Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இந்த post, LIVE ஆகும் போது, வானிலை அறிக்கைல சொன்ன மாதிரி அட்லாண்டால flurries — பவுடர், மாவு மாதிரி வரும் snowfall இருக்குமா என்னன்னு தெரியல. வடக்கே நியு யார்க், வாஷிங்டன், பாஸ்டன் போன்ற நகரங்களில் எல்லாம் பல இஞ்ச் பனி விழுந்தாலும் அது பெருசு இல்ல. உப்பை போட்டு சரி செய்துவிடுவார்கள், உடனுக்குடன். இங்கே அட்லாண்டாவை Hotlanta என்று கிண்டல் செய்வதுண்டு. வெய்யில் காலங்களில் சென்னை அளவுக்கு வெளுத்து வாங்கும், humidity தவிர. ஆக, இங்கே சாலையில் உப்பை கொட்டும் வாகனங்கள், விபத்துகள் நேர்ந்தால் உடனுக்குடன் பனியில் அப்புறப்படுத்தும் இயந்திரங்கள் எல்லாம் அவ்வளவு இல்லை. அதனால், சாதாரண flurry அடித்து, அது உறைந்து போனால், எங்கள் பாடு திண்டாட்டம் தான். இந்தியாவில் இருக்கும் போது, பனி என்றால் எந்த அளவுக்கு ஆசை இருந்ததோ, அந்த அளவுக்கு, அதை நேரில் பார்த்த பின்னர் நம்மவர்கள் நிறைய பேருக்கு வெறுப்பு தான். எனக்கு வெறுப்பு எல்லாம் இல்லை. அட்லாண்டாவில் நகர முடியாது என்ற கவலை தான். இருந்தாலும், பனியை ரசிப்பதே, என் பணியும் பாணியும்.

ஸ்ஸ்..அப்பா..முடியல ;)))

ஏன், இவ்வளவு build-upனு பாக்கறீங்களா? ஒன்னும் இல்ல. பாட்ட கேளுங்க. அப்படியே ஒரு flurry மாதிரியான melodyயில் தூள் கிளப்பும் இந்த க்ளூ தான் இன்றைய புதிர். அருமையான guitar இசையில், ஒரு soulful flute வருகிறது. இந்த பாடல் கண்டிப்பாக நிறைய பேருக்கு பிடித்திருக்கும். இசைஞானி இளையாராஜா உருகி பாடியிருக்கும் இந்த பாடல் தான் இன்று.

Flurry வரவிருக்கும் அறிகுறி தென்படுவதால், என் மனதுக்கு உதித்தது, இந்த க்ளூ தான்.

Have a nice day🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Song’s first line has a “bird” in it🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaanampaadi (வானம்பாடி) from Thalayanai Manthiram (தலையணை மந்திரம்) (1984)