Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே. வெகு நாட்கள் ஆகியே தான் விட்டது. திரைப்பட BGM கொடுத்து. இனிமேல் அந்த குறை இருக்காது. அவ்வப்போது பட BGM முதலில் வந்தது போல வரும். நிறைய பேரின் விருப்பத்திற்கு இணங்க இதோ இன்று மூன்று bonus trackகளாக எனக்கு மிகவும் பிடித்த ஒரு படத்தில் இருந்து, மூன்று வேறு situationsஐ பிரிதிபலிக்கும் விதமாக 3 tracksஐ அளிக்கின்றேன். இவை கண்டிப்பாக உங்களுக்கு திரைப்படத்தை நினைவூட்ட உதவும். அதிலும் ஒரு trackல் வேண்டும் என்றே voiceஐ அகற்றவில்லை. அந்த துப்பு தான் உங்களுக்கு துருப்புச்சீட்டு. அதை வைத்துக்கொண்டு இந்த படத்தை சுலபமாக நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

There are 3 tracks in today’s quiz. Today marks a milestone in that my only SoundCloud account is over. In a way, this also constitutes a logistical challenge🙂

சிறு வயதிலேயே கோயம்புத்தூர் தானம் தியேட்டரில் ரசித்துப் பார்த்த படம் இது. படத்தின் BGMகள் மனதில் பதிந்தவை. இந்த படத்தை சமீபத்தில், சென்ற ஆண்டு தான் DVDயில் மீண்டும் பார்த்தேன். அதற்கு காரணம், படத்தின் கதை, நடிப்பு, என்பதெல்லாம் ஒரு பக்கம் என்றாலும், இசைஞானியின் background score தான் முதல் காரணம். இரண்டாம் காரணம், எங்க ஊர் கோயம்புத்தூரில் முக்கிய காட்சிகள் சில படமாக்கப்பட்டது. விட்டுப்போன சில அந்த கால சங்கதிகளுக்கு பாலமாக இருப்பது, இந்த படத்தில் வரும் சில footage தான்🙂

சரி, நேரடியாக tracksக்குள் போவோம்.

Track 1 – Happier Times

அருமையான சிறு கூட்டில், காதல் நாயகனும் நாயகியும் ஒன்றாக இருந்த வசந்த காலங்களில், இந்த இசை வரும். குறிப்பாக, இந்த இசைத்துணுக்கை நான் முதல் இரவு சீனில் இருந்து எடுத்தேன். நாயகி சொம்புடன் வர இருப்பதை, நாயகன் தவிப்போடும், காதல் வேதனையோடும் காத்திருக்க, இசைஞானி பட்டையைக் கிளப்பும் sequence இது. அவனின் மகிழ்ச்சி சிறிது காலமே ஆனாலும், அதில் வரும் dominant musical theme தான் இது.

Track 2 – Tougher Times – Lost in Retrospection

இது தான் எனக்கு மிகவும் பிடித்த track. இசைஞானியின் புரிதலுக்கும், ரசிக்கும் திறமைக்கும், அதை உணர்ந்து தனது இசையால் கதைக்கு இன்னும் மெருகூட்டும் பக்குவத்துக்கும் இந்த track சான்று. இந்த படத்தின் மொத்த உணர்வையும் இந்த track அட்டகாசமாக ஒரே நிமிடத்தில் கச்சிதமாக சொல்லி முடித்துவிடும். நல்லவனாக இருந்த நாயகனை, நம்பிக்கைதுரோகம் செய்து, ஒரு நாய்கூட்டம் அவனை சிறையில் தள்ளிவிடுகிறது. செய்யாத குற்றத்துக்கு தண்டனையை அனுபவித்துவிட்டு, அவன் விடுதலையாகி வெளியே வருகிறான். அந்த வேதனையின் வலியை, அந்தக் கோபத்தை, அந்த நிராயுதபாணியாய் என்ன செய்வதென்று தெரியாத ஒரு helpless சூழ்நிலையை, வெளியே எட்டிப்பார்க்கும் காலை கதிரவனை, எல்லாம் புதிதாக தோன்றும் இவனின் confused மனநிலையை, இவன் உள்ளே இருந்தபோது மாறியிருக்கும் வெளியுலகின் மாற்றங்களை என்று சகலத்தையும் இந்த இசை trackல் துல்லியமாக காட்டிவிடுகிறாரா இல்லையா என்று நீங்களே உங்களை கேட்டுபார்த்துக்கொள்ளுங்கள். இறுதியில் electric-trainன் இரைச்சலால் நச் என்று முடித்துவிடுகிறார்.

Track 3 – Vengeful Times

இது பட்டையை கிளப்பும் track. இவன் நல்லவனாகவும், உத்தமனாகவும், நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்தபோது, இவன் நம்பியிருந்த கருங்காலிகள் இவனின் அன்பையும், நம்பிக்கையையும் இவனுக்கு எதிராகவும், தவறாகவும் பயன்படுத்தி அவன் வாழ்க்கையையே சீரழித்துவிட்டார்கள். இவன் சும்மா இருப்பானா? பழிக்குப் பழி என்று வேட்டையாட கிளம்பிவிட்டான். இவனையோ காவல்துறை கண்ணி வைத்து பிடிக்க துடியாய் துடிக்கிறது. ஆனால் இவனோ அதற்கெல்லாம் மசிவது போலவே தெரியவில்லை. இவனின் revenge ஒரு பக்கம், இவனை பிடித்தே ஆகவேண்டும் என்று காவல்துறை மறுபக்கம் என்று போக, இந்த particular sequenceல், இவன் கொலைக்கு ஆயத்தமாகின்றான். இந்த படத்தில் வரும் பல adrenalin-pumping sequencesல் இந்த particular musical sequence தான் வரும். இதில் வரும் ஒரு வசன பிட் உங்களுக்கு விடையை கண்டுபிடிக்க உதவும். நன்றாக யோசித்து விடையளியுங்கள். இந்த trackல் வரும் percussion மற்றும் guitar strumming ஆஹா. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த Wind instruments ஆன Trumpetsன் இசை ராஜ்ஜியம் தான் செம. என்ன அருமையான ஒரு track இது. இவனுடன் சேர்ந்து நமக்கும் ஒரு outrage கிளம்பும் அளவுக்கு, அடித்து தூள் கிளப்பும் விதமாக இசை அமைந்துள்ளது சிறப்போ சிறப்பு.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was one of the classic thriller movies of all times in Tamil industry, so much so that the Director’s protege directed the same movie in Hindi. Director’s wife was the Producer of this movie. This movie had a great lineup of legends in casting as well as in the background.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Oru Kaithiyin Diary BGM (ஒரு கைதியின் டைரி ) from Oru Kaithiyin Diary BGM (ஒரு கைதியின் டைரி ) (1984)