Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். மீண்டும் ஒரு புது வாரம் பிறந்திருக்கிறது. எப்பவும் போல ஒரு uplifting பாடல் தான் இன்றைய புதிரில் வந்திருக்கிறது.

பெண்ணின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல்களில், இசைஞானி இளையராஜாவின் இசை அட்டகாசமாக இருக்கும் என்று நிறைய தடவை பேசி இருக்கிறோம், புதிர்களில் அலசி இருக்கிறோம். ஒரு சிறு சாம்பிள் வேண்டும் என்றால், எதற்கும் இங்கு போய் பார்த்துவிட்டு வாருங்கள். 55/365 – #365RajaQuiz – காத்திருந்த காதலி, பிறகு 58/365 – #365RajaQuiz – காதலி விடு தூது., அப்புறம் 59/365 – #365RajaQuiz – காதலி விடு (கொலவெறி) தூது, or my favorite 88/365 – #365RajaQuiz – இது, சிறகடித்து பறக்கும் சந்தூர் காதல்!

இப்படி பல பாடல்களை பார்த்தாலும், இவருடைய இசையில் இன்னும் பல பாடல்கள் உள்ளன. அதில் ஒரு முத்து தான் இன்று வந்துள்ளது. இந்த பாடலை நிறைய பேர் கேட்டிருக்கலாம். பலர் கேட்காமலும் போயிருக்கலாம். படம் சரியான டப்பா என்றே நினைக்கிறேன். சரியாக திரையரங்குகளில் வந்து வெளுத்து வாங்கின ஞாபகமும் இல்லை, கோவை வானொலியில் அதிகம் கேள்விப்பட்ட மாதிரியும் இல்லை. அதனாலேயே தான், இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் என்று என்னால் சரியாக சொல்லமுடியவில்லை. அதற்கென்று இந்த பாடலை குறைத்து எடை போட்டுட முடியாது. மிக, மிக அருமையான கர்நாடக சங்கீத சங்கதிகளைக் கொண்ட காதல் ஏக்கப்பாட்டு இது! இந்த படத்தில் உள்ள இன்னொரு காதல் டூயட் — மலேசியா வாசுதேவன் — பாடியது, அந்த காலத்தில் பிரபலமான ஒரு பாடல். அதை வானொலியில் கேட்டது உண்டு.

கனவுப்பாடல் என்று நினைக்கிறேன். அருமையான ஷெனாய் இசையில் ஆரம்பம் ஆகிறது. அதற்கு புல்லாங்குழல் துணை புரிய, கோரஸ் பாப்பாக்கள் ஜிவ்வென்று Gas Balloon rangeக்கு பாடலை ஏற்றிக்கொண்டே போக, நமக்கு கிட்டுவதெல்லாம் levitation effect! மிருதங்கம் உண்டு. வயலின்கள் உண்டு. இந்த இசை முடியும் தருவாயில் அருமையான சந்தூரும் உண்டு.

இம்மாதிரி பாடல்கள் அனைத்தையுமே நான் காரிலோ, ஆடியோ பிளையரிலோ தான் கேட்பது வழக்கம். iTunes, iPod, iPad, PC, இவை எல்லாம் கேட்கும் வழக்கம் இல்லை. ஆக, நேற்று நான் கீச்சியது போல, இதோ உங்களுக்கு வீடியோ க்ளூ. LOL :))

உங்கள கடுப்பேத்தணும்னு நோக்கம் எல்லாம் இல்லவே இல்ல. Sharing makes us develop more of an understanding என்பது என் சாதாரண புரிதல் 🙂 . அவ்வப்போது, நீங்கள் கேட்பது உண்டு. எப்படி சார், இந்த மாதிரி பாட்ட எல்லாம் தேடி புடிக்கறீங்கனு. ரொம்ப சிம்பிள். இப்படித் தான். வாருங்கள், அட்லாண்டாவின் பிரசித்தமான Sphagetti Junction bridgeக்கு அருகில் காரில் போய்க்கொண்டிருந்தபொது, 100 கி.மீ வேகத்தில், இசைஞானியின் இந்த காதல் ஏக்கப் பாட்டு இப்படித்தான் பாடிக்கொண்டு வந்தது. இம்மாதிரி தான், பல பாடல்களை முதலில் மனதில் தேர்வு செய்து, குறித்துக்கொண்டு, அந்த பாடலை காரில் போகும்போது கேட்டுக்கொண்டே இருப்பேன். இதை கொடுக்கலாமா, அல்லது வேறு கொடுக்கலாமா? இந்த preludeஆ, அந்த interludeஆ என்பதெல்லாமே, pretty much carல் முடிவெடுப்பது தான். பாடல் மனதில், க்ளூவின் இசையோ காரில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் வீட்டில் பதிவு செய்து கொடுத்துவிடுவேன். இப்படித்தான் இது வரை வந்த அனைத்து க்ளூக்கலுமே. என்ன OK வா?

Welcome to the Peachtree City of Atlanta, the capital of Peachtree State of Georgia 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of the movie has a Tamil word that refers to “flower(s)”.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Inimel (இனிமேல் ) from Iravu Pookal (இரவு பூக்கள்) (1986)

Advertisements