Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே. Tagging செய்வதிலும், சென்ற மூன்று க்ளூக்களின் பதில்களை பிரசுரிப்பதிலும் சிறு தாமதம் இருப்பதை உணர்வேன். இன்று கோவையில் இருந்து கிளம்புகிறேன். பயண ஆயத்தங்களில் படு பிசியாக உள்ளதால், tagging உடனுக்குடன் செய்ய முடியாத நிலை. தயவு கூர்ந்து மன்னிக்கவும்.

ஊருக்கு வரும்போது இருக்கும் மகிழ்ச்சி, செல்லும்போது வருவதே இல்லை. இது எப்பவும் நடப்பது தான். நாளை காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து tagging செய்துவிடுகிறேன். ஆனால், நாளை துபாய் மற்றும் நாளை மறுநாள் அட்லாண்டா என்று பயணம் செமையாக உள்ளதால், I will be out of pocket for the next 2 days. Please bear with me.

திரும்பவேண்டிய நாள். நீண்டதூர பயணத்துக்கு தயார் ஆகிக்கொண்டே இருக்கிறேன். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், போல இந்தியாவுக்கு அருகே இருந்திருக்கக்கூடாதா என்று எல்லாரையும் போல யோசிக்கும் ஆட்களில் ஒருவன் தான் நானும் ;))

நிறைய ஆட்களை சந்தித்த, தொலைபேசியில் உரையாடிய மகிழ்ச்சியுடன் சென்றாலும், சொந்தங்களை விட்டுவிட்டு செல்லும் மென்சோகம் ஆட்கொள்ளத்தான் செய்கிறது. அதை ஆற்றும் வல்லமை நம் இசைஞானியின் பாடல்களுக்கு என்றுமே உண்டு🙂

இந்த பாடலின் வரிகள் அருமையிலும் அருமை. பாடலை கண்டுபிடிக்கும் விதமாக lifeline clue கொடுத்திருக்கிறேன். மேலும், இந்த வீணை prelude with flute இசை, பாடலை கண்டுபிடிக்க மிகவும் உதவும். தன் மகளை நேசிக்கும் ஒரு தகப்பன், அவளை வாழ்த்திப் பாடும் பாடல் தான் இது. ஏற்கனவே, “மந்திரப்புன்னகை”யில் நாம் பார்த்தது தான். 🙂

இன்றைய பாடலை வேறு ஒரு காரணத்துக்காக, 1 மாதத்திற்கு முன் schedule செய்தேன். என்ன ஒரு irony பாருங்கள், டில்லி கற்பழிப்பில் உயிரிழந்த அந்த 23-வயது கல்லூரி மாணவி — அவள் தந்தைக்கு மட்டும் மகளாக இல்லாமல், இந்தியாவுக்கே ஒரு மகளாக, அடையாளச் சின்னமாக, அல்ப ஆயுசில் போன நாளில், இந்த க்ளூ LIVE ஆகிறது. என்ன கொடுமை!

இறைவா….!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

In this awesome melody, a widower sings for his daughter, saying, she provides a meaning to his life. Actress Gauthami comes in flashback sequences, in this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Enthan Vaazhkayin (எந்தன் வாழ்க்கையின்) from Chinna Kannamma (சின்ன கண்ணம்மா) (1993)