Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

இன்றைய பாடல், மிக அருமையானதொரு டூயட். சுலபமாக இருக்கட்டுமே என்று preludeஆகவே தந்துவிட்டேன். சந்தூர் இசையை அப்படியே கல்லாறில் பாயும் ஜில் நீரோடையாக தந்திருப்பார். நீரோடையில சுகமா குளிக்கையில பறவைகள் சலசலக்கும் சத்தம் கேக்குற மாதிரியான ஒரு effectஐ வேற இதுல தந்திருப்பார். இதுல, மெல்லமா ஒவ்வொரு இசைக்கருவியையும் மெருகேத்திகிட்டே வருவதை தயவு செய்து miss செய்துடாதீங்க. 🙂 Please take a look at the Soundcloud comment-markers I have put.

சந்தூரில் இருந்து பறவைகளின் இரைச்சல். அந்த பறவைகளின் இரைச்சலை மிமிக்ரி செய்யும் விதத்தில், படு இயற்கையாய் புல்லாங்குழல். ஆனால் இதற்கு அடுத்து வரும் நொடிகளில் வெறும் சந்தூர் மட்டும் உங்கள் காதுகளுக்கு கேட்டால், நீங்கள் அதிர்ஷ்டசாலி அல்ல. அந்த சந்தூருக்குள் bass-guitar interludesஐ விட்டு ஆட்டி இருப்பதும் உங்கள் காதுகளுக்கு புலப்பட்டால், சிப்பிக்குள் முத்து கண்டெடுத்த சுகத்தை நீங்கள் அடையலாம்.

ஒவ்வொரு stepலும், எப்படி இசைக்கு அழகு ஏற்றிக்கொண்டே வருகிறார் என்று பாருங்கள். Violins வருகிறது. Flutesம் வருகிறது. இதில் அருமையான ஹம்மிங் வேறு நுழைகிறது, அதை Flutes மிமிக் வேறு செய்கிறது. அதை சிறப்பிக்க violins உம் வருகிறது.

Not only instruments and birds – Maestro even uses “silence” to enhance this prelude. Phew! He’s a musical Juggernaut 🙂

இப்படியே ஒரு அருவி எதைப்பற்றியும் கவலைப்படாத மாதிரி ஓடி விழுவது போல இந்த preludeஉம் அழகாக, மிகவும் naturalஆக, எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் போகிறது.

இதை எப்படி compose செஞ்சீங்க ராஜா ன்னு கேட்டா, அவர் தானா வந்தது ம்பார்.

ஏற்கெனவே உடம்பு சரியில்ல. இதுல இவர் இப்படி அநியாயத்துக்கு போட்டுக்குடுத்துட்டு போயிருக்கிற ட்யூன்ஸ இப்படி நுணுக்கமா பாக்க ஆரம்பிச்சா கொஞ்சம் நஞ்சம் போன ஜுரம் கூட ஓடி வந்து உக்காந்துக்கும் போல இருக்கு.

கணிதமேதை ராமனுஜன், பல கணித theoriesஐ முன் வைத்தபோது, நிறைய பேருக்கு புரியவே இல்லை. அதுவும் அவர் வேறு, “எனக்கு கணிதம் எல்லாம் அம்மன் கனவில் வழங்கியது. நானா யோசிக்கல…தானா வந்து விழுந்துச்சு”ன்னு சொல்ல சொல்ல, மேற்கத்திய கணிதமேதைகள் எல்லாம் கொஞ்சம் நடுநடுங்கியும் போனார்கள். அவர் கொஞ்சம் அரை லூசு என்றும் eccentric என்றும் நினைத்தார்கள். My alma mater University of Florida has a very strong following for Ramanujan Mathematics at Gainesville, Florida. Recently, these American Scientists solved what is known as Ramanujan’s Deathbed Puzzle, almost a century after his demise. அதாவது, எனக்கு யோசிக்க எல்லாம் முடியாது….தானா வந்தது….தானா விழுந்தது ன்னு சொன்னார் இந்த ஞானி! அதை புரிந்துகொண்டு, சரி தான், ராமனுஜன் சொன்னது சரி தான் என்று சொல்ல, உலக கணித மேதைகளுக்கு ஒரு நூற்றாண்டு கால அவகாசம் தேவைபட்டிருக்கு. Please check it out here: American mathematicians solve Ramanujan’s “deathbed” puzzle

நான் எங்க போறேன்னு யூகிச்சிருப்பீங்க. கணிதமேதை ராமனுஜன் மாதிரியே தான் நம்ம இசைஞானி இளையராஜாவும் அவருடைய compositions பத்தி சாதாரணமா சொல்லும்போது, நிறைய பேர் அவர கிண்டல் கூட பண்றாங்க.

ஆனா பாருங்க…இந்த மனுஷன் இப்படி எல்லாம் எங்கயா உக்காந்து compose செஞ்சார்னு புரிந்துகொள்ளக்கூடிய ஒரு புரிதல் வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

அதுவும் University of Florida or University of Georgiaனு வந்தா தான், நம்ம ஆளுக ஒத்துக்குவாங்கன்னு நெனைக்கறேன். ஏன்னா, அவர் Symphony அல்லது Oratorio போட்ட காரணத்துக்காக மட்டும் genius இல்லீங்க. இன்றைய prelude மாதிரி கணக்கிலடங்கா மண்ணின் மகத்துவங்களை, இசை தத்துவங்களாக நமக்கு தந்துவிட்டு ஒன்றும் அறியாத அப்பாவி மாதிரி இருக்காரு பாருங்க, அங்க தான் நம்ம genius நிற்கிறார்!

Maestro Ilaiyaraaja

வாழ்க நீ எம்மான்!

Have a nice weekend 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie will have “flowers” in it while the hero of this song was known for emoting well with microphone in his hands 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaviriye Kaviriye Kaadhali (காவிரியே காவிரியே காதலி போல்) from Archanaipookal (அர்ச்சனைப்பூக்கள்) (1982)

Advertisements