள மலரே ) (1984)

Advertisements