Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். Wish you a Merry Christmas.

Merry Christmas

வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பதால், இணையத்தில் அதிகம் இல்லை.

இன்றைய புதிர், கிறிஸ்துமஸ் சிறப்பு புதிர் மட்டுமல்ல. தேவனின் கிருபையில் இது 150வதும் கூட.

We are joyful today at #365RajaQuiz because this 150th milestone is falling on a Christmas day.

சிறு தாமதத்துக்கு மன்னிக்கவும். ஒரு அரை மணி நேரத்துக்கு SoundCloud தளம் downஆக இருந்தது.

கிறிஸ்து மழலையாக பிறந்த இந்த நாளில், ஒரு குழந்தையின் பாடலை பொறுக்கி தருவதில் உள்ள சுகமும், மன நிம்மதியும் அலாதி 🙂

இன்றைய கிறிஸ்துமஸ் புதிர் பாடல் பற்றி நிறைய பேர் யூகித்து இருப்பீர்கள். Usually, I have gained notoriety in this Quiz that I may be unpredictable with the clues at times 😉 இன்று எப்படி என்று சொல்லுங்கள். இந்த பாடல் வரலாம் என்று நினைத்தவர்கள், தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

மற்ற படி, வெள்ளை ரோஜாவை ஏந்தி, அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் வரும் மலேசியா வாசுதேவன் அண்ணன் பாடல் போடுவேன் என்று நினைத்தீர்கள் என்றால், sorry ங்க…அந்த அளவுக்கு predictable ஆகிட்டா, இது Quiz இல்ல…இது டீக்கடன்னு சொல்லிடுவாங்க, இல்லையா? அதான், இன்னிக்கு இது வருது.

இந்த பாடலின் அருமையை கேட்க கேட்க தான் புரியும். This song has prelude, interludes and postlude too. இது இசைஞானி இளையராஜாவின் கிளாசிக் பாடல்களில் ஒன்று. இதை விவரிக்க வார்த்தைகள் போதாது. ஆரம்பத்தில் இருந்தே Guitar Stringsன் ஆளுமையும், சுருதியை மீட்டும் வீணையும் வந்து கொண்டே இருக்கும்.

பாடலின் வரிகள் யாரப்பா? கவிஞர் கண்ணதாசனா? பஞ்சு அருணாசலமா? கங்கை அமரனா? அருமையான வரிகள்.

பாடலை பாடியவர்கள் புதிய talent. அவருடைய ஆரம்பகால ட்ரூப்பில் இருந்தவர்கள். பின்னர் கோரஸில் மட்டும் வந்தவர்கள் என்று கேள்விப்பட்டேன். கங்கை அமரன், அவருடைய படங்களில் இவர்களை உபயோகப்படுத்தியதுண்டு. ஆரம்பகால இசைஞானியின் non-film ஆல்பங்களில், இவர்கள் பாடியதுண்டு..மேடை நிகழ்ச்சிகளிலும் என்றே நினைக்கிறேன். You are forewarned that, this song கேட்க BS சசிரேகாவின் குரலாக இருந்தாலும், அது அவர் அல்ல. 🙂

Sorry, I cannot spell out their names, as it will be a total giveaway 🙂

அதே போல, இந்த interludeல் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் இந்த மின்மினிக்கு கண்ணில் பாடல் interlude புதைந்திருப்பது போல தெரியலாம்.

இந்த பாடலை நான் இது வரை பார்த்ததில்லை. இன்று இந்த clueவுக்காக தேடி பிடித்து பார்த்தேன். I got what I expected. 🙂

ஆரம்பமே, குழந்தைகள் ஒரு இசைக்கருவியைக் காட்டி, இது என்ன? என்று கேட்க, அதற்கு பாடலை பாட வரும் நாயகிகளில் ஒருத்தி, இது Guitar என்று சொல்லி, அதை strum செய்ய ஆரம்பிக்கிறாள். இப்படியாக ஆரம்பமாகிறது இந்த பாடல்.

There may be a duet version of this song, but, the clue I have given here is NOT the duet version.

இசைஞானியின் இசை ஞானத்தை இன்றைய தலைமுறையினரும் நன்கு பாராட்ட ஏதுவாக இந்த க்ளூவை select செய்து இருக்கிறேன். காரணம் இதோ: நான் சொன்னது போல, அந்த சுருதி மீட்டும் வீணையோடு, மாதா கோயில் மணியோசை (tintinnabulation of the church-bells, mingled together with the Sruthilaya Veena) இணைந்து வருவது போல இருப்பதற்கு, கதையின் கரு ஒரு முக்கிய காரணம். ஒரு இந்து குடும்பத்தில் ஒரு கிறித்துவ பெண்மணி இந்த பாடலை பாடுவதாக கதைக்களம் என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள்…Is it not apt? In other words, Maestro Ilaiyaraaja is extremely talented in his own way, in that he just does not compose melodic tunes, but, he is doing an artful storytelling with his music, after digesting the situation. This is the reason, why, as he recently said in his interview in The Hindu, people remember his songs even though they may not have seen the songs.

I vouch for that 100% as I have NOT seen the song until today.

இந்த படத்தில் மலேசியா வாசுதேவன் அண்ணன் பாடிய பாடல், இலங்கை வானொலியினால் அதி பயங்கரப் புகழ் பெற்றது என்றால்,அது மிகையாகாது. அதே போல, இன்னொரு மாபெரும் legend பாடிய ஒரு இந்தி பாடல் வரிகள் கொண்ட பாடலும், இந்த படத்தின் uniquenessக்கு ஒரு subtle hint.

சுருங்கச் சொன்னால், எல்லா பாடல்களும் செம ஹிட், இந்த படத்தில். இந்த பாடலின் குறியீடுகளை SoundCloudல் குறித்துள்ளேன். பார்த்து பின்னூட்டங்களில் நீங்களும் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

Once again, Merry Christmas to all of you. May peace and joy be yours. Thank you very much for being part of my life. I love all of you.

Peace!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actress Srividya had a pivotal character in this movie from Panju Arunachalam productions.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Devan Thiruchabai Malargale (தேவன் திருச்சபை மலர்களே) from Avar Enakke Sontham (அவர் எனக்கே சொந்தம்) (1977)

Advertisements