Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

ஒவ்வொரு முறையும் சாமி, தர்மம் பண்ணுங்க சாமின்னு குரல் கேட்கும் திசையில் திரும்பும்போது, அங்கு நம் மனித இனத்தின் வடுவாக பிச்சை கேட்டு ஒரு கை ஏக்கத்தோடு நம்மை நோக்கி நீட்டப்பட்டிருக்கும். சில ஆண்டுகட்கு முன் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவல் படித்து முடித்துவிட்டு ஒரு இரண்டு வாரத்துக்கு அதன் தாக்கத்தில் இருந்து வெளியே வரவேமுடியாமல் கஷ்டப்பட்டேன்.

இன்றைய பாடல், இந்த மனித இனத்தின் வடுவைக் குறித்தே பாடப்படுகிறது. அந்த வலி, அந்த சோகம், இதெல்லாம் இந்த sequenceல் வரும் hummingல் தெரிந்துவிடும். புல்லாங்குழல், வயலின், சந்தூர், தபலா, சிந்த் என்று துணைக் கருவிகளின் இசைச்சேர்ப்பும் அபாரமாக இருக்கும்.

எனக்கு மிக்கவும் பிடித்த பாடல் தான் இது. இந்த படத்தில் வரும் இன்னொரு அட்டகாசமான டூயட் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படம், வேறு ஒரு மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது என்றே நினைக்கின்றேன். ஆனால் தமிழில் சரியாக ஓடவில்லை. செம பிளாப்.

இசைஞானி இசைக்காத ராகங்கள், situations, மனிதர்கள், உணர்வுகள் என்று ஒன்றுமே இல்லை என்றே நினைக்கிறேன். அந்த நம்பிக்கையை நிறைவு செய்யும் விதமாக வருவதே இந்த பாட்டு.

All the best🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song is sung by KJ Yesudas.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Rottoram Paatu Saththam (ரோட்டோரம் பாட்டு சத்தம் ) from En Mana Vaanil (என் மன வானில் ) (2002)