Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் வணக்கம். நேற்றைய பாடல் புதிருக்கு பல பேர் சிலாகித்து பின்னூட்டம் இட்டிருந்தது மகிழ்ச்சியை அளித்தது. நிறைய பேர் அந்த பாடலை கேட்டதில்லை என்று சொல்லி இருந்தீர்கள். முதன்முறையாக கேட்ட மகிழ்ச்சியை பகிர்ந்தமைக்காக நன்றி.

இன்றைய பின்னணி இசை தான் இந்த புதிரில் வரப்போகும் நீளமான புதிர் இசை. என்னுடைய கத்தரி சென்சாரை மீறியும், இது எட்டு நிமிடங்களுக்கு வந்துள்ளது என்றால், இந்த சீனுக்கு டைரக்டர் எந்த அளவுக்கு இசைஞானி இளையராஜாவிடம் musical narrationக்காக விட்டுவிட்டார் பாருங்கள். சில இடங்களில் குரல் தடயங்கள் வருவதால், புதிருக்கு உகந்ததாக இருக்காது என்று துண்டித்துவிட்டேன். அதே போல், பாங்குடன் இசைஞானி விட்டிருந்த நிசப்தங்களையும் logistics காரணத்துக்காக சற்று துண்டித்துவிட்டேன்.

இந்த படத்தை பார்த்த எவருக்கும் இந்த புதிரின் பின்னணி இசை தெரிந்தே தீரும். தமிழ் திரைப்படங்களில், ஆங்கில திரைப்பட ரேஞ்சுக்கு பலர் படம் எடுத்திருக்கிறார்கள். உண்மை தான். ஆனால் பின்னணி இசை, அப்படியே ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பது, இந்த படத்தில் தான். கிடைத்த கருவிகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு, பல குரல்களில் பலரை கத்தவிடும் அந்த யுக்தி, இசைஞானியிடம் என்றும் இருந்ததில்லை என்றாலும், இதில் அறவே இல்லை என்பது சற்று சிந்தித்து பார்க்கவேண்டிய ஒன்றாகும். முழுக்க முழுக்க, காட்சிக்கு வேண்டியவாறு இசையை அமைத்திருப்பார்.

கடத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் நபர் தப்பிக்க வழியில்லாமல் தவிக்கின்றார். அவரை கடத்தியவர் வெளியே போய்விட்டு, காரில் மீண்டும் வருவதற்குள் இவர் தப்பிக்கும் வழியை தேடுகிறார். அங்ஙனம் அவர் தப்பிக்க இருக்கும் இந்த தருணத்தில் பெருக்கெடுத்து ஓடும் adrenalin-rushஐ, இந்த இசையின் மூலம் மட்டுமே இசைஞானி காட்டியிருப்பது, அவர் வெறும் மெலடிகளின் ராஜாவோ, குத்துப்பாட்டுகளின் ராஜாவோ அல்ல, இசையின் ராஜா, காட்சிகளின் பின்னணியை தனது இசையின் மூலம் காட்டும் true, music “DIRECTOR” என்பது அழகாக தெரிகிறது. வெளியே போன ஆள், மீண்டும் வருகிறார். அவர் நுழையும் முன், மீண்டும் தான் இருந்த இடத்துக்கே திரும்பவேண்டிய கட்டாயம் கடத்தப்பட்டவருக்கு. இந்த பரிதாப தேடலில், எப்படியும் தப்பித்துவிடலாம் என்று நம்பிக்கை பிறக்கும் போது ஒரு இசை, அட, எல்லா எஸ்கேப்-ரூட்டையும் ஆப்பு வைத்துவிட்டாரே என்று உணர்ந்து பொங்கும் போது, அதற்கு ஏற்ற மாதிரி ஒரு இசை, நம்மை கடத்தி வைத்திருக்கும் ஆளையே ஒரு போடு போட்டால் என்ன என்று வக்கிரம் மனதினுள் புகும்போது அதற்கு என்று ஒரு இசை, நாம் எண்ணிய மாதிரி போட்டு தாக்குவதும் அவ்வளவு சுலபம் இல்லியே என்று துடிக்கும் போது அதற்கு என்று ஒரு புரிதலின் இசை, காப்பாற்ற யாரும் இல்லையா என்று ஏக்கத்துடன் கத்தி தவிக்கும் போது, குரைக்கும் நாயின் ஒலியே அழகான பின்னணி இசை என்று அமைத்திருப்பது, முன்பொரு காலத்தில் ராஜா, குரைக்கும் நாயின் ஒலி கூட ஒரு இசை தான் என்று சொன்னதை ஞாபகப்படுத்தும். அதே போல, ஒரு honk தான் — அங்கிருந்து ஒரு காற்றாறு வெள்ளம் போல பொங்கியோடும் இசை, கடத்தியவர் வருவதற்குள் தன்னுடைய தப்பிக்கும் படலத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு இருந்த இடத்திலேயே போய் நல்லவர் போல உட்கார்ந்துகொள்ள வேண்டும் என்று கடத்தப்பட்டவர் துடிதுடிப்புடன் வேகம் எடுப்பதை அட்டகாசமாக காட்டும்.

இப்படி இந்த இசைக்கு பல சங்கதிகள் உண்டு. நேற்றைய பாடல் போல, இன்றைய பின்னணி இசையில் இல்லாத கருவிகளே இல்லை. அட நீ தானே என் பொன்வசந்தம் rangeக்கு, electric-guitar கூட போட்டு அடித்து சாத்தி இருப்பார். கலவர பூமியில கிளுகிளுப்பு ன்னு வைகைப்புயல் கேப்பாரே…அது மாதிரி. ஆனால், இங்கு electric-guitarன் reasonஏ வேறு.

I have made many annotations on the SoundCloud file itself to connote all the important points as 1-line commentaries. So, please continue to play it to follow through.

பதில் அளிப்பது பிறகு பார்த்துக்கொள்ளுங்கள். முதலில், நல்ல headphones or sub-woofer உள்ள sound-systemல், ஒலியை ஏற்றி வைத்து கேட்டுமுடியுங்கள். Bass Guitar interludesக்கும் அந்த percussion beatsக்கும் எப்படி woofer எகிறுகிறது என்று பாருங்கள் 🙂 அட்டகாசமான இசை.

ஆனால், இதயம் , மௌன ராகம் rangeக்கு வேறு ஒரு genreவில் உள்ள இந்த பின்னணி இசையைப் பற்றி ஏன் யாரும் அதிகம் பேசுவதில்லை? எனக்கு அந்த ஏமாற்றம் உண்டு.

அதனால் தான், இன்றைய புதிரில் இதை முழு அளவில் தந்துவிட்டேன்.

For the SoundCloud comments, if the widget presents a problem, use this direct link. Excellent stereo-split will be present throughout, thanks to the source. Goldwave and Real Converter were used to produce the Quiz clip for editing and censoring. Noise-reduction and noise-gate were used once for minimal hiss-noise removal.

Have a nice Sunday.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Movie was shot almost entirely in Ooty and the protagonist for this movie is a writer.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Julie Ganapathy BGM (ஜூலி கணபதி (BGM)) from Julie Ganapathy (ஜூலி கணபதி) (1986)

Advertisements