Tags

, , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

முதலில் ஏழரக்கு @ezharai வாழ்த்துக்கள் சொல்லிடணும். மனுஷன் என்னமா ரவுண்டு கட்டி நேற்றோடு தொடர்ச்சியாக 150 சரியான விடைகளை சொல்லி அசத்தியிருக்கிறார். பதில்கள் தெரிவது என்பது ஒரு புறம் என்றாலும், இந்த புதிரில் பங்கேற்கும் உங்களுக்கு தெரியும், எப்படி ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பதில் அளித்து வருவது கடினமான விஷயம் என்று. இவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், சற்று இளவயதுக்காரர், இசைஞானி இளையராஜாவின் பாடல்களை தன்னுடைய பள்ளிப் பருவத்தில் விரும்பிக்கேட்டு தன்னுடைய Databaseஐ வளர்த்திக்கொண்டு வருபவர் என்பது எல்லாம் என்னுடைய சொந்த அனுமானம். இப்படிப்பட்ட ஒருவர், இப்படி ரவுண்டு கட்டி அடிப்பது, இசைஞானியின் பாடல்களில் மீது இருக்கும் பற்றை காட்டுவதோடு, இவரின் தனிப்பட்ட dedication, tenacity, perseveranceஐ கோடிட்டு காட்டிவிடுகிறது. Stradivarius once said, True perfection not lies in doing extraordinary things. It lies in doing ordinary things, extraordinarily well.. இது நம்ம ஏழரக்கு பொருந்தும். தொடர்ந்து அவரின் பயணம் சிறக்க, அவரின் ஊக்கம் நம்மையும் தொற்றிக்கொள்ள வாழ்த்துக்களை அள்ளி வீசுவோம். @ezharai, you rock 😉


BGM is encoded digitally from original movie-track with extensive noise-removal. Three tracks were woven together as a single track for logistical reasons. Those 3 portions are explicitly called-out in the commentary below.

இன்று BGM க்ளூ. மூன்று வெவ்வேறு சீன்களில் வரும் ஒரே இசை எப்படி அந்தந்த உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறது என்பதை மையமாக வைத்தே அமைந்து இருக்கும். மூன்றையும் ஒன்றாக தைத்து பதிவேற்றம் செய்தாயிற்று. ஆனால், பகுத்து கேட்டுப் பாருங்கள். கண்டுபிடிக்க சுலபமாக இருக்கும். வேண்டுமென்றே ஒரு பகுதியில் ஒரு சிறு வசன பிட்டை சென்சார் செய்யாமல் விட்டிருக்கிறேன். அது பதில் சொல்ல மிக்க உதவியாக இருக்கும் என்று. எப்பவும் போல, BGMகளில் கடினமானவையும், ஊர் பேர் தெரியாத படங்களும் இடம்பெறாது. BGMகளை அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், சில ஹிட் படங்களை பார்த்து முடித்தவுடன், அந்த படத்தின் காட்சிகள் அந்த பின்னணி இசையின் தாக்கத்தினாலேயே மனத்தினுள் ஓடி, ஓடி நீக்கமற கலந்துவிட்டு மறக்க மறுக்கிறது பாருங்கள்…அந்த மாதிரியான க்ளூக்களை மட்டுமே நான் BGMsல் தந்துகொண்டு வருகிறேன்.

வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், இன்றைய BGM க்ளூ, சீசன்-1லேயே வந்திருக்கவேண்டியது. ஒவ்வொரு முறையும் இதை encode செய்ய அமர்ந்தால், அதில் லயித்துபோய் மனம் வேறெங்கோ போய்விடும். இப்படியே பல நாட்கள் சென்றன. அதனால் சரியாக encode செய்யமுடியாமல் என்னையே ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, ஏலே, இன்னிக்கு வெறும் encoding தான் பண்ணனும்….டிராக்கை ரசிக்கக்கூடாது என்று தான் ஒரு வழியாக முடித்தேன்.

காரணம்… நீங்களே இந்த முதல் பகுதியை கேளுங்களேன். அந்த 40வது நொடியைத் தாண்டி உங்களால் போக முடிந்தால் சரி. இல்லை, மீண்டும் முதலில் இருந்து அதே 40 நொடியின் அருகில் வந்து surrender ஆகிவிட்டீர்கள் என்றால், அப்போது புரியும் என் அவஸ்தை :-). In fact, this is the tune that kept reverberating in my mind for a long time that made me choose this clue for our Quiz.


Part – 1 : 0:00 to 0:40 marker – Oceans of Love (JOYFUL Phase)

இங்கே, நாயகி அவளைக் கட்டப்போகும் முறைமாமனின் வருகைக்காக காத்திருக்கிறாள். அவனின் whereabouts பற்றி ஒன்றும் தெரியாத நிலையில், திடீரென்று அவனிடம் இருந்து செய்தி வர, இவளுக்கு ஒரே பூரிப்பு. இவளின் இந்த மகிழ்ச்சியை இசையிலேயே வடித்திருப்பார் இசைஞானி. தாமரை மலர் விரிவது போல, இவளின் மகிழ்ச்சி பூரிப்பு அகண்டு விரிகிறது. ஆரம்ப வயலின்கள் அவளின் மனம் அடையும் இனம்புரியாத மகிழ்ச்சியை பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது.

6-ஆம் நொடியில் இருந்து ஆரம்பிக்கும் அந்த flute-based lilting tuneதான், இந்த படத்தின் BGM உயிர்நாடி. இந்த dominant theme தான், மாறி மாறி வரும். இந்த மகிழ்ச்சியின் பூரிப்பையே, சோகத்துக்கும் இசைஞானி மூன்றாம் பகுதியில் (கீழே..) பயன்படுத்தியிருப்பதை நீங்கள் காணலாம்.

ஆக, அந்த ஆறாம் நொடியில் ஆரம்பமாகும் புல்லாங்குழல் இசை, தப்பட்டை சகிதமாகவும் சந்தூர் சகிதமாகவும் கச்சிதமாக 40வது நொடியில் சங்கமிக்கிறது. ஒரு சிறு keyboard sequenceஐ வேறு அவர் நுழைத்து ஆட்டுக்குட்டிகள் சத்தத்தோடு முடித்துக்கொள்கிறார்.

Thus concludes the joyful theme track.


Part – 2 : 0:40 to 1:07 marker – Storms of Anticipation (TENSION Phase)

எதிர்பார்ப்பு மாதிரியான ஒரு சுகமான சுமை வேறு ஏதேனும் உண்டா? பல நாட்கள் கழித்து காணவிருக்கும் சொந்தம், இது வரைக்கும் காணாத சொந்தம் பிரசவ வார்டில் வரவிருக்கும் தருணம், என்று the pangs of anticipation and love are inexplicable. இங்கே, இந்த உணர்வை இசையால் தீட்டுகிறார் இசைஞானி. விடிந்தால் முறைமாமன் வரப்போகிறான். ஆனால், ஒவ்வொரு நொடியும் அந்த இரவின் கொடுமையை பன்மடங்காக்குகிறது. விடியாதா என்று இவள் சேவலைக் கூட கிண்டி அதை கூவ வைத்து அழகு பார்க்கிறாள். விடிந்தும் விடியாமலும் ஆற்றங்கரைக்கு ஓடுகிறாள். அந்த sequenceல், இவளின் தவிப்பை என்னமா காட்டி இருக்கிறார்.

Just focus on the tempo with the percussion and the Santoor, which suddenly comes to an abrupt shift in tempo with the Santoors doing a stylish somersault. This magic happens at 51-second marker. Enthusiasts will enjoy the superb confluence of Santoor, Bass-guitar and lead-guitar interludes in this short sequence from 51-second to 1:07 marker. Please hear it again 🙂

This concludes the anticipation theme track.


Part – 3 : 1:07 to 2:00 marker – Climactic Surrender (FULFILLMENT Phase)

வாழ்ந்தாலும் சரி, செத்தாலும் சரி, மாமன் மடியில் சாய்ந்தே இருக்கணும்னு நெனைக்கற சாதாரண பொண்ணு இவ. இவளோட காதலுக்கு முன்னால மத்ததெல்லாம் தூசு. ஆபத்தான நிலையிலையும், இவளின் உயிர் இவளோடு தான் இருக்கிறதா என்று தெரியாத, அல்லது புரிந்துகொள்ளக் கூட முடியாத நிலையிலும் அவளுக்கு அரும்பும் ஒரு சிறு சந்தோசம், தான் தன்னுடைய மாமனின் மடியில் தான் இருக்கிறோமா என்ற கவலை மட்டுமே. அந்த சோக தருணத்தை உணர்த்தும் சோக இசை, மெல்ல கோரஸ் பாப்பக்களால் சந்தோஷத்துக்கு தாவும் அந்த metamorphosis of loveஐ தான் இங்கே மண்ணின் மணம் வீச நீங்கள் கேட்கின்றீர்கள். இங்கே, துள்ளி ஓடும் இசையில் கிடாரை கவனியுங்கள். அது சந்தூரோடு நடத்தும் காதல் சடுகுடுவை என்னவென்று சொல்வது 🙂

இந்நேரம் பதில் தெரிந்து இருக்கும். அப்படி என்றால், முழு இசையையும் மீண்டும் கேளுங்கள். பிறகு பாருங்கள், நாள் முழுக்க அது உங்கள் மனத்திலும் ரீங்காரமீட்டுக்கொண்டிருப்பதை.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Panchu Arunachalam penned the dialogues for this movie with a bunch of new faces in the lead cast and was loosely based on a real story at some village in the Madurai area. This movie touched on the effects of gambling and alcoholism, besides Jallikattu having a core focus. Besides songs, Kavignar Vairamuthu’s New-Age poems (புதுக்கவிதைகள்) played an important role in this movie and its primacy can be gauged by the fact that it was explicitly listed in the opening titles of the movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Man Vaasanai BGM (மண் வாசனை ) from Man Vaasanai BGM (மண் வாசனை ) (1983)

Advertisements