Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே. ஒரு வழியாக வெள்ளி வந்தாயிற்று. இதோ, சுலபமான க்ளூவும்.🙂

இந்த பொங்கல் விழா சமயத்துல சின்ன வயசு ஞாபகம் தான் வருது. அந்த காலத்துல, நான் வளர்ந்த ஏரியால பொங்கலுக்கு குடியிருப்பு முழுக்க விழாக்கோலம் தான். பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் என்று ஒரே குதூகலம் தான். அது அரசு அலுவலர் குடியிருப்பு என்பதால், போதாத குறைக்கு சில வட்டம், மாவட்டம், கரை வேட்டிகள் என்று மேடை ஏற வருவார்கள். அப்போது எல்லாம் கோன்-ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்கள் ஒரு புறம் ஒலிக்க, மற்றொரு புறம் நாம எல்லாரும் கூத்தடிக்க என்று செமையாக இருக்கும்.

அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் ஒலிக்கும் பாடல் தான் இது. சற்று அரசியல் நெடியடிக்கும் படத்தில் வந்த அம்சமான பாடல் இது. இந்த interludeல் வரும் fluteம், தபலாவும், violinsம், guitarம் பாடலின் வேகத்தை அழகாக கூட்டிச்செல்லும். அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த டைரக்டர் எடுத்த படம் என்றாலும், அவ்வளவு அதிகம் வசூல் செய்யாமல் போனதில் அவர் கிராப் ஏகத்துக்கும் சரிந்தது என்னமோ நிஜம் தான்.

இந்த பாடலை கவிஞர் வாலி எழுதினார் என்று நினைவு. அதற்கு ஒரு சிறப்புக் காரணமும் உண்டு. குமுதமோ, கல்கண்டோ சரியாக நினைவில்லை. ஆனால், அந்த பத்திரிகையில் வாலியை செம டோஸ் விட்டு காரமாக விமர்சித்திருந்தார்கள், இப்படி ஒரு அர்த்த(மற்ற)(முள்ள) பாடலை எழுதியமைக்காக.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie will remind you of the Civics class you may have taken at school🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Melur Maaman (மேலூர் மாமன் மேலாகப் பாக்குறான்) from Makkal Aatchi (மக்களாட்சி ) (1995)