Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துகள்.

இந்தத் திருநாளின் போது அதை குறித்த பாடல் புதிரில் வருவது தானே சரியாகும்? அதான் இன்றைய க்ளூ. சுலபம் தானே? இது prelude – தொடக்க இசை. அருமையான பாடல். இன்றைய போகி பொங்கலின் அருமை பெருமையோடு பாடல் வரிகள் ஆரம்பமாகும். தூள் கிளப்பும் percussion beat உடன் group violins தொடக்கத்தைக் கொடுக்க, அங்கே synth & keyboardsன் நுண்ணிய இசை, தென்றலாக வீசுகிறது. அங்கே ஷெனாய் – shenai – நுழையும் அழகு தான் என்ன! அடேங்கப்பா. இதுவே சர்க்கரைப்பொங்கலாக இனிக்கிறதே. அங்கே, கடைசியாக வரும் group-violins தான் முந்திரி போலவும், வெண்பொங்கலில் வரும் குறுமிளகு போலவும் தனியாக ருசியை கூட்டிவிட்டு நிறைவடைகிறது.

இரண்டு interludesஉம் அருமையிலும் அருமையாக இருக்கும். நிறைய சந்தூர், ஷெனாய் சங்கதிகள் இருக்கும். என்றாலும், அவற்றை நான் கொடுக்காததற்கு காரணம், இந்த படமும், இந்த படத்தில் வரும் இந்த பாடலையும் எவ்வளவு பேர் கேட்டிருப்பார்கள் என்று ஒரு சரியான அனுமானத்துக்கு வரமுடியாததால் தான்.

இந்த படத்தில் வரும் மலேசியா அண்ணனின் ஒரு செம பாடலும், அதை விட சின்னக்குயில் சித்ரா பாடியிருக்கும் இன்னொரு பாடலும் எனக்கு மிக, மிக, மிக பிடித்த பாடல்களாகும். இன்று வந்துள்ள க்ளூ பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்……ஆனால்….ஆனால் பொங்கலாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அந்த KS Chitraவின் பாடல் தான் கொடுத்திருப்பேன். அந்த பாடலின் interludes எல்லாம் ஒரு தனி class வகை.

என்ன, கண்டுபிடித்துவிடலாம் தானே?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Audio problems? Try this direct link.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

The very first line of this song will talk about the Bogi festival. This Liaquat Ali Khan directed movie was an average grosser at the box-office.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Thai Pirandhathu (தை பிறந்தது) from Kattalai (கட்டளை) (1993)