Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அன்பர்களுக்கு வணக்கம்.

இங்கு இணைய இணைப்பு பிரச்சினை இரண்டு நாட்களாக கடுமையாக என்னை வாட்டுவதால், சற்றே கை ஒடிந்த மாதிரி உணர்கின்றேன். Tagging செய்வதில் இருந்து மேகத்தில் கோப்பை பதிவேற்றம் செய்வது வரை, அனைத்தும் திடீரென்று முடங்கிப்போய் உள்ளது. AT&T இதை செப்பனிட்டு முடிக்க இன்னும் அவகாசம் எடுக்கும் என்று தெரிவித்துள்ளபடியால், தயவு செய்து பொறுத்தருளுங்கள். Twitterல் இருந்து, பின்னூட்டம் வரை, ஒன்றுக்கும் சரி வர பதில் அளிக்க முடியாமல் அல்லாட இது ஒன்று தான் காரணம்.

இன்றைய பாடல் புதிர் 175. ஆமாம். அந்தக் காலத்தில், 175 நாள் என்பது, 100வது நாள், 200வது நாள் என்பது போல சிறப்பிக்கப்படும் ஒரு மைல்கல் தான். அந்த வகையில் நம் புதிரின் மைல்கல் தினம் தான் இன்று. அதை கொண்டாட வேண்டாமா? அதனால் தான் இன்றைய பாடல், செண்டை வாத்தியம் கலந்த சிம்பொனியாக வந்திருக்கிறது. இந்த பாடலின் இந்த குறிப்பிட்ட இடையிசையில் இல்லாத வாத்தியங்களே இருக்க முடியாது என்றாலும், இப்படிப்பட்ட ஒரு அருமையான மெலடி பாடலில், எங்கிருந்து இந்த drums மற்றும் செண்டை வாத்தியங்களை நுழைக்கும் அந்த குறும்பு எண்ணம் இசைஞானிக்கு வந்தது என்று தெரியவில்லை. மனுஷன் அடித்து நொறுக்கி இருப்பார்.

நேற்றைக்கும் இன்றைக்கும் நிறைய ஒற்றுமைகளும், சில வேற்றுமைகளும் உண்டு.

மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. ஆனால், இதைப் பாருங்கள்.

  1. 174/365யிலும், அந்த படத்தின் பிறப்பாடல்கள் மேலோங்கி கோலோச்சியதால், இந்தப் பாடல் புதுமையிலும், complexityயிலும் பட்டையைக் கிளப்பினாலும், மற்ற அதிரடி ஹிட்களால் சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்டது உண்மை தான். இல்லையா? இங்கேயும் 175/365 அதே நிலைமை தான். (இதுவும் ஒரு வகை க்ளூ தான். நல்லா கேட்டுக்கோங்க :))
  2. இன்றைய பாடலில், பல்லவி மிகவும் சிறியது. நேற்றைய பாடலில் பல்லவி மிகவும் நீண்டது. ஆனால் பாருங்கள், இன்றைய பாடலில் சரணம் எது, பல்லவி எது என்று தெரியாத விதமாக பல்லவி ஒரு continuous loopல் வருவது போல தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கும். அதாவது, பல்லவியே சரணமாக, சரணமே பல்லவியாக, இப்படி ஒரு two-in-one எனக்கு வேறு எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சுட்டுங்கள். தெரிந்து கொள்கிறேன்.
  3. ஆக, இன்றைய பாடலிலும் பல்லவி சார்ந்த புதுமை. நேற்றைய பாடலிலும் பல்லவி சார்ந்த புதுமை. இது எப்படி இருக்கு? 🙂 The uniqueness in both songs will enable you to never forget them for life 🙂
  4. இசையின் கலவையிலும், interludesன் complexityயிலும் இன்றைய பாடல் நேற்றைய பாடலுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல.
  5. இன்றைய பாடலும் நேற்றைய பாடலைப் போல, கதாநாயகியை மையமாக கொண்ட பாடல் தான்.
  6. இன்றைய பாடலும் நேற்றைய பாடலைப் போல, ஒரு மாபெரும் பாடகியால் பாடப்பட்டது தான்.
  7. இன்றைய பாடலும் நேற்றைய பாடலில் வந்த நடிகர் அல்லது நடிகை நடித்த படத்தில் இருந்து வந்தது தான். இது எப்படி இருக்கு? ;))
  8. நேற்றைய பாடலிலும் trumpets நொறுக்கியது. இன்றைய பாடலிலும்.
  9. நேற்றைய பாடலிலும் மெலடிக்கு ஆதாரமாக rhythmic acoustic drums வந்தது. இன்றைய பாடலிலும் அவ்வாறே.
  10. நேற்றைய பாடலிலும் bass guitarsன் ஆர்ப்பாட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இன்றைய interludeலும், அதே bass guitarsன் ஆர்ப்பாட்டத்தை விவரிக்க முடியாத அளவுக்கு, புகுந்து ஆடியிருப்பார், இசைஞானி. நன்கு கூர்ந்து கவனித்துக் கேட்டால் (preferably with a HQ subwoofer / speakers) அட்டகாசமாக அனுபவிக்கலாம்.

ஆரம்பத்தில் symphonic interludesஆக group violins ஆரம்பமாகிறது. எத்துணை trackகளில் அந்த violins படை எடுக்கிறது பாருங்கள். அத்தோடு அந்த அருமையான flutes இணைய, மெதுவாக percussion beatsம் எட்டிப்பார்க்கிறது. சற்றும் எதிர்பாராத வண்ணம், படுபயங்கரமாகவும் styleஆகவும், Trumpets நுழைகிறது. மீண்டும் Group violins எட்டிப்பார்க்க, கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல், ஆனால் சுவையும் மகிழ்ச்சியும் குறையா வண்ணம் அதிரடியாக beats கொண்ட தாளத்தை நுழைத்து, அது முடியும் முன்பே, கேரளத்து செண்டை வாத்தியத்தை நுழைத்து, அங்கேயும் முடிக்க மனம் இல்லாமல், இசைஞானி முத்தாய்ப்பாக pianoவையும் கொண்டு வந்து, ஒரு வழியாக 50 நொடி நீளத்துக்கு கொண்டு வந்து இசையை முடிப்பார். இதை கிரகிக்கவே நமக்கு நேரம் போதாது. இவரோ…..ஒன்னும் சொல்றதுக்கில்ல.

எப்படி பாட்டு? தயவு செஞ்சு இந்த பாட்ட நீங்க கேட்டிருக்கீங்களான்னு சொல்லுங்க. எப்படி, எப்ப கேட்டீங்கன்னு சொல்லுங்க. Please don’t hold this against me, but, I am not quite sure if this song was there in the movie. படத்தில் இந்த பாடல் வருவதாக நினைவு இல்லை. தயவு செய்து அதை குறித்தும் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

Enjoy 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Director of this movie is a product of veteran K. Balachandar. Heroine of this movie has a namesake leading heroine today. A famous stunt-master was introduced in this movie and the actor OR actress (:-) of 174/365 is the same here in 175/365 as well.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ingeyum Angeyum (இங்கேயும் அங்கேயும் ) from Sathya (சத்யா ) (1988)

Advertisements