Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2013ஆம் ஆண்டு, உங்கள் வீடுகளில் சிறந்து விளங்கவேண்டி நெஞ்சார வாழ்த்துகிறேன். #365RajaQuizல் பங்கெடுத்து இசைஞானியின் இசைக் குடும்பத்தில் இணைந்தமைக்காகவும் உளமார்ந்த நன்றி 🙂

Wish you all a Happy New Year 2013! Thanks for being a part of #365RajaQuiz!

இந்த நாளில் யாரும் ஏமாறக்கூடாது என்று இந்த பாடலை கொடுத்திருக்கிறேன். பாடல் என்னமோ எல்லாரும் கேட்டிருக்கலாம். ஆனால், இங்கே நான் தந்துள்ள version வெகு சிலர் மட்டும் கேட்டிருக்கலாம். தயவு செய்து பின்னூட்டத்தில் இதைப் பற்றி சொல்லுங்களேன், please. I want to gauge and assess these nitty-gritty details. Thanks. 🙂

முதன் முதலில் வெளியிடப்பட்ட LP Discsல் மட்டும், இசைஞானியின் இந்த அற்புத பாடலின் track இசை இருந்தது. பின்னர் வந்த எந்த ஒலித்தட்டுகளிலும் சரி, வேறு எதிலும் இதை காணவே முடியவில்லை. இதை நான் Coimbatore Royal Electronicsல் பதிவு செய்ய சென்றபோது, இப்படி ஒரு track இல்லையே என்று ஒரு புது பணியாளர் சொல்ல, நானோ, நீங்க அந்த LPய கொண்டு வாங்க, நான் காட்டறேன் என்று பிடிவாதம் பிடித்து பதிவு செய்தேன். முழு trackஉம் என்னிடம் வேறு எங்கோ சிக்கிக்கொண்டிருக்க, மெனக்கெட்டு ஒரு 2 மணி நேர தேடலுக்குப் பின், இந்த சிறு பகுதி கிடைத்தது. அதில், நான் விரும்பிய சங்கதி இருந்தது.

If there is an online version of this track, please posit that in the feedback. Thanks in advance 🙂

சிறு வயதில் யாருக்கு தெரியும் bass guitar எல்லாம்! என்னுடைய அடுத்த வீட்டு அண்ணாவிடம் வெறும் fillerஆக இந்த இசை துணுக்கு, ஒரு cassetteல் இருந்தது. அப்படியே கேட்டவுடன் என்னை மறந்து உட்கார்ந்தேவிட்டேன்.

Even today, this song is the New Year RaajANTHEM, என்று எல்லாரும் ஒத்துக்கொள்வார்கள். இந்த பாடலை வெல்ல ராஜாவே 2000ல் முயன்றும், அவரால் முடியவில்லை. அந்த மாதிரியான செம பாட்டு இது!

ஆக இப்படியான ஒரு தர்ம ஹிட் பாடல், வெளிவந்த நாள் முதலாக இன்று வரை சக்கைபோடு போடும் பாடலை, மெய்மறந்து ரசிக்க காரணமாக எனக்கு இருந்தது, இந்த track version தான். இதில் வார்த்தைகள் இல்லை. SPBயின் அட்டகாசமான rendition இல்லை. ஆனால், எனக்கு வேண்டிய Bass Guitar interludes, எந்த வித disturbancesஉம் இல்லாமல், உள்ளது உள்ளபடியே இருப்பது தான் ஸ்பெஷல். நிறைய தடவை, நண்பர்களிடம், நீங்க இந்த இடத்துல இந்த bass guitarsஐ கவனியுங்களேன் என்று சொன்னால், எங்கே? என்று தான் பரிதாபமாக அவர்கள் கேட்டு பார்த்து இருக்கிறேன். இசைஞானியின் அதி அற்புதமான bass guitar திறமை வெளிப்படாத பாடல்கள் எது என்று சொல்வது வேண்டுமானால் சுலபமே தவிர, அதை அவர் உபயோகப்படுத்திய பாடல்கள் எது என்று பட்டியல் போட ஆரம்பித்தால், அது முடியாத காரியம்.

இங்கே பாருங்கள் — பல்லவியை கேளுங்கள். நிறைய தடவை repeat போட்டு கேளுங்கள். அதன் பிறகு நண்பர்கள் யாரேனும் guitarist இருந்தால், அதை வாசிக்கச் சொல்லி கேளுங்கள். பிறகு பாருங்கள் தமாஷை!

இந்த bass guitars செய்யும் மாயம் தான் என்ன! பாடலின் வரிகள் வரும்போது கூட, filter செய்து இந்த மாதிரியான bass guitar interludes கேட்கும் ரசனை இருந்ததால் தான், விளையாட்டாக ஆரம்பித்த encoding, 1998ல் இருந்து 2000 வரை ஒரு ரவுண்டு வர வைத்தது. ஒவ்வொரு முறையும் recording/encoding செய்த போது, நான் நினைத்தது என்னவென்றால், அட, இந்த மாதிரி bass-guitar interludesக்கு எல்லாம், ஏன் இந்த மனுஷன் இவ்வளவு மெனக்கெட்டிருக்கார்? அந்த காலத்துல FM கூட இல்லையே. வெறும் transistor and Diode Radiosல கேக்கற மக்கள் நிறைந்த uneconomical marketக்கு இவர் ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்து இப்படி அள்ளி விட்டிருக்கார்? என்பது தான். அதிகம் encoding செய்ய செய்ய, என்னுடை subwoofers உறும உறும தான் ஒரு விஷயம் புரிந்தது: Raaja was only bothered about infusing his soul into his creation…his music. He never approached his music with his mind, but, with his heart. This very same point, he broached in his program on December 23, 2012 at Coimbatore, India.

நண்பர்களே, மீண்டும் சொல்கிறேன். இசைஞானியின் இசையை ரசிக்க வெறும் downloadsஉம் iTunesஉம் போதவே போதாது. அவருடைய oeuvreஐ முழுக்க ரசிக்க வேண்டுமென்றால், அவரின் LPகளுக்கும், Cassetteகளுக்கும் போகவேண்டும். சில CDs, converted well from LPs – for example, அந்த ஒரு நிமிடம் – are excellent too. In a nutshell, enjoying Ilaiyaraaja’s works in a good acoustic / audio setup will show you an entirely different Raaja that you may have not experienced thus far. Give it a shot in 2013 to do just that 🙂

ஆக, மேலோட்டமாக இசைஞானியின் பாடல்களை கேட்பவர்களுக்கு இந்த track version முழுக்க முழுக்க ஒரு புது அனுபவமாக இருக்கலாம். கேட்டுவிட்டு நீங்களே சொல்லுங்கள்.

அதே போல், சரணத்தில், எவ்வளவு அழகாக, மெலிதாக violinsஐ அவிழ்த்துவிட்டிருப்பார் பாருங்கள். ஆக, trumpets (my favorite ;)), percussion, lead and bass guitars என்று இந்த பிரம்மாண்ட படைப்பு காலத்தால் அழியாதது.

இந்த வருடத்தின் தொடக்கத்தை, தெரிந்த பாடலை, தெரியாத கண்ணோட்டத்தில் ஆரம்பிப்பத்தில் #365RajaQuiz உவகை அடைகிறது. 🙂

Enjoy Ilaiyaraaja music, 365 days of the year, for all the years to come. New Year greetings, once again 🙂

All said and done, I can only imagine, how the situation would have been at the recording theater for this one: ELECTRIFYING. Right?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Art Director Salam had taken extreme risks in convincing the Producer, that he can convert a “Darbar” set that was originally there for a Kannada film, to this 5-Star hotel set for this song. Dance Master for this song was Puliyur Saroja!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ilamai Itho Itho (Instrumental) (இளமை இதோ இதோ (இசை) ) from Sakalakala Vallavan (சகலகலா வல்லவன் ) (1982)

Advertisements